எதிர் கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவை படுகொலை செய்வதற்கு அரசாங்கம் தயாராகி வருவதை அமைச்சர் டலள் அழகப்பெரும உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் சரத் பொன்சேகாவை படுகொலை செய்வதற்கும் அதனை விடுதலைப்புலிகளே மேற்கொண்டதாக பரப்புரைப்பதற்கும் ஸ்ரீலங்கா அரசாங்கம் தயாராகி வருவது தெரியவந்துள்ளது.
இதேவேளை தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படடால் அதற்கான முழமைப் பொறிப்பினையும் அரசாங்கமும் மகிந்த ராஜபக்சவுமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சரத் பொன்சேகா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment