""என் பிரச்சினை பத்தி உங்களைத் தனியா சந்திச்சிப் பேசணும்''’’என நம் லைனில் கவலை மண்டிய குரலில் சொன்ன அரசு ஊழியர் கிருஷ்ணனை... அவர் விருப்பப்படியே சந்தித்தோம்.""என் புகைப்படத்தை வெளியிட்றாதீங்க. குடும்ப மானம் கப்பலேறிடும்''’என்ற வேண்டுகோளோடு பேச ஆரம்பித்த அவர்... தன் பிரச்சினையை விவரிக்க ஆரம் பித்தார். அதை அவர் குரலிலேயே கேட்போம்...“""நான் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவன். என் மனைவி ஒரு பட்டதாரி. அவளும் அரசு ஊழியர்தான். எங்களுக்கு 10 வயசில் பொம் பளைப் பிள்ளை இருக்கு. நான் ரொம்ப ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்தவனா இருந்தாலும்... எப்பவாவது கல்யாணம் காட்சி மாதிரியான விஷேசங்களுக்குப் போறப்ப... பிரண்ட்ஸோட கொஞ்சம் டிரிங்ஸ் சாப்பிடுவேன். அப்பல்லாம் என் மனைவி என்னைத் திட்டுவாள். அப்படிப்பட்ட என் மனைவி ஒரு நாள்... "இன்னைக்கு சாயந்தரம் ஆத்துக்கு வரச்சே டாஸ்மாக் கடைல ஏதாவது சரக்கு வாங்கிக்கிட்டு வாங்கன்'னு சொன்னா. எனக்கு அதிர்ச்சியான அதிர்ச்சி. என் மனைவியோ.... "வாங்கிட்டு வந்தேள்னா ஒரு சர்ப்ரைஸ் சந்தோசம் இருக்கு'ன்னு சொன்னா. இதைக் கேட்டு சந்தோசமான நான்... அதேபோல் வாங்கிட்டு வந்தேன். அன்னைக்கு நைட்ல... ரெண்டுபேருமா சரக்கு சாப்பிட்டு தாம்பத்யத்தில் ஈடுபட்டா... ஈடுபடற பெண்ணுக்கும் அதிக உச்ச இன்பம் கிடைக்கும்னு... தன் ஆபீசில் வேலை பார்க்கும் ஒரு லேடி சொன்னதாச் சொல்லி... தனக்கும் கொஞ்சம் ஊத்திக்கொடுக்கச் சொன்னாள். ரெண்டுபேரும் குடிச்சோம். அன்னைக்கு கொஞ்சம் ஃபிரியாவே நடந்துக்கிட்டா. "வாழ்க்கையில் இன்னைக்கு மாதிரி என்னைக்கும் சந்தோசம் கிடைச்ச தில்லை'ன்னு கிறங்கிச் சொன்னா... மாசத்துக்கு ஒருதரம் சம்பளத் தன்னைக்கு மட்டும் இதை நாங்க ஃபாலோ பண்ண ஆரம்பிச்சோம். ஆனா காலப்போக்கில் வாராவாரம் சரக்கு வாங்கச் சொன்ன என் மனைவி... இப்ப "தினசரி பாட்டி லோட வா'ன்னு கூச்சமில்லாம அடம்பிடிக்கிறா. அதோட அவளோட போக்கு நைட்ல ரொம்ப மாறிடிச்சி. கூச்சமில்லாம கண்டபடி நடக்குறா... பேசறா... பாட்டிலோட போகாட்டி பத்திர காளி மாதிரி நடந்துக்கிறா... அவளால என் மகளோட எதிர்காலம் பாதிக்கப்படுமோங் கிற கவலை வந்துடுச்சி. என் நிம்மதியே போய்டிச்சி. இதெல்லாம் தப்பில்லையான்னு கேட்டா... தன்னோட ஆபீஸில் வேலை பாக் கற பல பெண்கள் இப்படித்தான் சீக்கிரட்டா பெட் ரூமில் சரக்கு சாப்பிடறதாச் சொல்லி நியாயம் கற்பிக்கிறா... இவளைப்போல பல பெண்கள் அதிக இன்பம்ங்கிற பேர்ல தடம்மாறிப் போய்டக்கூடாதுங்கிற எண்ணத் தில்தான் உங்கக்கிட்ட இதைப் பகிர்ந்துண் டேன்''’என்றார் கலங்கிய விழிகளுடன்.சரக்கு சாப்பிட்டால் உச்சம் என்கிற வதந்தி பெண்கள் மத்தியில் சீக்ரெட்டாய்ப் பரவிவருவதையும் நம்மால் பலபேரின் பேச்சிலிருந்து அறிய முடிந்தது.இவரது பிரச்சினையை நாம் ஆம்பூரின் பிரபல மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் ரவியிடம் எடுத்துச் சென்றோம். டாக்டர் ரவியோ "மீடியாக்கள் ஏற்படுத்தும் கலாச்சார சீரழிவுகளில் மதுபானமும் ஒன்று. டி.வி. சீரியலாகட் டும். திரைப்படமாகட்டும்... ஹீரோக்களைக் குடிக்க வைத்து... அது தவறில்லை என்ற மனநிலையை இளைஞர்களுக்கு ஏற்படுத்துகிறார்கள். டிஸ்கொதேக் களிலும் பார்ட்டிகளிலும் கலந்துகொண்டு பெண்களும் மது அருந்துகிற கலாச்சாரம் தற்போது வளர்ந்து கவலையை ஏற்படுத்துகிறது. ஆணோ பெண்ணோ... மதுபானத்தை முதலில் எடுத்துக்கொள்ளும்போது அது ஒருவித கிறக்க அனுபவத்தை ஏற்படுத்தும். அதேபோல் என்ன மூடில் இருக்கிறோமோ... அதை லேசாக மதுபானம் தூண்டிவிடும். கூச்சத்தை மறக்கவைக்கும். இதை சந்தோசம்னு நினைச்சி... தொடர ஆரம்பிச்சா... மோசமான பின்விளைவுகளை நாம உடல்ரீதியா சந்திக்கவேண்டிவரும். இன்னொன்று... மதுபானம் உடலை மரத்துப்போன நிலைக்கு கொண்டுபோகக்கூடிய ஒன்று. அது மாதிரியான நேரங்களில்... கிளர்ச்சி ஏற்பட கொஞ்சம் நேரம் ஆகலாம். இதையும் நீடித்த இன்பம் என்று சிலர் தவறாக கணக்குப் போடுகிறார்கள். இதை நம்பி மதுபானத்தை தொடர்ந்து எடுத்துகொண்டால்... அது இல்லாமல் எதையும் செய்யமுடியாது என்ற அடிமை நிலைக்குக் கொண்டுபோய் விட்டுவிட லாம். எனவே மதுபானத்தை ஓரம்கட்டுவதே ஆரோக்கியமான விசயம். கிருஷ்ணனுக்கும் அவர் மனைவிக்கும் கவுன்சிலிங் மூலம் நல்ல தீர்வை ஏற்படுத்தலாம்''’என்றார் விரிவாகவே. மதுப்பழக்கத்தால் பெண்களுக்கு என் னென்ன பின்விளைவுகள் ஏற்படலாம்? -இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் திருவண்ணாமலையின் பிரபல மகப்பேறு நிபுணரான டாக்டர் ஸ்வர்ணலதா ""எந்தக் காரணத்துக்காகக் குடித்தாலும் மதுப்பழக் கம் பெண்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். மதுவால் தாய்மையடையும் தன்மைகூட பாதிக்கப் படலாம். கர்ப்ப காலங்களில் ஒரு பெண் மதுவருந்தி னால்... அது குழந்தையை ஊனமாகப் பிறக்க வைக்கும். அப்படி பிறக்கும் குழந்தையின் அறிவுத் திறனும் பாதிக்கப்படலாம். மது ஆண்களை விட பெண்களுக்கே அதிக பாதிப்புகளை ஏற்படுத் தும்''’என்கிறார் அழுத்தம் திருத்தமாய்.இது பெண்களுக்கு மட்டுமல்ல; ஆண்களுக் கான எச்சரிக்கையும் தான்.
No comments:
Post a Comment