பிரபல காமெடி நடிகர் கஞ்சா கருப்பு, சிவகங்கையை சேர்ந்த சங்கீதா என்ற டாக்டரை மணக்கிறார். வரும் 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம்தேதி இவர்கள் திருமணம் நடக்கிறது.
தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் தனக்கென தனியிடம் பிடித்தவர் கஞ்சா கருப்பு. இவர் பள்ளிப் படிப்பும் இல்லாதவர். அடிக்கடி தன்னைச் சந்தி்க்கும் பத்திரிகையாளர்களிடம், "நான் மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்குனதில்லண்ணே..." என்பார்.
கருப்பு படிக்விட்டாலும் அவருக்கு வரப்போகும் மனைவி ஒரு பிஸியோதெரபி டாக்டர். சமீபத்தில் இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களது திருமணம் ஜனவரி 27ம்தேதி நாட்டரசன் கோட்டையில் உள்ள கோயிலில் நடைபெற உள்ளது.
திருமணம் முடிந்ததும் கையிலுள்ள படப்பிடிப்புகளை முடித்துவிட்டு, மனைவியுடன் ஹனிமூனுக்கு வெளிநாடு போகிறாராம் கஞ்சா கருப்பு.
No comments:
Post a Comment