""என்னங்க சொல்றீங்க தலைவரே...''
""ஆமாப்பா.... கோவை மாவட்டம் அவி னாசியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. 28 வயசு. பெண் குரலில் பிசிறில்லாம பேசி அசத்துறவர். அவர் ஏரியாவில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்ததுன்னா சிறப்பு பேச்சாளர் வருவதற்கு முன்னாடி, கூட்டத்துக்கு வந்தவங்களுக்கு போரடிக்காம இருக்கிறதுக்காக 4 குரலில் பேசி கலக்குவார். லோக்கலில் ஜெ. குரலில் பேசிக்கிட்டிருந்த வெள்ளியங்கிரிதான் இப்ப பல வி.ஐ.பி.க்களிடம் அதே குரலில் பேசி பரபரப்பை உண்டாக்கிட்டார்.''
""இப்படியொரு வேலை யை செய்தவர் மேலே நட வடிக்கை ஏதாவது உண்டா?''
""ஜெ தரப்பிலிருந்தோ அ.தி.மு.க சார்பிலோ புகார் தந்தாதானே காவல்துறை நடவடிக்கை எடுப்பாங்க.''""தலைவரே.. .. நீங்க டூப்ளிகேட் ஜெ. வாய்ஸ் பற்றி சொன்னீங்க. நான், ஒரிஜினல் விஜயகாந்த் வாய்ஸ் பற்றி சொல்றேன். தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் 9-ந் தேதியன்னைக்கு மாநில மாணவரணி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அப்ப விஜயகாந்த், தி.மு.க. இவ்வளவு பெரிய கட்சியா வளர்ந்ததற்கு காரணம் மாணவரணியின் சிறப்பான செயல்பாடுதான்னு சொன்னார். மாணவ ரணி மா.செ. ஒருவர் விஜயகாந்த்தை குஷிப்படுத்துறதா நினைச்சு, நீங்கதான் அடுத்த முதல்வர், உங்களை அரியணை யில் ஏற்றாம விடமாட்டோம்னு சொல்ல, சட்டென குறுக்கிட்டிருக்கிறார் விஜயகாந்த். அட.. போங்கப்பா இதை கேட்டு கேட்டு புளிச்சுப்போச்சு. நான் முதலமைச்சர் ஆகுறதும் ஆகாததும் ஆண்டவனோட பிராப்தம். அவன் நினைச்சா எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும். நீங்க ஊருக்குப் போய் ஃபீல்டு ஒர்க் பாருங்கன்னு சொல்லியிருக்காரு.''
""புது டைப்பான வாய்ஸா இருக்கே?''""
தே.மு.தி.க மாணவரணி நிர்வாகிகளும் அதைத்தான் சொல்றாங்க. நம்ம கேப்டன் ரஜினி வழியில் போக ஆரம்பிச்சிட் டாரோன்னு தங்களுக்குள்ளே பேசிக்கிட்டு, கூட்டம் முடிந்ததும் மட்டன் பிரியாணி விருந்தில் கலந்துக்கிட்டாங்க. தலைவரே.... அடுத்த மேட்டருக்கு வர்றேன். இதோ அதோன்னு ஒரு வழியா திருநாவுக்கரசர் காங்கிரசில் சேர்ந்துட்டாரு. ஜூலை மாதமே பா.ஜ.க கொடியை தன்னோட காரிலிருந்து அவிழ்க்கச் சொல்லிட்ட திரு, அப்போதிருந்தே காங்கிரசில் சேர தொடர் முயற்சி மேற்கொண் டிருந்தார். தீபாவளி சமயத்தில் டெல்லியில் சோனியா, ராகுல் இருவரையும் சந்தித்திருந் தார். இணைப்புத் தேதிக்கு சோனியா அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்காமலே இருந்தது. அவரை காங்கிரசுக்கு கொண்டு வருவதில் மும்முரமா இருந்தவர் ப.சிதம்பரம்.'' ""அவர் முன்னிலையில்தானே காங்கிரசில் இணைந்திருக்கிறார் திருநாவுக்கரசர்.
""இந்த முறை 4 நாட்கள் டெல்லியில் முகாமிட்டிருந்தும் சோனியா அப்பாயிண்ட் மெண்ட் கிடைக்கலை. அவருக்கு ப.சி மூலமா தகவல் போனப்ப, நீங்களும் ஆசாத்தும் இருந்து கட்சியில் சேர்த்திடுங்கன்னு சொல் லிட்டாராம் சோனியா. இதையடுத்து, தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவை அவசரமா டெல்லிக்கு அழைத்து, குலாம்நபி ஆசாத், ப.சிதம்பரம் முன்னிலையில் திருநாவுக்கரசரை காங்கிரசில் சேர்த்துக்கிட்டாங்க.''""தனியாக ஒரு இணைப்பு விழா நடக்கும்னும் அறிவிக்கப்பட்டிருக்குதே!''""திருநா வுக்கரசர் தன்னோட ஆதரவாளர்களோடு திருச்சியில் டிசம்பர் மாதம் இணைப்பு விழாவை பிரமாண்டமா நடத்த திட்டமிட்டிருக்கிறார். அதில் சோனியா கலந்துக்குவாராங்கிற எதிர்பார்ப்பும் இருக்குது. திருநாவுக்கரசர் காங்கிரசில் சேர்ந்துவிட்டாலும் அவரோடேயே இதுநாள்வரை அரசியல் பயணம் மேற்கொண்ட கவிஞர் காசிமுத்து மாணிக்கம் போன்ற தீவிர ஆதரவாளர் கள் தி.மு.க பக்கம் போவதற்கு பேச்சு வார்த்தை நடத்திக்கிட்டிருக்காங்க.''""நானும் காங்கிரஸ் தரப்பு தகவல் சொல்றேம்ப்பா.. இது புதுச்சேரி மேட்டர். புதுச்சேரி கடற்கரையில் மகன் கண் முன்னேயே தாய்க்கும் மகளுக்கும் நடந்த பாலியல் கொடுமை பற்றி நம்ம நக்கீரனில் வெளியாகியிருந்த செய்தி ஒட்டுமொத்த மாநிலத்தையும் பரபரப் பாக்கியிருந்தது. சமீபத்தில் மத்திய அமைச்சர் நாராயணசாமி நிதியி லிருந்து புதுவை காவலர்களுக்கு வாகனங்கள் வழங்கும் விழா நடந்தது. அதில் பேசிய நாராயணசாமி, நம்ம நக்கீரன் செய்தியை சுட்டிக்காட்டி, நக்கீரனில் இந்தளவுக்கு எழுதிய பிற காவது நடவடிக்கை எடுக்கக்கூடாதா? யாருக்காக பயந்து கிடக்குறீங் கன்னு போலீசாரை பார்த்து காரசாரமா கேட்டார். ராஜ்யசபா எம்.பி. கண்ணனும், எல்லா அரசியல்வாதி களும் ஒரு ரவுடி குரூப்பை கையில் வச்சிருக்காங்க. போலீஸ்காரங்கள் துணிச்சலா நட வடிக்கை எடுக்க ணும்னார்.''""விழாவில் புதுச்சேரி முதல்வரும் இருந்திருப்பாரே?''""மேடையிலிருந்த புதுவை முதல்வர் வைத்திலிங்கம் நொந்து போய் உட்கார்ந் திருந்தார். ஒரு சி.எம்.மே பத்திரிகை பார்த்துதான் செய்தியை தெரிஞ்சுக்க வேண்டிய அளவுக்கு பாண்டி போலீசாரின் செயல்பாடு இருக்குது. இப்படியொரு சம்பவம் நடந்ததுமே என்கிட்டே சொல்லியிருந்தா என்ன நடவடிக்கை எடுக்குறதுன்னு சொல்லியிருப்பேன். யார்யாரோ செய்ற தப்புக்கு என் தலை உருளுதுன்னு போலீஸ் அதிகாரிகள் கிட்டே கடுப்பைக் காட்டியிருக் கிறார்.''""இதுக்குப் பிறகாவது புதுவை போலீசார் பொறுப்பா செயல்படுறாங் களான்னு பார்ப்போம்.... மறுபடியும் தமிழ்நாட்டுக்கு வர்றேங்க தலைவரே.. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் அழகிரியை குறிவைத்து பல கேள்விகளை எழுப்பணும்னும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை பெருசா கிளப்பணும்னும் அ.தி.மு.க எம்.பி.க்களுக்கு இன்ஸ்ட் ரக்ஷன் கொடுத்திருக்கிறார் ஜெ. அதோடு திருச்செந்தூர், வந்தவாசி இடைத் தேர்தல்களில் யாரை களமிறக்கலாம்னு செங் கோட்டையன்கிட்டே ரிப்போர்ட் கேட்டிருக்கிறார். திருச்செந்தூரில் அனிதாராதாகிருஷ்ணனை தி.மு.க. நிறுத்தினால் அ.தி.மு.க மா.செ. சண்முகநாதன், சுப்ரமணிய ஆதித்தன், கார்னட் வைகுண்டராஜனின் தம்பி இந்த மூவரில் ஒருவரை நாம நிறுத்த லாம்னு செங்கோட்டையன் ரிப்போர்ட் கொடுத் திருக்கிறார். இதில் வைகுண்டராஜனின் தம்பி நான் ஆட்டத்துக்கு வரலைன்னு சொல்லிட்டாராம். அதனால டாக்டர் வெங்கடேஷை நிறுத்தலாமா அல்லது முந்தைய இடைத்தேர்தல் போல இதையும் புறக்கணிக்கலாமான்னு ஜெ. யோசிச்சுக்கிட்டி ருக்கிறார்.''""நான் சொல்லப்போறதும் இடைத் தேர்தல் நியூஸ்தான்.மேற்குவங்கத்திலும் கேரளா விலும் நடந்த இடைத்தேர்தல்களில் மார்க் சிஸ்ட் கட்சிக்கு ஏற்பட்டுள்ள அதிர்ச்சித் தோல்வியையடுத்து, கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தை மாற்றணும்ங்கிற கோஷம், சி.பி.எம் தோழர்களிடம் அதிகமாகி யிருக்குது.''
No comments:
Post a Comment