சம்பவம்-1
கோவையில் தனியார் வங்கி ஒன்றில் வேலைபார்க்கிறார் செந்தில் குமார். இவரின் ஏர்செல் போனைத் தொடர்புகொண்ட ஒரு பெண் "குமாரண்ணா... நான் தேவி பேசறேன்'’என்றது ஐஸ்க்ரீம் வாய்ஸில்.
திகைத்த செந்தில், "நான் குமார் இல்லைங்க. ராங் நம்பர்'’என்று சொல்ல...
"ஸாரி சார்'’என்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள் அவள். மறுநாளும் இரவில் வர, மறுபடியும் ராங் நம்பர் என்றார் செந்தில்.
அவளோ, "ஸாரி சார்... தப்பா நினைச்சிக்காதீங்க.
உங்க வாய்ஸ் இனிமையா இருக்கு. உங்களைப் பத்தி தெரிஞ்சிக்க லாமா?'’என்று அவள் கொக்கி போட... "என் பேர் செந்தில்குமார். கோவைல பேங்க்கில் ஒர்க் பண்றேன்'’என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார். பிறகு ’’"நீங்க..?'
என அவர் கேட்க, அவளோ... தான் ஊட்டியில் படிக்கும் கல்லூரி மாணவி என்று அறிமுகப் படுத்திக்கொண்டு அவரது நட்பை விரும்புவதாகச் சொன்னாள். தனக்கு ஒரு கேர்ள் ஃபிரண்டாய் ஒரு கல்லூரி மாணவியே கிடைத்துவிட்டாளே என செந்தில் பூரித்தார். பிறகு?
தனது அனுபவத்தை செந்திலே சொல்கிறார்... “""அன்னைக்கு இரவு ஆரம்பிச்ச நட்பு... ஒரே வாரத்தில் செக்ஸ் பத்தி பேசற அளவுக்கு தீவிரமாச்சு. ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்காமலே செல்ஃபோனில் கொஞ்சிக்க ஆரம்பிச்சோம். ஃபர்ஸ்ட் நைட்டில் என்னவெல்லாம் பண்ணுவீங்கன்னு அவ கேட்க... பீர் போதையில் நானும் வெட்கமில்லாம விவரிச்சிட்டேன்.
திடீர்னு ரெண்டாவது வாரம் என்னைத் தேடிக்கிட்டு 2 தடியனுங்க எங்க வங்கிக்கு வந்தானுங்க. எங்க தங்கச்சி வெள்ளந்தியான பொண்ணு. ஒரு கல்லூரி மாணவிக்கிட்ட எப்படியெல்லாம் ஆபாசமா பேசி இருக்கே... வாடா போலீஸ் ஸ்டேஷனுக்கு.
இதோ நீ பேசினது இந்த போனில் இருக்குன்னு கையைப் பிடிச்சி இழுத்து பலவந்தமா கூப்பிட ஆரம்பிச்சானுங்க. திகைச்சுப்போன நான்... தெரியாமப் பண்ணிட்டேன் விட்ருங்க. என் மானத்தை வாங்கிடாதீங்கன்னு கெஞ்சி னேன். அப்படின்னா 50 ஆயிரம் ரூபாய் கொடுன்னானுங்க.
வேற வழியில்லாம ஏ.டி.எம்.மில் இருந்த 30 ஆயிரம் ரூபாயை அப்படியே எடுத்துக்கொடுத்துட்டேன். இப்படி பொண்ணுகளை வச்சி போன் மூலமே வலை விரிச்சி ஒரு கூட்டமே சம்பாதிக்கிது போலிருக்கு.
இப்பல்லாம் தெரியாத நம்பர்ல இருந்து கால் வந்தாலே... வியர்த்து விறுவிறுத்துப்போய்டறேன்''’’என்கிறார் சங்கடம் விலகாமலே செந்தில்குமார்.
சம்பவம்-2
திருவண்ணாமலை அரசுக் கரு வூலத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவரின் டீன் ஏஜ் மகன் சௌந்தர். கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் அவனுக்கு இப்படி மிஸ்டு கால் மூலம் அறிமுகமாகி நட்பானாள் வேட்டவலத்தைச் சேர்ந்த அந்தப் பெண் மணி.
தனக்கு சின்ன வயதில் இரண்டு பிள்ளைகள் என்றும் தன் கணவன் ஃபாரினில் இருப்பதாகவும்.. தான் தனிமைத் தணலில் தவிப்பதாகவும்... விரகமாய்ப் பேசியவள்...
ஒருநாள் "லாட்ஜில் சந்திக்கலாம்' என அழைத்தாள். பிறகு?""ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு லாட்ஜில் ரூம் போட்டுட்டு... அவளை சந்திக்கிற ஆர்வத்தோடும் கற்பனையோடும் திருவண்ணாமலை பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தேன். திமிசுக்கட்டை உடம்பு.
எதிர்பார்த்ததை விட ரொம்ப அழகாவே இருந்தாள். ஓட்டல்ல காபி சாப்பிட்டுட்டு... அந்த லாட்ஜுக்கு ஆட்டோவில் போனோம். அப்பவே ரூம் பாய் சந்தேகமாப் பார்த்தான். அந்த சங்கடத்தை சகிச்சிக்கிட்டு ரூமுக்குள்ள போய் கதவை சாத்திட்டு கட்டில்ல உட்கார்ந்ததுதான் தாமதம்... படபடன்னு கதவு தட்ற சத்தம். பதறிபோய்க் கதவைத் திறந்தா..
நாலைஞ்சிபேர் திபுதிபுன்னு ரூமுக்குள் நுழைஞ்சானுங்க. "ஏண்டா என்ன தைரியம் இருந்தா எங்க ஊர்ப் பொண்ணை லாட்ஜுக்கு கூட்டிட்டு வருவே'ன்னு என்னை அடிக்க ஆரம்பிச்சானுங்க.
அப்புறம் பையில் இருந்த 3 ஆயிரம் ரூபா, கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச்சங்கிலி, செல்ஃபோன்னு எல்லாத்தையும் பிடுங்கிக்கிட்டு அவளையும் அழைச்சிக்கிட்டுப் போய்ட் டானுங்க. ஒரு மணிநேரம் ரூமைவிட்டு வெளியவே வரலை. ரொம்ப அவமானமாப் போச்சு. இதை யார்ட்ட சொல்லமுடியும்? அப்ப அவள் நடந்துக்கிட்டதைப் பார்த் தப்பதான்... அவளே அவனுங்களை கூட்டிட்டு வந்திருக்கான்னு புரிஞ் சிது''’என்றான் குன்றிப்போனவனாய்.
-இப்படியாக மிஸ்டு கால் மூலம் வலைவிரித்து மடக்கி... பணம் பறிக்கும் கும்பல்கள் இப்போது பெருகத் தொடங்கியிருப்பது ஆபத்தானது.வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் மாநில துணைச்செயலாளர் நீலமூர்த்தியிடம் இது பற்றி நாம் கேட்டபோது, ""இப்போது சில நல்ல குடும்பத்துப் பெண்களே கூட இப்படிப்பட்ட செல்ஃபோன் வில்லன்க ளிடம் மாட்டிக்கிட்டு சங்கடப்படுறாங்க. மிஸ்டுகால் மூலம் நட்பு பிடிச்சி...
ஆறுதலாப் பேச ஆரம்பிச்சி... ரொமான்ஸ் என்ற பெயரில்... சிலர் பெண்களைத் தூண்டிவிட்டு அவங் களைக் கிளுகிளுப்பா பேசவச்சி.. அதை ரெக்கார்ட் பண்ணி... இணையதளங்கள்ல உலவவிடுவதும் இப்ப அதிகமா ஆகிக் கிட்டு இருக்கு. எக்குத் தப்பா மாட்டிகிற பெண்களும் ஆண்களும் அவமானத்துக்கு ஆளாகறாங்க. இல்லைன்னா அந்த வில்லன், வில்லிகள்ட்ட பணத்தைக் கொடுத்து... அவங்க தங்களைக் காப்பாத்திக்க வேண்டியிருக்கு. இப்படிப்பட்ட மோசடிக் கும்பல்கள்கிட்ட இருந்து அப்பாவிகளை மீட்க.. போலீஸ்தான் ஏதாவது அதிரடி நடவடிக்கைகளை எடுக்கணும்''’என்கிறார் ஆதங்கமாய்.
திருவண்ணாமலை வோடோ போன் கம்பெனி நிர்வாகி ரமேஷ் கிருஷ்டியோ, ""தொடர்ந்து ஒருத்தர்ட்ட இருந்து மிஸ்டுகால் வந்தா அவங்களைக் கூப்பிட்டு எச்சரிக்கை பண்ணமுடியுமே தவிர வேற எதையும் செய்யமுடியாது. அதனால் தேவையற்ற பிரச்சினைகள்ல சிக்கவேணாம்னு நினைக்கிறவங்க... தெரியாத நம்பர்ல இருந்து மிஸ்டுகால் வந்தா...
அதை அவாய்டு பண்றதுதான் நல்லது''’என்கிறார் ஆலோசனை யாய்.
செல்ஃபோன் வைத்தி ருக்கும் ஆண்களே.... செல் ஃபோன் வில்லிகளிடம் உஷார்... உஷார்...!
No comments:
Post a Comment