""ஹலோ தலைவரே... போன ஞாயிற்றுக்கிழமையன்னைக்கு காலையில் சினிமா டைரக்டரும் காங்கிரஸ்காரருமான முக்தாசீனிவாசனுக்கு 80-வது பிறந்தநாள். இதில் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசிய கலைஞர், தி.மு.க-காங்கிரஸ் கூட் டணியின் முக்கியத்துவத்தைச் சொல்லி, இந்தக் கூட்டணி வலுவாக இருந்தால் இந்தியாவே வலுவாக இருக்கும்னு சொன்னார்.''
""அதே நாள் மதியம் ஒண்ணரை மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதைக் கேட்டியா?''
""கேட்டேங்க தலைவரே... ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் பக்கத்தில் இருக்கும் கூகளூர் பேரூராட்சி யின் காங்கிரஸ் சேர்மன் சுப்ரமணியின் பதவியை நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு காலி செய்தது போன்ற சம்பவம் மற்ற பகுதிகளிலும் தொடரு மானால் சென்னை கோட்டையிலும் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும்னு இளங்கோவன் எச்சரிக்கை குரலில் பேசினாரு. இதிலே என்ன உண்மைன்னா, கூகளூர் பேரூராட்சியில் மொத்தம் 15 உறுப்பினர் கள். அதில் 12 பேர் சேர்மன் மேலே நம்பிக்கை இல்லைன்னு ஓட்டுப் போட்டிருக்காங்க. 15 பேரில் 6 பேர் தி.மு.க.காரங்க. 3 பேர் காங்கிரஸ்காரங்க. சொந்தக்கட்சிக்காரரில் ஒருத்தரே வாக்களிக்க வரலை.''
""ஏற்கனவே வாழப்பாடியார் நினைவு நாளில் இப்படித்தான் காரசாரமா பேசி பரபரப்பை கிளப்பினார் இளங்கோவன். குலாம்நபி ஆசாத் சென்னைக்கு வந்தப்ப இது பற்றி கலைஞர் பேசியதையும் நாம சொல்லியிருந்தோம். அதன்பிறகும் பரபரப்பு தொடருதே..''
""இளங்கோவனிடம் காங்கிரஸ்காரர்கள் சிலர் இதுபற்றி கேட்டப்ப, நானாக எதுவும் பேசலை. ராகுல்காந்தி என்ன நினைக்கிறாரோ அதைத்தான் பேசுறேன். தென்மாநிலங்களில் ஆந்திராவில் காங்கிரஸ் ஆட்சி. கேரளாவில் காங்கிரஸ் மறுபடியும் வலுவடைந்து வருவதால் அங்கே அடுத்த ஆட்சி நம்ம ஆட்சிதான். கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சியிலிருந்தாலும் காங்கிரஸ்தான் பவர்ஃபுல் கட்சி. தமிழ்நாட்டில் மட்டும்தான் காங்கிரஸ் ஆட்சிக்கு வரமுடியாமல் இருக்குது. அதே நேரத்தில், இங்கே நம்ம ஆதரவில்லாமல் தி.மு.க ஆட்சி இல்லை. இதைப் பயன்படுத்தி, சட்டமன்றத் தேர்தலில் ஒரு புதுக் கணக்கு போட்டிருக்கிறார் ராகுல்னு சொல்றாராம் இளங்கோவன்.''
""சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரசுக்கு 50% சீட் ஒதுக்கணும். அதாவது மொத்த முள்ள 234 தொகுதிகளில் 117 சீட் காங்கிரசுக்கு. ஆட்சிக்கு வந்ததும் துணை முதல்வர் பதவியும் காங்கிரசுக்கு. இதுதான் ராகுலின் கணக்கு. இதை தெரிஞ்சுக்கிட்டுத்தான் நான் பேசுறேன்னு காங்கிரஸ்காரர்களிடம் சொல்லும் இளங்கோவன், நானே கூட சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்து துணை முதல்வராகலாம். ராகுலின் கணக்கை தி.மு.க ஓ.கே. பண்ணணும்ங்கிறதுக் காகத்தான் ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பான சி.பி.ஐ. ரெய்டெல்லாம் வேகமெடுத்ததுன்னும் சொல்றாராம்.''""ஏற்கனவே இளங்கோவன் பேசியது சம்பந்தமா கோவையில் கலைஞர்கிட்டே பத்திரிகையாளர்கள் கேட்டப்ப, இதுபோன்ற உளறல்களுக்கெல்லாம் பதில் சொல்ல மாட்டேன்னு சொன்னார். தி.மு.க தரப்பிலோ, கூட்டணி-சீட்டு பற்றியெல்லாம் சோனியா மேடமும் தலைவரும்தான் முடிவு பண்ணுவாங்க. அப்ப பார்த்துக்கலாம்னு சொல்றாங்க. அதேநேரத்தில், காங்கிரசிலேயே ஒரு தரப்போ.... கலைஞரும் ராகுலும் ஒரே மேடையில் ஏறப்போவதாகவும் அப்பதான் கூட்டணி உறவின் பலம் தெரியும்னும் சொல்லுது.''
""ஆமாங்க தலைவரே... சென்னை ஸ்பென்சர் காம்ப்ளக்ஸ் பக்கத்தில் இந்திராகாந்தி சிலை வைப்பதற்காக மூப்பனார் காலத்திலேயே ஏசய்யாங்கிற வக்கீல் அனுமதி வாங்கியிருந்தார். பீடமும் கட்டப்பட்டுவிட்டது. சிலையும் செஞ்சிட்டாங்க. ஆனா, அதை இன்னும் பீடத்தில் நிறுத்தி திறந்துவைக்காமல் காலங்கடந்துகொண்டே இருந்தது. இப்ப ஜி.கே.வாசன் முயற்சியில் அந்த இடத்தில் சிலை வைக்க ஏற்பாடாகியிருக்குது. இந்த சிலை திறப்பு விழாவில்தான் கலைஞர் தலைமையில், தன் பாட்டி சிலையை ராகுல் திறந்துவைக்கவிருக்கிறார். விழாவுக்கு சோனியா வருவதைவிட ராகுல் வருவது தமிழக காங்கிரசுக்கு பலன் தரும்னு வாசன் முடிவெடுத்து, இந்த ஏற்பாட்டை செய்திருக்காராம். கலைஞரும் ராகுலும் மேடையேறப் போகும் இந்த விழா அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்குது.''
""லஞ்சம் வாங்குற அரசு ஊழியர்களை அதிரடி ரெய்டு மூலமா பிடிச்சிக்கிட்டிருந்தாரு விஜிலென்ஸ் ஏ.டி.ஜி.பி ராமானுஜம். இதனால, அரசு அதிகாரிகள் பலரும் லஞ்சத்தை நேரில் வாங்காம, அந்தக் கடையில கொடுத்திடுங்க. இந்த ஓட்டல்ல கொடுத்துட்டுப் போயிடுங்கன்னு சொல் லிக்கிட்டிருந்தாங்க. இந்த ரெய்டுகள் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருந்த நிலையில், ஏ.டி.ஜி.பி ராமானுஜம் விஜிலென்சிலிருந்து குற்ற ஆவணக் காப்பகத்துக்கு.
மாற்றப்பட்டிருக்கிறாரே, என்ன பின்னணி?''
""விஜிலென்ஸ் டிபார்ட்மென்ட்டுக்கு டி.ஜி.பி.தான் ஹெட்டா இருப்பார். ராமானுஜம் ஏ.டி.ஜி.பி.ன்னாலும் அவர் தலைமையிலேயே பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. சமீபத்தில், விஜிலென்சுக்கு பழைய வழக்கம்போலவே டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள போலோநாத் நியமிக்கப்பட்டார். நான் இருக்கும்போது எதற்கு இன்னொருத்தரை நியமிக்கணும்னு தலைமைச் செயலாளரிடம் முறையிட்ட ராமானுஜம், தன்னை வேறு இடத்துக்கு மாற்றச் சொன்னார். எந்த இடத்துக்குப் போகவிருப்பம்னு தலைமைச் செயலாளர் கேட்டப்ப, ராமானுஜமே தேர்வு செய்ததுதான் குற்ற ஆவணக் காப்பகம். அவர் விருப்பப்படியே அங்கே ஏ.டி.ஜி.பி.யா நியமிக்கப்பட்டிருக்கிறார்.''
""அதிகாரி மாறிட்டதால அதிரடி ரெய்டுகள்?''
""அது முன்னைவிட அதிக பாய்ச்சலோடு இருக்குமாம். லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் நிம்மதியா இருக்க முடியாதுன்னு விஜிலென்ஸ் வட்டாரம் சொல்லுது. அடுத்த தகவலைச் சொல்றேங்க தலைவரே.. .. ஒரு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இன்னொரு மாவட்டத்துக்குப் போனால், அந்த புதுமாவட்டத்திலேயே சாதி சான்றிதழ் வாங்கிக்க லாம்னு சமீபத்தில் அரசாணை போடப்பட்டது. இதற்காக முதல்வரை சந்தித்து நன்றி சொன் னார் மூவேந்தர் முன்னேற்றக்கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார். இந்த அர சாணையை எதிர்த்து ஹைகோர்ட்டில் வழக்குப் போட வன்னியர் கூட்டமைப்பின் செயல் தலை வர் சி.என்.ராமமூர்த்தி தீவிரமா இருக்கிறார்.''
""முக்குலத்தோர் சமுதாயத்தினர் தஞ்சை, புதுக்கோட் டை போன்ற சில மாவட்டங்களில் எம்.பி.சி.ங்கிற மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக் காங்க. வேறு பல மாவட்டங்களில் பிற் படுத்தப்பட்டோர் அதாவது பி.சி. பட்டியலில் இருக்காங்க. இப்ப மாவட்டம் மாறி சாதி சான்றி தழ் வாங்குவதுங்கிற பேரில் இவங்க எல்லோரும் எம்.பி.சி சர்டிபிகேட் வாங்கிட முடியும்னும், அப் படி நடந்தால் ஏற்கனவே எம்.பி.சி பட்டியலில் உள்ள சாதிகளைச் சேர்ந்தவர்கள் கல்வி- வேலை வாய்ப்புகளில் பாதிக்கப்படுவாங்கங்கிற தும்தான் வன்னியர் கூட்டமைப்பின் வாதம். அதனால்தான் இந்த அரசாணைக்கு எதிர்ப்பு.''""எதிர்பார்ப்பும் பரபரப்புமான ஒரு தகவலை நான் சொல்றேம்ப்பா.. ... ஈழப்பிரச்சினையில் வன் முறையைத் தூண்டும் விதத்தில் பேசியதா வைகோவையும் கண்ணப்பனையும் தமிழக அரசு கைதுசெய்த சம்பவம் ஞாபக மிருக்குதா. கோவையில் இருந்த கண்ணப்பனை ஃப்ளைட் டில் அழைத்து வந்து கைது செஞ்சாங்க. இந்த வழக்கில் வைகோ பெயில் போடலை. அரசுத் தரப்பில் ரிமாண்ட் எக்ஸ் டென்ஷன் கேட்கப்படாததால் அவர் வெளியே வந்தார். சட்ட நுணுக்கங்களின்படி, அவர் வழக்கில் சம்பந்தப்பட்டுத் தான் இருக்கிறார். 21-ந் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருது. அப்ப வைகோ பெயில் பெட்டிஷன் போடணும். இல் லைன்னா மறுபடியும் ஜெயிலுக்குப் போக வேண்டியிருக்கும். ம.தி.மு.க வக்கீல்கள் இதுபற்றி வைகோவிடம் சொன்னப்ப, ஜெயிலுக்குப் போவது பற்றி கவலையில்லைன்னு சொல்லிட்டாராம். போலீஸ் தரப்போ அதெல்லாம் நடக் காது என்கிறது.''
""கண்ணப்பன்?''
""இப்ப அவர் தி.மு.க.வில் இருப்ப தால், சார்ஜ் ஷீட்டி லேயே அவர் பெய ரைக் காணோம்னு சொல்றாங்க.''
No comments:
Post a Comment