""ப்ச்... இதுக்கு மேலேயும் காவல் துறை நடவடிக்கை எடுக்கலைன்னா... அவளோட உடம்பு தாங்காதுங்க.
எப்படித் தான் மிருகத்தைவிட கேவலமா நடந்துக்கி றானுங்களோ அந்த படுபாவிப் பயலுக. ச்சே...'' -வேதனையில் கொந்தளிக் கிறார்கள் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியத்தின் செந்தியமங்கலம் கிராம மக்கள். என்ன நடந்தது?
சோகத்துடன் விவரிக்கிறார்கள்...""பாண்டிக்கு பக்கத்துல கல்லிக்குடி கிராமத்தில் விவசாய கூலி வேலை செய்து வந்த சுப்பிரமணியன்-சுந்தரம்பாள் தம்பதிக்கு பொறந்த புள்ளதான் இந்த சித்ரா. ஊமையா... ஒருவித மந்தமா பொறந்ததால பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி படிக்க வைக்கல.
அஞ்சு வருஷத்துக்கு முன்னால ஆதரவா இருந்த அப்பா சுப்பிரமணியனும் இறந்துபோக... வேற வழியில்லாம சுந்தரம்பாளும் சித்ராவும் இந்த ஊர்ல இருக்கிற உறவினரான காத்தான் வீட்டுக்கு வந்து தங்கினாங்க.அம்மா விவசாய கூலி வேலைக்குப் போய்விட, அக்கம்பக்கத்துல உள்ளவங்க சொல்ற வேலைய செய்யத் தொடங்கினா. வேலை வெட்டி இல்லாம சும்மா சுத்திக்கிட்டு கெடக்கிறவனுங்க மட்டுமில்லாம...
வயசான சில வக்கிரனுங்களுடைய பார்வையும் சித்ராவின் வனப்பான உடம்பையே வட்டமடிக்க ஆரம்பிச்சிடுச்சு.ப்ச்... பாவம்ங்க... கருவேலங்காட்டுப் பக்கம் தூக்கிட்டுப்போய் வாய் பேசமுடியாத பொண்ணை குதறியிருக்கிறானுங்க பொறுக்கி நாய்ங்க. இருக்க...
இருக்க வயிறு பெருசாயி அழகான ஆண் குழந்தை பொறந்துச்சு. இவளால வளர்க்க முடியாததால இதை கேள்விப்பட்ட குழந்தையில்லாத் தம்பதி இந் தக் குழந்தையை வாங்கிட்டுப்போய் வளர்க்குறாங்க.அந்த நாய்ங்களோட தொல்லை அதோட நிக்கல. குழந்தை பொறந்து கொஞ்சம் நடமாட ஆரம்பிச்ச சித்ராவைத் தொடர்ந்து காமவேட்டை ஆட... மீண்டும் கர்ப்பமாகி பெண் குழந்தை பெற்றெடுக்க, நாச்சிக் குளம் பகுதி தம்பதி தூக்கிட்டுப்போய் வளர்க்குறாங்க. அதுக்கப்புறமும் அதே வேதனை... இரண்டு ஆண் குழந்தைகள். இதில் ஒரு குழந் தையை இதே ஊர்ல மாதவன் -தவமணி தம்பதி வளர்க்கி றாங்க. இப்படி அவளை பிள்ளை பெக்குற வாடகைத் தாயாவே ஆக்கிட்டாங்க'' என்று உச் கொட்டுகிற அப்பகுதி மக்கள்.
ஊர்ல காமக்கண் களோடு சுத்திக்கிட்டிருக்கிற நாய்ப்பயலுகளை கூட்டி வந்து இந்த புள்ளைகிட்டக் காட்டுனாவே போதும், யாரெல்லாம் தன்னை சீரழிச்சானுங்கன்னு காண்பிச்சுடும். ம்... போலீஸ்காரங்க மனசு வைக்கணுமே'' என்கிறார்கள் வேதனையோடு.உடனே திருவாரூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகரனின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம்.
""அந்தப் பொண்ணை மீட்டு திரு வாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில சிகிச்சைக்கு அனுப்பியிருக்கோம். மனநிலை சோதனைக்குப் பிறகு ஒரு நல்ல காப்பகத்துக்கு அனுப்ப ஏற்பாடு செய்றேன். அவங்களோட வாக்குமூலத்தை வெச்சு இந்தளவுக்கு சீரழிச்சவங்க மேல நிச்சயமா நடவடிக்கை எடுக்கிறேன்''
என்கிறார் உறுதியாக. இதுபோன்ற காமுகர்களை விட்டு வைத்தால் இன்னும் பல சித்ராக்களின் வாழ்க்கை சூறையாடப் பட்டுக்கொண்டுதான் இருக்கும்.
No comments:
Post a Comment