பிரபாக்கும் தலிபானுக்கும் முடிச்சுபோட்ட மகிந்த சிந்தனை தலிபானுடன் உள்நீச்சள் அடிக்கின்றதா? என்ற குற்றச்சாட்டு இன்றுசர்வதேசத்திற்கு எழுந்துள்ளது!!!...
தலைவர் பிரபாகரன் அமரர் அவர்கள் பயங்கரவாதத்தில் ஈடுபட்டார் என்று, பலத்த குற்றச்சாட்டை சோடித்து, வெள்ளைக்கொடியுடன் சென்றவர்களை கொலைசெய்தது என்று மகிந்த அரசின் மேல் குற்றம் சாடும் முன்னால் இராணுவத்தளபதியில் வாக்குமூலத்தைவைத்து, இன்று ஐநா மனித உரிமைகள் அமைப்பு அல்லது குழு குற்றம் சாட்டப்பட்டவர்களை கைதுசெய்யமுடியும். அல்லது பதவியில் இருந்து நிறுத்தமுடியும் என்று பல வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துவருகின்றூர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் பயங்கரவாதத்தை அடக்கிவிட்டோம் என்ற மமதையில் அல்லது வெற்றியின் பிரமிப்பில் மகிந்த அரசுபலசவால்களை விட்டது. இதனால், கூடக்கூடாத இராணுவ தலமைகளுடன் கூடியதால் இன்றுபலத்த பின்னடைவுக்குள் தள்ளப்பட்டுள்ளது.
பயங்கர வாதிகள் என்று முத்திரைகுத்தி புலிகளின் தலமையையும் அதன் பிரதிகளையும் நேர்வேயுடன் சேர்ந்து அழித்த, மகிந்த அரசு ஐநாசபையின் மனித உரிமைக்கு பலவிதத்தில் அசௌவுரியங்களை விளைவித்து விட்டது. என்ற குற்றச்சாட்டுடன் சேர்ந்த ஆயுத்கடத்தல் குற்றச்சாட்டும் இன்று மகிந்த அரசின் தலையில் சூடப்பட்டதா? அல்லது திணிக்கப்படுகின்றதா?? என்ற கேள்விகள் பலமாகவே எழுகின்றது. எனினும் தலிபானன்களுக்கும் இலங்கையில் உள்ள தமிழீழவிடுதலைப் புலிகளுக்கும் தொடர்புகள் இருப்பதாக பல இடங்களில் பகிரங்கமாகவே குற்றத்தை சாட்டிவந்த மகிந்த அரசு இன்று புலிகளை முற்றாக அழித்த பின் ஏன்? எதற்கு?? ஆயுதங்களை கடத்துகின்றது? அல்லது வாங்குகின்றது??
அப்படியானால் இந்த ஆயுதங்கள் வாங்கபணம் யார் கொடுத்தது??? என்றும், பயங்கரவாதத்திற்கு உதவும் முறைகள் மகிந்த அரசுக்கு இனறு ஏன் தேவைப்படுகின்றது??? என்ற பல்லாயிரக்கணக்காண கேள்விகள் சர்வசேத்திடம் எழுந்துவிட்டது என்றுதான் கூறமுடியும்.காரணம் கடந்த புதன் கிழமை பாகிஸ்தான் – வங்க தேச கடல் எல்லையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் கப்பல் ஒன்று நடமாடியதனை கண்ட இந்திய கரையோர காவல்படையினர் அந்த கப்பலை பிடிப்பதற்கு உசார்படுத்தப்பட்டனர். அந்த கப்பல் தலைமறைவாகும் முயற்சியில் ஈடுபட்டது. சரியான அடையாளங்களை தெரிவிக்க மறுத்ததால் அந்த கப்பல் பிடிக்கப்பட்டது.
அந்த கப்பலில் 11 பாகிஸ்தானியர்கள் இருந்தது மட்டுமன்றி பெருமளவான ஆயுதங்கள் அதற்குள் இருந்தன ஆனால் இந்த கப்பல் பற்றிய விபரங்களை இந்திய அரசு தெரிவிக்க மறுத்து விட்டது. அதற்கு என்ன நடந்தது என்ற விபரம் தெரியவில்லை.
No comments:
Post a Comment