Tuesday, November 10, 2009

பிரபாகரனின் இருப்பு மற்றும் உயிர்ப்பு சர்ச்சையானது தமிழின அறிவீனத்தின் வெளிப்பாடே.

ஒரு தலைவனின் வெற்றியானது எத்தனை எதிரிகளை அழித்தான் என்பதல்ல. "எத்தனை மக்களை போராடவைத்தான்" என்பதிலிருக்கிறது "தலைவனின் ஆளுமையும் வெற்றியும்" புரிகிறது.

"அன்றும் சரி, இன்றும் சரி, தமிழரின் உணர்வுகளை, அவர்களது வாழ்நிலை அவலங்களை,
அவர்களது தேசிய அபிலாசைகளைச் சிங்களப் பெரும்பான்மை இனம் புரிந்து கொள்ளவில்லை.
புரிந்து கொள்ள எத்தனிக்கவுமில்லை. புரிந்து கொள்ளும் ஆற்றலும் அறிவுத் திறனும்
ஆன்ம பக்குவமும் அவர்களிடம் இருப்பதாகவும் தெரியவில்லை... சிங்கள மக்களின் மகாவம்ச
மனவமைப்பில், அவர்களது சமூகப் பிரக்ஞையில், அவர்களது அரசியற் கருத்துலகில்
அடிப்படையான மாற்றம் நிகழுமென நாம் எதிர்பார்க்கவில்லை. சிங்கள - பௌத்த
மேலாண்மைவாதத்தின் வீச்சும் வலுவும் தணிந்து போகவில்லை. மாறாக, அது புதிய, புதிய
வடிவங்களை எடுத்துப் புத்துயிர்பெற்று வருகிறது... "

தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள்

  • தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் மாவீரர் நாளில் வரவேண்டும் அவர் வெளிப்பட்டு வருவார் என்று உறுதி கூறுவதும் அடம்பிடிப்பதெல்லாம் சிறுபிள்ளைத்தனம். ஒரு தனி மனிதனின் தோளில் சுமையை ஏற்றி வைத்துவிட்டு சுகம் காணும் சோம்பேறித்தனம்.

நடந்து முடிந்த முள்ளி வாய்க்கால் மனித நரபலி வேட்டைக்கு பின்னும் தமிழினம் தமது கடமையை இன்னும் உணர்ந்தபாடில்லை.
ஒரு தலைவனின் வெற்றியானது எத்தனை எதிரிகளை அழித்தான் என்பதல்ல. எத்தனை மக்களை போராடவைத்தான்.,எத்தனை மக்களை சுயாதினமாக களம் அமைத்து தனக்கு பின்னும் போராட உருவாக்கினான் , எத்தனை மக்களை சுதந்திரமாக வாழ தகுதிப்படுத்தினான் என்பதிலிருக்கிறது. தலைவரின் பின்னால் மொத்த வன்னி மக்களும் உலகத்தமிழினமும் சென்றதை பார்க்கும் போது தலைவனின் ஆளுமையும் வெற்றியும் புரிகிறது.உலக அரசியல், பொருளாதார,சமூக,பிராந்திய நலன் சார்ந்த கூறுகளை உள்வாங்கிக்கொண்டு நமது இலட்சியமான ஈழ விடுதலையை ,தற்சமயத்தில் உலக வல்லாதிக்க சக்திகளின் முறுகல் மற்றும் பிணைவுகளின் ஊடாக நகர்த்தி செல்லவேண்டும்.விடுதலை போராட்டங்கள் யாவும் பயங்கரவாதமாகி போன இக்காலத்தில் ஆயுத போராட்டத்திற்கான தளமானது சுருங்கி போய்கிடக்கிறது.அமெரிக்க இந்தியா உட்பட ஏனைய பிற அரசுகளும் இன்னும் புலிகளை பயங்கரவாதியாகத்தான் பார்க்கிறது.

  • ஆயுத போராட்டமானது இப்போதைக்கு ஈழ விடுவிற்கு எதிராகவே அமையும் போல தெரிகிறது .என்றாலும் நமது மாவீரர்களின் தியாகத்தையும் தீரத்தை போற்ற வேண்டியது நம் கடமை. ஈழவிடுதலை போராட்டமானது காந்திய வழியில் பயணித்து ஆயுத வழியில் உரமேறி விசுவரூபமேத்த போது உலகமே ஒருவித கலக்கத்தோடு நம்மை பார்த்தது.அது மற்ற தேசிய இனங்களையும் உசிப்பிவிடுமோ என்று உலகமே அஞ்சியது.வல்லாதிக்க சக்திகள், தமது அழுத்தத்திலிருக்கும் தேசிய இனங்கள் விடுபட எத்தனிகுமோ என்று மிரண்டன. தத்தமது தேச எல்லைக் கோடுகளை மாற்றி வரைய வேண்டிவருமோ என பயந்தன. போராட்டத்தின் நோக்கம் உண்மையானது உயர்வானது என தெரிந்து கொண்டே கண்ணை மூடிகொண்டன. சிங்களமும் இதை சரியாக புரிந்து கொண்டு சதிராட்டம் ஆடிவிட்டது. அதனாலேயே தான் , நாம் பார்த்த காந்திய , கம்யூனிச , முதலாளித்துவ, புத்த ,நவ நாகரீகாக தேசங்கள் அவற்றுக்கிடையேயான முறுகலை ஒதிக்கிவிட்டு ,தத்தமது அடிப்படை தேசிய கட்டுமான கொள்கை கோட்பாடுகளை புறந்தள்ளிவிட்டு புலிகள் ஒழிப்பு என்ற ஒரே புள்ளியில் நின்றன.

இதையேதான் தமிழீழதேசியத்தலைமையும் உள்வாங்கிக்கொண்டு தங்களை தாங்களே சுருக்கிகொன்டார்கள்.தமிழீழ விடுதலைப் புலிகளின் பின்வாங்கல் என்பது ஒரு நேர்த்தியான தொலை நோக்குடன் நன்கு சிந்த்தித்து செயல் படுத்திய ஒரு நிகழ்ச்சியாகத்தான் தெரிகிறது. எந்த அளவிற்கு அவர்களின் விசுவரூபம் எதிரியை மிரட்டியதோ அந்த அளவிற்கு ஒரு படி மேல போய் இன்று அவர்களின் ஒடுங்களும் ,சுருங்கலும் எதிரியை மிரட்டிக்கொண்டே இருக்கிறது.புலிகளே தமது ஆயுதத்தை மௌனித்து விட்டார்கள்.அவர்கள் தமது லட்சியத்தை அடைய போராட்டத்தையும் போராட்டதலைமையையும் மக்களிடமே கொடுத்துவிட்டார்கள். இன்றைய உலக ஒழுங்குக்கேற்ப எந்த நாட்டோடும் தொடர்பேற்படுத்தி பணியாற்ற கூடிய ஒரு உலகந்தழுவிய அமைப்பாக .ஒன்றை உருவாக்கி அதனூடாக நமது பெருவிருப்பையும், விருப்பின் நியாயத்தையும் . உலகத்திற்கு எடுத்துரைக்க வேண்டும் என்று நினைத்தார் போல தெரிகிறது. அதுவும் ஓரளவு வெற்றியடைந்திருக்கிறது. உலகும் போராட்டத்தின் நியாயத்தை விளங்கிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறது. இந்தளவில் இது புலிகளுக்கு மிக பெரிய வெற்றியே.புலிகளும் எதிரியின் கண்களுக்கு தெரியாமல் நின்று களமாடுகிறார்கள். போரின் வீச்சானது எதிரியை கடுமையாக தாக்குவது வெளிப்படையாகவே தெரிகிறது. எதிரியும் வாயில் நுரை தள்ள மூச்சிரைக்க திக்குதெரியாமல் அலைகிறான் . மேலும் மேலும் தவறு செய்கிறான்.. குற்றவாளியாக நிற்கிறான். எந்த சமுகம் நம்மை தூற்றியதோ அது இன்றைக்கு போற்றுகிறது. உலகம் இப்போது நம்மை திரும்பி பார்க்கிறது. இந்த நிலைபாடுதான் இப்போதைக்கு நமது இலக்கைஅடைய சரியானதாக தெரிகிறது.

மற்றபடி தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் மாவீரர் நாளில் வரவேண்டும் அவர் வெளிப்பட்டு வருவார் என்று உறுதி கூறுவதும் அடம்பிடிப்பதெல்லாம் சிறுபிள்ளைத்தனம். ஒரு தனி மனிதனின் தோளில் சுமையை ஏற்றி வைத்துவிட்டு சுகம் காணும் சோம்பேறித்தனம். ஒரு புலி உயிரோட இருப்பது தெரிந்தாலும் சிங்கள வேதாளம் பயங்கரவாத கூச்சலோடு மறுபடியும் முருங்கை மரம் ஏறும். மற்ற வல்லாதிக்க வேதாளமும் அதனை பின்தொடர்ந்து ஓடும்.

  • ஒரு தலைவனின் வெற்றியானது எத்தனை எதிரிகளை அழித்தான் என்பதல்ல. எத்தனை மக்களை போராடவைத்தான்.,எத்தனை மக்களை சுயாதினமாக களம் அமைத்து தனக்கு பின்னும் போராட உருவாக்கினான் , எத்தனை மக்களை சுதந்திரமாக வாழ தகுதிப்படுத்தினான் என்பதிலிருக்கிறது. தலைவரின் பின்னால் மொத்த வன்னி மக்களும் சென்றதை பார்க்கும் போது தலைவனின் ஆளுமையும் வெற்றியும் புரிகிறது.
  • எதோ ஒரு தேவன் வந்து நம்மை மீட்பான் என்று எண்ணியிராமல் பொதுவான வேலை திட்டத்தில் நமக்கான பணியினை செய்ய முயலவேண்டும். தமிழகத்தில் தனி மனித துதியிலே நாம் மூழ்கிகிடப்பதால் தலைவரும் போராளிகளும் சொல்லும் செய்தி புரியாமலே போய்க்கொண்டிருக்கிறது. கலி முற்றும் போது கிருஸ்ணர் வருவார்.அதர்மத்தை அழிக்க இறைவன் வருவான் என்று சோம்பியிராமல் மானமுள்ள அறிவுள்ள மக்களாக நாம் போராட்டத்தை தோளில் ஏந்த வேண்டும். இல்லையேல் வரலாறு நம்மை மன்னிக்காது.

நமக்கு உலக பார்வை வரவேண்டும். நமது கிணற்று தவளை வாழ்க்கையே நமது இந்த நிலைக்கு காரணம்.நாம் தமிழனின் கண்கொண்டுதான் உலக நடப்புகளை பார்க்கவேண்டும். நமக்கான தெரிவுகளை பெற்றுக்கொள்ள வேண்டும். இந்தியா எக்காலத்திலும் ஈழவிடுதலையை ஆதரிக்காது.

  • ஜயா நெடுமாறன், போர்வாள் வை.கோ, சகோதரன் சீமான்,டாக்டர் இராமதாஸ்,தொல் திருமாவளவன், மற்றும் தமிழக ஆதரவுச்சத்திக்களை நாம் மதிக்கின்றோம். அவர்கள் தமிழீழ விடுதலைக்கு ஆற்றும் பணிக்கு தலைவணங்குகின்றோம். ஒருபோராளி செய்த தியாகங்கள் போல் மேற்சொன்னவர்கள் செய்த செய்யும் பணிகளை நாம் என்றும் மதிக்கின்றோம் போற்றுகின்றோம். அவர்களை எம் நெஞ்சிருக்கும் வரை நினைவில் நிறுத்தி வைத்திருப்போம். ஆனால்......? அவர்களால் ஈழவிடுதலை வெற்றிகொள்ளப்படும் என்ற மாயைத் தோற்றத்தை நாம் நிதானமாக மீள் பரிசீலனை செய்யவேண்டும்.

இந்திய தமிழக ஆட்சியாளர்கள் எக்காலத்திலும் ஆதரிக்கமாட்டார்கள் என்பதை தெளிவாக உள்வாங்கிக்கொண்டோமானால் நமது பாதையமைப்பு தெளிவாகவும் விரைவாகவும் இலக்கை அடையும்

No comments:

Post a Comment