Sunday, December 13, 2009

இந்தியா கேள்வி: திணரும் இலங்கை

கடந்த மே மாதம் வன்னியில் நடந்த பெரும் போரின் இறுதியில் பிரபாகரன் கொல்லப்பட்டதாக சிங்கள அரசு கூறியது. இது தொடர்பாக பொய்யான உடலைக் காட்டியது இலங்கை.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்ற வழக்கில் முதல் குற்றவாளி பிரபாகரன். அவர் மரணம் உண்மை என்றால் அது குறித்த அதிகாரப்பூர்வ சான்றுகள் வேண்டும். அப்போதுதான் ராஜீவ் வழக்கை முடிக்க முடியும் என்பதால், பிரபாகரன் மரணச் சான்றையும், இறப்புச் சான்றிதழையும் தருமாறு இந்தியா கேட்டது.
ஆனால் மவுனம் சாதித்து வந்தது இலங்கா. இந்தியா தொடர்ந்து கேட்கவும்,
இறப்புச் சான்றிதழ் இலங்கை சட்டத்துறை நிபுணர்கள் பரிசீலனையில் உள்ளதாக இலங்கைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ராஜீவ் காந்தி கொலைவழக்கு முடிவுக்கு வருகிறது. இந்த வழக்கை முடிக்கவே, இப்படியொரு அவசர நிலை என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment