Wednesday, December 9, 2009

நானும் எல்லை மீறிச் செயல்ப்படவேண்டி இருக்கும்: மகிந்த ஆவேசம்

எதிர்க்கட்சித் தலைவர் இதன் பின்னர் தமக்கோ தமது குடும்ப உறுப்பினர்களுக்கோ அபகீர்த்தியை ஏற்படுத்தினால், எல்லைகளைத் தாண்டி பதில் நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் இரவு ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தலைவர் மலிக் சமரவிக்ரமவிற்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய மாநாடு கடந்த சனிக்கிழமையன்று வெலிசரையில் நடைபெற்ற போது அதில் பேசிய ரணில் விக்ரமசிங்க, மகிந்த ராஜபக்ஷவின் குடும்ப அரசியலில் உள்ள ஊழல் மோசடிகளை வெளிப்படுத்துவதாக பகிரங்கமாக அறிவித்ததன் பின்னரே மகிந்த ராஜபக்ஷ மலிக் சமரவிக்ரமவை தொலைபேசியில் தொடர்புகொண்டு இதனைத் தெரிவித்துள்ளார். எஸ்.பீ.யை அரசாங்கத்தில் இணைத்துக்கொள்ள தாம் எண்ணியிருக்காத போதிலும், ரணில் விக்ரமசிங்கவிற்கு பதிலடி கொடுப்பதற்காக எஸ்.பீ.யை அரசாங்கத்தில் இணைத்துக் கொள்ள தாம் தீர்மானித்துள்ளதாகவும், இதன்பின்னல் ரணில் விக்ரமசிங்க எல்லைமீறி செயற்படுவாராயின், தானும் எல்லைமீறி செயற்பட நேரிடும் என ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.அதாவது இவர் எப்போதுமே எல்லை மீறிச் செயல்படாத உத்தமர்போலவும், இனி எல்லை மீறிச் செயல்படுவார் போலவும் பேசியுள்ளது.
மகிந்த ரணில் மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தமிழர்கள் சற்று நிதானமாக அவதானித்து இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காய்களை நகர்த்துவது நல்லது.

No comments:

Post a Comment