தஞ்சை மாவட்ட குலசேகரன் பட்டினத்தைச் சேர்ந்த ரத்தினவேலுக்கும் சிங்கப்பூரில் சாஃப்ட்வேர் கம்பெனி நடத்தும் சீன இளம்பெண் செரினா பாங்க்குக்கும்... பிரம்மரிஷி மலையில் 8-ந் தேதி நடந்த திருமணம்... பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. அப்படி யென்ன அதில் விசேஷம்?இது தமிழ் இளைஞருக்கும் சீன இளம்பெண்ணுக்கும் நடந்த காதல் திருமணம் என்பதோடு.... ராஜ தோரணை யில் இந்தத் திருமணம் நடத்தப்பட்டி ருப்பதுதான் கூடுதல் விஷேசம்."உன்னை ராணி மாதிரி வச்சுக்கு வேன்'’ என பலரும் காதலிக்கும்வரை டயலாக் அடிப்பார்கள். ரத்னவேலுவோ... மணமகள் செரினா பாங்க்கை ராணியாக வே நடத்தி திருமணம் செய்துகொண்டார்.காரிலிருந்து மணக்கோலத்தில் செரினா இறங்க... அவரது பாதங்கள் தரையில் படாதபடி...அவற்றை கைகளால் தாங்கி... மலர்கள் நிரப்பிய தாம்பாளத்தில் வைத்து... சிவப்புக் கம்பளம் விரிப்பின் மீது வரிசையாக வைக்கப்பட்டிருந்த மலர்த் தாம்பாளங்களில் அவரை நடக்கவைத்து.. அங்கே தயாராக இருந்த பல்லக்குக்கு மணமகன் அழைத்து வர... அதில் மண மகளும் மணமகனும் ஏறிக்கொண்ட னர். அந்தப் பல்லக்கை... நான்குவகை வாத்தியங்கள் முழங்க... காவியணிந்த சாமியார்கள் மண மேடைக்குத் தூக்கிவந்தனர். அங்கே மனைவி லதா சகிதம் காத்திருந்த பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் விஜயகுமார் மணமக்களை வரவேற்று மாலை எடுத்துக்கொடுக்க... சைவ சித்தாந்த முறைப்படி அவர் களின் திருமணம் கோலாகலமாக நடந்தது. நூற்றுக் கணக்கான ஏழைகளுக்கு அன்னதானமும் நடந்தது. மணமகன் ரத்தினவேலு நம்மிடம், ""நான் சிங்கப்பூரில் இந்த செரினாபாங்க்கின் கம்பெனியில் வேலை பார்த்தேன். நான் இந்த சித்தர்கள் கோயிலுக்கு அடிக்கடி வந்து எங்க கம்பெனியின் வளர்ச்சிக்காக வேண்டிக்கு வேன். சித்தர்களின் சக்தியால் எங்க கம்பெனி கிடுகிடுன்னு வளர ஆரம்பித்தது. இதை அறிந்த செரினா... என்னை தன் வாழ்க்கைத் துணைவனா ஆக்கிக்க விரும்பினாங்க. அதேபோல் சித்தர்கள் சக்திமீதும் நம்பிக்கை வச்சி... இங்க கல்யாணம் பண்ணிக்க விரும்பினாங்க''’என்றார் பூரிப்பாக.சீன மணமகள் செரினா பாங்க்கோ “""வணக்கம். இந்த பிரம்மரிஷி மலையில் அபார சக்திகள் இருப்பதை உணர்கிறேன். இந்தத் திருமணம் எனக்கு அதிக சந்தோசத்தைக் கொடுக்குது'' என்றார் வெட்கச்சிரிப்போடு.திருமணத்தை முன்னின்று நடத்திவைத்த ஆட்சியர் விஜயகுமார் என்ன சொல்கிறார்?""எனக்கு தொன்மையான பொருட்கள், புராதன இடங்கள் மீது ஆர்வம் அதிகம். இந்த மாவட்டத்தில் ஆதிகால மரப்படிமங்கள் கூட இருக்கு. நிறைய மலைக்கோயில்கள் தொன்மைச் சிறப்போட திகழுது. அந்த வகையில் பிரம்மரிஷி மலையும் இருப்பதால் இதைப்பார்க்க ஆர்வப்பட்டேன். இதையெல்லாம் சுற்றுலாத்தலமா ஆக்கினா... நல்லா இருக்கும்னு அதற்கான முயற்சிகள்லயும் இருக்கேன். இதற்கிடையே சீனப்பெண்ணுக்கு சைவத் தமிழ் முறையில் திருமணம்னு கேள்விப்பட்டதும் உற்சாகமாக கலந்துகொண்டேன். இனிய அனுபவம் அது'' என்கிறார் மகிழ்ச்சித் திளைப்பு மாறாமல்.
No comments:
Post a Comment