வேட்டைக்காரன் வெளியான அன்றே, 'இது சரித்திர வெற்றி, வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத வெற்றி' என்றெல்லாம் அடித்துவிட்டனர் நடிகர் விஜய்யும் அவரது தந்தையும்.இந்த 'மா...பெரும்' வெற்றிப் படத்தை மேலும் பெரிய வெற்றிப் படமாக்க விஜய் இந்த வாரம் முதல் நகரம் நகரமாக சுற்றுப் பயணம் செல்லவும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.
இந் நிலையில் படத்தின் உண்மையான வசூல் நிலவரம் என்ன... இன்றைய நிலவரம் என்ன என்பது குறி்த்து ஒரு அலசல்.இந்தப் படத்தைப் பொறுத்த வரை அதன் ஒரிஜினல் தயாரிப்பாளரான ஏவிஎம் பாலசுப்ரமணியம், கிரேட் எஸ்கேப் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆனால் சன் டிவியின் பப்ளிசிட்டி மேல் நம்பிக்கை வைத்து வாங்கிய விநியோகஸ்தர்கள்தான் மாட்டிக் கொண்டவர்கள்.முதல் மூன்று தினங்கள் படத்துக்கு ஓப்பனிங் சிறப்பாக வந்திருந்தாலும், திங்கள்கிழமையே டிராப் தொடங்கிவிட்டதாகக் கூறுகிறார் தமிழ்நாடு என்டர்டெயின்மெண்ட் ஆசிரியரும், பாக்ஸ் ஆபீஸ் விவரங்களை சேகரித்து வருபவருமான ராமானுஜம்.அவர் கூறுகையில், '
இந்தப் படம் நிச்சயம் வெற்றிப் படம் என்று சொல்ல முடியாது. அப்படி சொல்லி தவறான ட்ரெண்டுக்கு வழிகாட்டவும் கூடாது. விஜய் நடித்த வேட்டைக்காரன் வெற்றி என்றால், ஒரிஜினல் வெற்றிப் படங்களை என்னவென்று சொல்வது...மதுரை, சேலம் பகுதிகளில் 50 சதவீத்துக்கு மேல் 'அடி' விழுந்திருக்கிறது இந்தப் படத்துக்கு.
திருச்சி, திருநெல்வேலியில் மட்டும் தப்பித்திருக்கிறது' என்றார்.சென்னையைப் பொறுத்த வரை, விஜய் தன் வெற்றியின் அளவுகோலாகக் கருதும் கமலா தியேட்டரிலும் கூட 30 சதவீதத்துக்கும் மேல் ரசிகர்கள் வருகை குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சத்யம் போன்ற திரையரங்குகளில் இப்போது கெளன்டரிலேயே டிக்கெட்டுகள் கிடைப்பதாக சத்யம் இணையத் தளம் தெரிவிக்கிறது.வேட்டைக்காரனின் ஒரு நகர வினியோக உரிமையை ரூ 3.5 கோடி கொடுத்துப் பெற்றுள்ள பிரபல வினியோகஸ்தருக்கு மட்டும் ரூ.1 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.பொங்கல் சீஸனில் இந்தப் படம் தியேட்டர்களை விட்டு தூக்கப்படும் என்பதால், இந்தத் தொகையை அவரால் மீண்டும் பெற முடியாத நிலை.மதுரையில் 50 சதவீதத்துக்கும் அடி என்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால், நஷ்டத்தை கூடஇவர்களால் வாய்விட்டு வெளியே சொல்ல முடியாத நிலை. மறைமுகமாக அல்லது தெரிந்த நபர்களிடம் சொல்லி தங்கள் குமுறலைத் தீர்த்துக் கொள்கிறார்கள்."விஜய்க்கு இந்தப் படம் தோல்வியாக அமைய வேண்டும் என்று நாம் கூறவரவில்லை. நிச்சயம் அவரைப் போன்ற நடிகர்களுக்கு இந்த நிலை வரக்கூடாது. காரணம் ரஜினிக்கு அடுத்து அல்லது இணையான மாஸ் ஹீரோ விஜய்தான்.
ஆனால் இன்று உச்ச நட்சத்திரங்களுள் ஒருவராகத் திகழும் விஜய், தனது சராசரிக்கும் குறைவான ஒரு படத்தை, வெற்றிப் படம் என்று பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதற்கான காரணங்களைச் சிந்திக்க வேண்டும்" என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத, வேட்டைக்காரன் படத்தின் முக்கிய விநியோகஸ்தர் ஒருவர்.இனிமேல் கதை அம்சம் இல்லாவிட்டால் யாருடைய படமாக இருந்தாலும் தப்பாது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். இனியாவது விஜய் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்க வேண்டும் என்கிறார் அவர்.
No comments:
Post a Comment