தமிழீழ தேசிய தலைவரின் மகள் துவாரகாவின் இறந்த உடல் புகைப்படமாக தற்போது வெளியாகியுள்ளது. இறுதிப் போர் நடைபெற்ற கால கட்டத்தில் காயப்பட்ட போராளிகளுடன் துவாரகாவும் சரணடையச் சென்றதாகக் கூறப்படுகிறது.
சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள், மற்றும் ஜ.நா வின் பிரதிநிதிகள் அங்கு பிரசன்னமாகியிருப்பதாக விடுதலைப் புலிகளுக்கு கூறப்பட்டுள்ளது. இதனையடுத்தே புலித்தேவன், மற்றும் ப.நடேசன் ஆகியோர் வெள்ளைக் கொடியுடன் சென்றுள்ளனர். பார்ப்பவர் இரத்தம் உறையும் வகையில் இக்கொலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள், மற்றும் ஜ.நா வின் பிரதிநிதிகள் அங்கு பிரசன்னமாகியிருப்பதாக விடுதலைப் புலிகளுக்கு கூறப்பட்டுள்ளது. இதனையடுத்தே புலித்தேவன், மற்றும் ப.நடேசன் ஆகியோர் வெள்ளைக் கொடியுடன் சென்றுள்ளனர். பார்ப்பவர் இரத்தம் உறையும் வகையில் இக்கொலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிறிதொரு இடத்தில் இவ்வாறான சூழ்ச்சி சதிவலை காரணமாக பாலச்சந்திரன் உட்பட, துவாரகாவையும் இலங்கை இராணுவத்தினர் கொடூரமாக கொலைசெய்துள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி இந்தப் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. துவாரகா என நம்பப்படும் இந்த உடல் நிர்வாணமாக்கப்பட்டு உள்ளதால், இப்புகைப்படதை நாம் முழுமையாக வெளியிட முடியவில்லை.
சர்வதேசத்தின் சதிவலையில், சிக்கி இறுதிநேரத்தில் இவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என தற்போது அஞ்சப்படுகிறது. இதில் இந்தியா பெரும் பங்கு வகித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இவ்வளவு நாள் கழித்து ஏன் தற்போது இந்தப் படம் வெளிவரவேண்டும் என்ற சந்தேகங்கள் மேலோங்கியுள்ளன. குறிப்பாக தமிழர்களைக் கவர சரத் பொன்சேகா தற்போது புலிகளின் தலைவர்களைச் சுடச்சொன்னது கோத்தபாய தான் என்று கூறிக் கொள்கிறார். தம்மிடம் தவறு இல்லை என்பது போன்ற தோற்றப்பாட்டை வெளிப்படுத்த முயல்கிறார்.
இன் நிலையில் சிங்கள இராணுவத்தினரின் கையடக்கத் தொலைபேசியில் பதிவாகியதாகக் கூறப்படு சில படங்களையும், மற்றும் வீடியோக்கள் சிலவற்றையும், சிலர் கசிய விட்டுள்ளனர் என்பதே உண்மை.
இதுபோல பல வீடியோக்கள் இலங்கை இராணுவத்தால் எடுக்கப்பட்டுள்ளதாக தற்போது அறியப்படுகிறது. அனைத்தும் போர்க்களத்தில் இறுதி நாட்களில் எடுக்கப்படவை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இது உண்மையிலேயே துவாரகாவின் படமா என்பதை சுயாதீனமாக உறுதிசெய்ய முடியவில்லை, அவருடைய மூக்கு மற்றும் புருவம் போன்ற உருவ அடையாளங்கள் சில ஒத்துப்போவதையே இந்த உடலம் காட்டி நிற்கிறது. துவாரகா என்று கூறப்படும் இவ் உடலம் நிர்வாணமாக்கப்பட்டு, கொலைசெய்யபட்டுள்ளமையானது ஒரு ரத்தவெறிபிடித்த சிங்கள காடையரின் மனப்போக்கை நமக்கு உணர்த்தி நிற்கிறது. தமிழ்ப் பெண்களை நிர்வானப்படுத்தி அவர்களை மானபங்கப்படுத்தி சிங்கள இனம் காட்டும் குரோதம் சொல்லில் அடங்காதவை, வார்த்தையால் விவரிக்க முடியாத கொடுமை. சரணடைய வந்தவர்களை ஈவு இரக்கமின்றி கொலைசெய்யும் சிங்கள வெறியர்களுடனா நாம் இனியும் சமஷ்டி தீர்வு என்றும், ஒன்றுபட்ட இலங்கையில் வாழ்வோம் என்றும் நினைக்க முடியும் ?
ரத்தம் உறைகிறதா நாம் தமிழனாகப் பிறந்து பட்ட துன்பங்களை ஒரு நிமிடம் நினைத்துப் பார்க்கிறோமா ?
பிரிவுகளிலும் பிளவுகளிலும் ஊறி நிற்கிறோமே அன்றி ஒற்றுமையாக , சிங்களவனை எதிர்க்க இன்னும் தயாரில்லை, இன்னும் எத்தனை எத்தனை எம்குலப் பெண்களின் , சிறுவர்களின் இளைஞர்களின் உடலங்களைப் படமாகக் காட்டப் போகிறதோ சிங்களம், இன்று இந்த நாள் ஒரு உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள் ! தமிழனாக நாம் பிறந்ததால் பட்ட கஷ்டங்கள் போதும், தடைகளை உடைத்து தமிழீழம் காண நாம் ஒன்றுபட்டு செயப்படுவோம் என்று, புலம் பெயர் நாட்டில் உள்ள அனைத்துத் தமிழர்களும் தமது பிள்ளைகளுக்கு எமது போராட்டம் பற்றிய வரலாற்றை சொல்லி வளர்க்கவேண்டும், புலம்பெயர் நாடுகளில் உள்ள அனைத்து தமிழ் கல்வி நிலையங்களிலும் வரலாற்றுப் பாடம் புகட்டப்படவேண்டும், அதில் எமது போராட்ட வரலாறு கற்பிக்கப்படவேண்டும், இன்று நாம் இல்லையேல் எமது பிள்ளைகள் தமிழீழ போராட்டத்தைக் கொண்டுசெல்லவேண்டும் ! இன்று தொடக்கம் 50 ஆண்டுகள் ஆனாலும் சரி போராட்டம் ஒன்று புதிதாக ஆரம்பமாகவேண்டும் ! அதுவே நாம் எடுத்துக் கொள்ளும் உறுதிமொழியாகும்.
No comments:
Post a Comment