Sunday, December 13, 2009

இலங்கைப்பிரச்சனை தீர்வு இந்தியாவிடம் கையளிப்பு

மீண்டும் தமது ஆட்சி நீடிக்குமானால் மஹிந்த ராஜபக்ஷ மேற்கொள்ள உத்தேசித்திருக்கும் அதிகாரப் பகிர்வுத் திட்டத்தின் அடிப்படை விடயங்கள் அடங்கிய ஆவணம் ஒன்றை இலங்கை அரசு இந்தியாவிடம் கையளித்திருப்பதாக நம்பிக்கையான வட்டார தகவல்கள் கூறுகின்றன. கடந்த புதன், வியாழக்கிழமைகளில் புதுடில்லிக்கு விஜயத்தை மேற்கொண்ட மஹிந்த சகோதரர்கள் மற்றும் லலித் வீரதுங்க ஆகியோரே இந்த அதிகாரப் பகிர்வு திட்ட ஆவணத்தை புதுடில்லியிடம் கையளித்துள்ளனர்.
ஆனால் இதிலுள்ள விடயங்கள் வெளித்தெரிந்தால் நடக்கப்போகும் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கருதப்படுவதால், இது பற்றிய தகவலை இப்போதைக்கு வெளியிடுவதில்லை என இரு தரப்புகளும் இணங்கிக்கொண்டன என்றும் அறியப்பட்டுள்ளது.
எனவே, மேற்படி குழுவின் புதுடில்லி விஜய அறிக்கையை வெளியிடும்போது, "இலங்கையில் அரசியல் தீர்வு நோக்கிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் இரு தரப்புகளும் இணங்கிக் கொண்டன" என்று மட்டும் சூட்சுமமாக வெளியிட தீர்மானித்துள்ளனராம்.

No comments:

Post a Comment