விருது வில்லங்கமானதன் பின் ணணி என்ன?
என டி.வி. வட்டாரங்களில் விசாரணையில் இறங்கினோம்.சீரியல் தயாரிப்பாளரான ராமமூர்த்தியின் விஷன்டைம் நிறுவனமும், சீரியல் ஹீரோ விஷ்வாவும் சேர்ந்து ‘"சின்னத்திரை கலைஞர்கள் விருது-2008' என்ற பெயரில் விருது விழா நடத்த முடிவு செய்தனர். விழாவை ஆஸ்கார் பாணியில் நடத்த முடிவு செய்தனர். உதாரணத்திற்கு சிறந்த நடிகை விருது என்றால் அதற்கு ராதிகா, தேவயானி, அபிதா என மூவரை யும் வேட்பாளர்களாக தேர்ந்தெடுப்பது. மூவரை யும் மேடையில் ஏற்றி சஸ்பென்ஸை கூட்டி... அதன்பின் ‘"சிறந்த நடிகை' என யாராவது ஒருவரை வின்னராக தேர்ந்தெடுத்துவிட்டு மற்ற இருவரை ரன்னராக அறிவிப்பது. இதுதான் இந்த விழாவின் ஹைலைட்! இந்த சஸ்பென்ஸ் விருது எதிர்பாராத க்ளைமாக்ஸில் முடிந்து விட்டது.
"சின்னத்திரை கூட்டமைப்பு வழங்கிய விருதில் பல திறமைசாலிகளின் பெயரை பரிசீலிக்காமலேயே நீக்கிவிட்டார்கள். இந்த விருது விழா பலரின் மனதை சங்கடப்படுத்தி விட்டது. இதனால் இந்த விருதை ஏற்றுக் கொள்ள எனக்கு மனசாட்சி இடம் தரவில்லை. அதனால் விருதை திரும்ப ஒப்படைக்கிறேன்' என்கிறார் சிறந்த நடிகை விருது பெற்ற ராதிகா.
""மூன்றுபேரை மேடையில் ஏற்றி அதில் ஒருவரை தேர்ந்தெடுப்பது மற்றவர்களை அவமதிப்பதுபோல இருக்கிறது என தேவயானி, டைரக்டர் "கோலங்கள்' திருச்செல்வம் உட்பட பலரும் என்னிடம் சொன்னார்கள். அதோடு "உங்களுக்குத்தான் விருது' என விஷ்வா ஆசை காட்டி பலரையும் வரவழைப்பதாகவும் புகார் சொன்னார்கள். ஏர்கனவே விஷ்வா மீது இண்டஸ்ட்ரியில் கெட்ட பெயர். இதனால் விஷன் டைம் ராமமூர்த்தியிடம் ‘"விஷ்வா தரும் விருதுக்காக யாரும் வர மாட்டார்கள்' என்று சொன்னேன். "அப்படியானால் நாங்களும், உங்கள் கூட்டமைப்பும் சேர்ந்து விருது விழாவை நடத்தலாம்' எனச் சொன்னார் ராமமூர்த்தி. ஒரு மாதம் கெடு கேட்டேன். ஆனால் ‘"எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டதால் விழாவை உடனே நடத்த வேண்டும். இல்லாவிட்டால் நிறைய நஷ்டம் வரும்' என ராமமூர்த்தி சொன்னதால் சம்மதித்தோம். ஏற்கனவே விஷ்வா மூலம் விருது பெறுவோர் பட்டியல் தயாரானதாலும், விழா தன் கையை விட்டு போனதால் எல்லோருக்கும் போன் போட்டு விருது உங்களுக்குத்தான் என விஷ்வா குழப்பம் செய்ததாலும் சங்கடங்கள் ஏற்பட்டுவிட்டது.விருதை பெற்றுக்கொண்ட ராதிகா என்னிடம் போனில் பேசும் போது "தனக்கு இந்த விருதில் உடன்பாடில்லை. அதனால் விஷன் டைம் நிறுவனத்திற்கு விருதை திருப்பியனுப்பி விடுகிறேன்' என் றார். "இது கூட்டமைப்பு சேர்ந்து கொடுத்த விருது.
அதனால் உங்க விளக்கத்தை கடிதமாக எழுதி அத் துடன் விருதை கூட்டமைப்பிடமே ஒப்படையுங்கள்' என்று சொன் னேன். அதன்படியே செய்த ராதிகா தான் எழுதிய கடிதத்தை பத்திரிகைகளுக்கு கொடுத்துவிட் டார். இதனால் கூட்டமைப்பின் மீது கெட்ட பெயர் ஆகிவிட்டது. ‘"கூட்டமைப்பில் இருந்துகொண்டே கூட்டமைப்பை ராதிகா டேமேஜ் பண்ணிவிட்டார். அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என பலரும் என்னிடம் மனம் வெதும்பி பேசினார்கள். "அது ராதிகாவின் தனிப்பட்ட கருத்து. அவரின் மன உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்' என உறுப்பினர்களை சமாதானப்படுத்தி வருகிறேன். "கூட்டமைப்பை குறை சொல்லணும்னு நினைக்கலை. ஆனா அப்படி ஒருசூழல் ஆகிப் போச்சு.
"இந்த பிரச்சனைகளுக்கெல் லாம் காரணம் விஷ்வாதான் என நீங்கள் ஒரு அறிக்கை கொடுத்து விடுங்கள்' என ராதிகா இப்போது சொல்கிறார். ‘நீங்களே விஷ்வா மீது புகார் அறிக்கை கொடுங்கள் எனச் சொல்லிவிட்டேன். விஷ்வாவை கூட்டமைப்பிலிருந்து நீக்க முயற்சி மேற் கொண்டிருக்கிறோம்!'' என்றார் விடுதலை.இந்த விருது சர்ச்சை குறித்து டி.வி. வட்டார பிரபலங்கள் பலரும் பல விஷயங்களை நம் காதில் போட்டார்கள்."இந்த விருதுக்கு 18 சீரியல்கள் போட்டிக் காக எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்த 18 சீரி யல்களுமே சன் டி.வி.யில் வரும் சீரியல்கள் தான். இந்த விழாவை டிவியில் போட நல்ல தொகை தருவதாகச் சொன்னது சன் தரப்பு. வேறு சேனல்களின் சீரியல்களை கணக்கில் சேர்க்காமலேயே இந்த சின்னத்திரை விருது நடத்தியதே பெரிய தவறு. அடுத்ததாக "அரசி' சீரியலுக்கு சிறந்த நடிகை, சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த தயாரிப்பாளர் என நான்கு விருதுகளை தருவதாக ராதிகாவிடம் விஷ்வா முன்கூட்டியே தெரியப்படுத்தினார். இதனால் தான் ராதிகா தனது வெளிநாட்டு பயணத்தை முன்கூட்டியே முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார். ஆனால் அதற்குள் விருது பொறுப்பு கூட்டமைப்பின் கைக்கு போய்விட்டதால் ராதிகாவுக்கு மட்டுமே விருது கிடைத்தது. இந்த கோபத்தில்தான் ராதிகா கூட்டமைப்பை சாடியதோடு விருதையும் திருப்பிக் கொடுத்து விட்டார். அத்துடன், தான் விருது பெறும் காட்சிகளையோ, விழாவில் பங்கு பெற்றதையோ டி.வி.யில் ஒளிபரப்பக்கூடாது எனவும் சொல்லி விட்டார்' என பரபரப்பின் பின்ணணியைச் சொன்னார்கள்.சீரியல்லதான் அழுகையும், ஆத்திரமும் இருக்குன்னா சீரியல் விருதுலயும் இந்தக் கதை தானா?
No comments:
Post a Comment