நடிகை நவ்யா நாயருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. மணமகன் பெயர், சந்தோஷ் மேனன். கேரள மாநிலம் சங்கனாச்சேரியில் உள்ள பெருனையை சேர்ந்த நாராயண மேனன்-சாந்தா மேனன் தம்பதிகளின் மகன். இவர், மும்பையில் உள்ள ஸ்ரீசக்ரா உத்யோக் என்ற நிறுவனத்தில், `மார்க்கெட்டிங்' அதிகாரியாக இருக்கிறார்.
நவ்யா நாயர்-சந்தோஷ் மேனன் திருமணம், கேரள மாநிலம் ஹரிப்பாடு என்ற இடத்தில், ஜனவரி மாதம் நடக்கிறது. திருமண தேதி இன்னும் முடிவாகவில்லை.
நவ்யா நாயர், `இஷ்டம்' என்ற மலையாள படம் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். இவரை அறிமுகம் செய்தவர், டைரக்டர் சிபிமலையில். தமிழில், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, அழகிய தீயே, மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை உள்பட பல படங்களில் நடித்தார்.
திருமணத்துக்குப்பின் தொடர்ந்து நடிப்பதா, வேண்டாமா? என்பதை அவர் இன்னும் முடிவு செய்யவில்லை. என்றாலும், தன் சம்பந்தப்பட்ட படங்களின் படப்பிடிப்பை முடித்துக்கொள்ளும்படி, பட அதிபர்களுக்கு நவ்யா நாயர் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.
No comments:
Post a Comment