கண்ணீர் மட்டுமல்ல... நம் நெஞ்சை பதற வைத்த இந்தத் தொலைபேசிக் கதறலில் தற்கொலைத் துடிப்பும் கலந்திருந்தது.
""இனி உயிரோட இருக்கக் கூடாதுனு ரெண்டுவாரம் முன்னயே நானும் என் மனைவியும் முடிவு பண்ணிட்டோம். பசங்க ரெண்டு பேரையும் என்ன பண்றது? அந்தக் குழப்பத்திலதான் டிலே பண்ணிட்டோம். இந்த வாரம் நக்கீரன்ல "மனித உருவில் மிருகம்' செய்தியைப் படிச்சோம். பெத்த மகளையே நாசம் செய்து கொண்டிருந்த அந்த மிருகத்தை எதிர்த்துப் போராடி தண்டனைக்கு ஆளாக்கிய கௌசல்யாவின் மன உறுதியை படிச்ச பிறகுதான்... இந்த பாவிகளை எதிர்த்து போராடணும்கிற உறுதி கொஞ்சம் வந்திருக்கு... ஆனாலும் தற்கொலை எண்ணம் இன்னும் இருக்கு...!'' -விம்மினார் வீரபுத்திரன்.""நேரில் வருகிறோம்!'' முகவரியை கேட்டோம். விரைந்தோம்.சென்னை திருவேற் காட்டிலிருந்து ஆவடி செல்லும் சாலையில் உள் வாங்கிய பரிசுத்தமான ஒரு பட்டிக்காடு. செங்கல் சூளை களுக்கு நடுவில் வெக்கை படிந்து நின்ற அந்த "சுந்தர சோழபுரம்' கிராமத்தில் ஏரிக்கரைத் தெருவில், செங்கல் சூளை அதிபர் சீனிவாசன் வீட்டில் குடியிருக்கிறார் வீரபுத்திரன்.""நான், என் மனைவி பாக்கியலெட்சுமி, ரெண்டு பையன்கள்... எப்போதும் பினாத்திக் கொண்டிருக்கும் நடக்க முடியாத என் விதவைத் தாய்... இதுதான் என் குடும்பம். பிழைப்புக்காக கோவில்பட்டியில் இருந்து 2 வருடம் முன்பு சென்னைக்கு வந்து மதுரவாயலில் குடியிருந் தேன். 5 மாதம் முன்னால இங்கே வந்தோம்.இந்த ஹவுஸ் ஓனர் சீனிவாசன் இந்த ஏரியாவில முக்கியமான ஆளு... போலீஸ் ஸ்டேஷனே இவர் கண்ட்ரோல்ல தான் இருக்கு...! எந்தப் பொம்பளையைப் பார்த்தாலும் ரெட்டை அர்த்தத்தில கேலியும் கிண்டலுமா பேசுவார் சீனிவாசன்... வயசானவர்... நமக்கென்னனு பேசாம இருந்துட்டேன். எப்பவாச்சும் நான் குடிப்பேன்... 9.9.09 அன்னக்கி கொஞ்சம் கூடவே குடிச்சிட்டேன். மொட்டை மாடிக்கு போய் தூங்கிட்டேன். என் ஒய்ப் கௌசல்யா வந்து எழுப்பிப் பார்த்திருக்கா... நான் எந்திரிக்கலை... கிடக்கட்டும்னு கீழே இறங்கி... வீட்டுக்குள்ள போயிருக்கிறாள்... கௌசல்யாட்டயே கேளுங்களேன்!'' மனைவியைக் காட்டினார் வீரபுத்திரன்.""சொல்லுங்கம்மா...!'' என்றோம்.""அந்த சீனிவாசன்... எங்க கிச்சன்ல இருட்ல உட்கார்ந்திருந்தான். எனக்குத் தெரியலை. திடீர்னு பின்னால வந்து கட்டிப் புடிச்சான் திமிர்னேன்... சுவர்ல என் தலை மோதி மயங் கிட்டேன். என்னைத் தூக்கிட்டு அவன் வீட்டுக்கு கொண்டு போய் போட்டு என்னைச் சீரழிக்கும் போதுதான் சுயநினைவு வந்தது. அலறுனேன்... அவன் பொண் டாட்டி மாரியம்மாளும் என் மகன்களும் ஓடிவந்தாங்க... அப்பத் தான் என்னை விட்டுட்டு அவன் போனான். மாரியம்மா என் கால்ல விழுந்து கெஞ்சுச்சு. யார்ட்டயும் சொல்லாதே... ரொம்ப அசிங்கம்னு அழுதுச்சு.ஒருவாரம் கழிச்சு மறுபடியும்... கட்டிப் புரண்டேன்... முடியலை... என் சேலையை உருவி என் காலையும் கையை யும் கட்டினான். கதறினேன். வாயில துணியை வைத்து அடைச்சான். சிகரெட்டால என் உடம்பெல்லாம் சுட்டான். கெடுத்தான். அப்பத்தான் பக்கத்து காயலாங்கடை பையன் ஓடிவந்து பார்த்தது. அவனையும் மிரட்டி அனுப்பினான்.28-ஆம் தேதி மூணாவது தடவையா அதே கொடுமை. அப்புறம்தான் சாக முடிவு செஞ்சேன். இவர் என்னை சமாதானப்படுத்தினார் 7.10.09 அன்னைக்கு, திருவேற்காடு போலீஸ் ஸ்டேஷன்ல போய் இன்ஸ்பெக்டர் துரைராஜ்ட்ட சொன்னோம். புகாரும் எழுதிக் கொடுத்தோம். வழக்குப் பதிவு பண்ணாம... சீனிவாசன்ட்ட சொல்லிவிட்டார் இன்ஸ்பெக்டர்.தினமும் போலீஸ் ஸ்டே ஷனுக்கு அலைஞ்சோம். சீனி வாசன், அவர் நண்பர்கள் சேகர், பழனித்தேவர், அவங்க ஆளுங்க ஸ்டேஷன் இருந்து வீடு வரை எங்களை கேவலப்படுத்தி டார்ச்சர் செய்வாங்க... அப்புறம் கமிஷனர் ஜாங்கிட் சார்ட்ட புகார் கொடுத் தோம். அந்தப் புகாரும் இன்ஸ்பெக்டர் கைக்கு வந்திருச்சு... எந்த நிமிஷம் இந்தக் கும்பல் எங்களை கொலை செய்யும்னு தெரியலை... அப்புறம்தான் தற்கொலை முடிவுக்கு வந்தோம். நக்கீரன்ல கௌசல்யா கொடுமையை படிச் சிட்டு உங்களுக்குப் போன் செய்தோம்... எங்களை சீரழிச்சு... தற்கொலைக்கு தூண்டுன... இவருக்கு தண் டனை வாங்கிக் குடுக்க ணும்...!''.அவர்களுக்கு ஆறுதல் கூறி, மனதிற்கு துணிவூட்டிவிட்டு, திருவேற்காடு காவல்நிலையம் சென்றோம். ""ஆமா அந்தப் பொண்ணு அடிக்கடி வந்தது. சீனிவாசன் மேல புகார் சொல்லுது. நம்ப முடியலையே... ஒண்ணு செய்யலாம்... நான் வேணும்னா எஃப்.ஐ.ஆர். போடட்டுங்களா?'' சிரிக்காமல் சீரியஸாகவே கேட்டார் இன்ஸ்பெக்டர் துரைராஜ்.நாம் அந்தக் காவல் நிலையத்தில் இருந்தபோதே அங்கு வந்தார் செங்கல் சூளை சீனிவாசன். அவரிடமே பாக்கியலட்சுமியின் கதறல் புகார்கள் பற்றிக் கேட்டோம்.""அவளோட மகன் என் கடையில 500 ரூபாயை திருடிட்டான். அதைக் கேட்டேன்... வீட்டைக் காலி பண்ணச் சொன்னேன். உடனே அபாண்டமா சொல்ல ஆரம்பிச்சிட்டாள்!'' இன்ஸ்பெக்டரை பார்த்துச் சிரித்தபடி சொன்னார் சீனிவாசன்.ஏரிக்கரை தெரு மக்களோ, ""இந்தக் கொடூரத்தை மறைப்பதற்காக இதுவரை ஒரு லட்சத்துக்கு மேல் ஸ்டேஷனுக்கு கப்பம் கட்டி இருப்பார் செங்கல்சூளை!'' என்கிறார்கள்.
No comments:
Post a Comment