Thursday, November 5, 2009

கலைஞருக்கு அமைச்சர் எழுதிய கண்ணீர் கடிதம்!

""ஹலோ தலைவரே... நடிகர் சங்கத்தில் போன 30-ந் தேதியன்னைக்கு செயற்குழு கூட்டம் நடந்தது.''
""மாதாமாதம் வழக்கமா நடக்குறதுதானே...
""இந்த மாத செயற்குழுவின் முக்கிய நோக்கமே, வாய்க்கொழுப்பு நடிகர்-நடிகைகள் மேலே ஊர் ஊருக்குப் பத்திரிகையாளர்கள் போட்டு ருக்கிற கிரிமினல் வழக்குகளை எப்படி சமாளிக்கிறதுங்கிறதுதான். நடிகை ஸ்ரீப்ரியா தன் பங்காக 1 லட்ச ரூபாய் தர்றேன்னு சொல்ல, மீதித் தொகை பற்றி பேச்சு வந்திருக்குது. அப்ப நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், ஏற்கனவே வழக்கு செலவை ஏற்றுக்கொள்வதா உத்தரவாதம் கொடுத்த சூர்யா, மிச்சப் பணத்தைத் தர ஒத்துக்கொண்டு விட்டார்னு சொல்லியிருக்கிறார். கமலின் திரையுலக 50-ஆம் ஆண்டுக்காக விஜய் டி.வி. நடத்திய பிரம்மாண்ட விழாவுக்கு நடிகர் சங்கத்துக்கு ஒரு இன்வி டேஷன்கூட கொடுக்காத நிலையில் நடிகர் சங்கம் சார்பில் நீங்க எப்படி அதில் கலந்துக்கலாம்னு சரத்குமாரிடம் சக நடிகர்-நடிகைகள் கேட்க, தப்புதான்னு சொல்லி மன்னிப்பு கேட்டி ருக்கிறார் சரத். இதற்கிடையில், நடிகர் விஜயகுமார் நானும் சினிமாவுக்கு வந்து 50 வருசமாச்சு. எனக்கு ஏன் விழா எடுக்கலைன்னு கோபப்பட்டி ருக்கிறார்.''

""குணசித்திர நடிகரான விஜயகுமாருக்கு காமெடிகூட நல்லா வருதே!''
""நடிகர் சங்கத்தில் கிளம் பிய எல்லாக் கேள்விகளையும் சமாளித்த சரத்துக்கு நெல்லையில் நடந்த சமத்துவ மக்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்திலும் கட்சி நிர்வாகிகள் கிட்டேயிருந்து சரமாரியான கேள்விகள். எல்லாவற்றையும் சமாளித்துப் பதில் சொல்லி சமாதானப் படுத்திட்டார். கூட்டம் முடிந்து வரும்போது நம்மகிட்டே, கோடிகோடியா செலவு பண்ணி அரசியல் நடத்த முடியாது. கூட்டணி அரசியல்தான்னு காதை கடிச்சிட்டுப் போனார்.''
""வீட்டு வசதி வாரியத்துக் குச் சொந்தமான இடத்தை சீனியர் அமைச்சர் துரை முருகன் விதிகளுக்குப் புறம்பா தன்னோட குடும்பத்தாரோட பெயரில் வாங்கி யிருப்பதை யும் இது முதல்வருக்குத் தெரிந்து கண்டித்ததோடு, நிலத்தை திருப்பிக்கொடுக்கவும் உத்தரவிட்டாருன்னு நாம பேசியிருந்தோம். நிலத்தை அரசாங்கத்திடமே ஒப்படைச்சிட்டாராமே துரைமுருகன்.''""தன் குடும்பத்தார் பெயரில் வாங்கிய நிலங்களை மட்டும்தான் துரைமுருகன் திருப்பிக் கொடுத்திருக் காருன்னும் மற்றவங்க பெயரில் வாங்கிய நிலங்களை கொடுக்கலைன்னும் முதல்வருக்கு மறுபடியும் புகார் போயிருக்குது. டென்ஷனான கலைஞர் உடனே மத்திய இணையமைச்சர் ஜெகத்ரட்சகனை வரச்சொல்லிவிட்டார். அவர்கிட்டே, இனி துரைமுருகன் அதிகம் என்னை பார்க்க வரவேணாம்னு நீங்களே சொல்லிடுங்கன்னு சொல்லி அனுப்பியிருக்கிறார். இதை ஜெகத் போய் சொன்னதும் நொந்துபோன துரைமுருகன், உன்னை தலைவர்கிட்டே அறி முகப்படுத்தி சீட் வாங்கிக் கொடுத்ததே நான்தான். என்கிட்டே நீயே வந்து தலை வரைப் பார்க்க வரவேண் டாம்னு செய்தி சொல் றே.. நேருவை மா.செ. வாக்க சிபாரிசு செய் தவரே கோ.சி.மணி தான். அவரை மா.செ. பதவியிலிருந்து ஒதுங் கிக்கும்படி நேரு மூலமே சொல்லி அனுப்பினார் ஸ்டாலின். நிலைமை எப்படி இருக்குது பார்த்தியான்னு கண் கலங்கி, அந்தக் கண்ணீரோடே கலைஞருக்கு கடிதமும் எழுதி யிருக்கிறார் துரைமுருகன்.
""என்ன எழுதியிருக் காராம்?''
""ரொம்ப உருக்கமா ஆரம்பித்திருக்கும் துரைமுருகன், என்னோட மந்திரி பதவியை வேண்டும்னாலும் எடுத்துக் குங்க. பார்க்க வரவேண்டாம்னு மட்டும் சொல் லிடாதீங்க. நான் உயிரோட இருக்கவே மாட்டேன்னு எழுதி யிருக்காராம். கடி தத்தைப் படிச்ச கலைஞர், அதைப் பற்றி யோ சித்துக்கிட்டிருக்கும்போது, பா.ம.க நிறுவனர் ராமதாஸின் பேட்டி ஒன்றை தமிழ் ஓசை பத்திரிகையில் படித் திருக்கிறார். அதில், துரைமுருகன் சட்டம் படித்த அறிவாளி. பொதுப்பணித்துறையை இரண்டாகப் பிரிப்பதா செய்திகள் வருது. அதை அவருக்குத் தரணும்னு ராமதாஸ் சொல்லியிருந்தார். இது கலைஞரின் கவ னத்துக்குப் போனதையறிந்த துரை முருகன், என்னய்யா இந்த டாக்டரு.. நம்மை புகழுற மாதிரி பேசி, வெடிகுண்டை வீசி காலி பண்ணிட்டாரேன்னு இன்னமும் நொந்து போயிட்டாராம். தமி ழகத்தில் எங்கெங்கே அகதி முகாம் இருக்கு தோ அந்த மாவட்ட அமைச்சர்களை யெல்லாம் அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்திய முதல்வர், வேலூரில் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கான முகாம் இருந்தும் அந்த மாவட்ட மந்திரியான துரைமுருகனை இந்த கூட்டத்துக்கு அழைக் கலை.''""துரைமுருகனுக்கு கலைஞர் கொடுத்து வரும் ஷாக், மற்ற மந்திரிகளையும் அதிர வைத்திருக்குமே?''""சீனியர் மந்திரிகளின் பி.ஏ.க்களும் அரசாங்க காரைப் பயன்படுத்துவதோடு, மந்திரிகளின் வீட்டிலும் அரசாங்க கார் பயன்படுத்துறது வழக்கம். ஒரு சீனியர் மந்திரி தன்னோட பி.ஏக்கள் பயன்படுத்திய கார்களையும் வீட்டில் ஓடிக்கிட்டிருந்த காரையும் திருப்பி அனுப்பிச்சிட்டாரு. ஏற்கனவே, மரங்கள் நிறைந்திருக்கிற டிபார்ட்மென்ட்டின் மந்திரி 3 கார்களை பயன்படுத்துறதோடு, அரசாங்க கெஸ்ட் ஹவுசில் தன் குடும்பத்தினரை மாதக் கணக்கில் தங்க வைத்திருக்கிறாருன்னு முதல்வருக்குத் தெரியவந்து சத்தம்போட, அந்த மந்திரி கார்களைத் திருப்பிக்கொடுத்து, கெஸ்ட் ஹவுஸை காலி பண்ணினார். சிக்கன நடவடிக்கையை முதல்வர் விரும்புறார்னு தெரிஞ்ச சீனியர் மந்திரி, கார்களை திருப்பி அனுப்ப, மற்ற மந்திரிகளும் அவர் வழியில் செயல்பட ரெடியாயிட்டாங்க.''""பயத்திலாவது நல்லது நடக் கட்டும்.''""பொதுப்பணித்துறையை இரண்டா பிரித்து கட்டிடங்களுக்கு ஒரு துறையும், நீர்ப்பாசனத்திற்கு ஒரு துறையும் உருவாக்கப்படுது. அதில் ஒன்று அழகிரி சிபாரிசு செய்யும் ஐ.பெரியசாமி அல்லது பெரியகருப்பன் இருவரில் ஒருவருக்கும், இன்னொன்று ஸ்டாலின் சிபாரிசு செய்யும் நேருவுக்கும் கிடைக்கும்னு கோட்டை வட்டாரத்தில் பேச்சு.''""திருப்பதிக்கு வந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு தரப்பட்டிருக்குதே... தன்னுடைய போர்க் குற்றங்களும், மனிதப் படுகொலைகளும் அம்பலத்துக்கு வரக்கூடாதுன்னுதான் திருப்பதி வெங்கடாஜலபதிகிட்டே ராஜபக்சே வேண்டிக்கிட்டாரோ!''""நேபாளத் தலை நகர் காட் மாண்டிலிருந்து திருப்பதி கோயிலுக்கு 81 பேரோடு வந்த ராஜபக்சேவுக்கு ஆந்திரா மந்திரி கல்லா அருணா குமாரி ரேணிகுண்டா வில் மாலை போட்டு வரவேற்பு கொடுத்தார். அங்கிருந்தே கிட்டத் தட்ட ராணுவ அணிவகுப்பு மாதிரிதான் மரியாதை. திருப்பதிக்கு நுழையுற செக்போஸ்ட்டிலிருந்து கோயில் வரைக்கும் எந்த வாகன நட மாட்டமும் இல்லை. காத்துக்கிடந்த பக்தர்களையும் தரிசனத்துக்கு அனுமதிக்கலை. கோயில் அர்ச்சகர் களுக்கு 50ஆயிரம் ரூபாய் தட்சணையும் உண்டியலில் 1 லட்ச ரூபாயும் போட்டு சாமி கும்பிட்டார் ராஜபக்சே. அவரும் அவரோட பரிவார மும் திருப்பதி மலையிலிருந்து திரும்ப 5 மணிநேரம் எடுத்துக்கிட்டதால அதுக் கப்புறம்தான் பக்தர்களால் பகவானை சேவிக்க முடிந்தது. மதியம் 3 மணியிலிருந்து காத்திருந்த பக்தர்கள் நைட்டு 11 மணிக்குத்தான் சாமி கும்பிட்டாங்க. 3 மணிக்கு பிறகு க்யூவில் காத்திருந்த பக்தர்கள், சன்னதியை நெருங்க நள்ளிரவாயிடிச்சி. நடை பூட்டப்பட்டதால் மறுநாள் காலை வரையிலும் காத்திருந்து சாமி கும்பிட்டாங்க.''""தமிழர்களை முள்வேலிக்குள் அடைத்து வச்ச ராஜபச்சே, திருப்பதி பக்தர்களையும் கம்பி போட்ட க்யூவுக்குள் அடைச்சு வச்சிட்டாரா?''""அவர் இங்கே வந்திருந்த நாளில் கொழும்பு பம்பலப்பட்டியில் தமிழ் இளைஞரான சிவக்குமாரனை சிலர் வம்புக்கிழுக்க, அவர் பதிலுக்கு கல் வீசினார். அது சாலையில் சென்ற சிலர் மீது பட்டுவிட்டது. உடனே சிவ குமாரனை பைத்தியம்னு பட்டம்கட்டி போலீஸ் விரட்ட, அவர் கடல்பகுதிக்குப் போனார். அவரை போலீசும் சிங்களவர்களும் சேர்ந்து கடலி லேயே அடிச்சுக் கொன்னுட்டாங்க. அந்த இளைஞர் கையெடுத்துக் கும்பிட்டுக் கெஞ்சி யும் மனமிரங்காமல் சிங்கள போலீசார் ஈவிரக்கமின்றி கொன்றது வீடியோவில் பதிவாகியிருக்கு. சிங்களப் போலீசாரின் இந்த காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்து கொழும்பு தமிழ் எம்.பி. மனோகணேசன் போராட் டங்களை முன்னெடுத்திருக்கிறார்.''""தமிழக போலீசாரெல்லாம் மக்களின் உயிரையும் உடைமையையும் காப்பாற்றுவதற் காக கடமையாற்றுவதா முதல்வர் பாராட்டு அறிக்கை வெளியிட்டிருக்கிறாரே..''""அந்த அறிக்கையை பெருசு பெருசா ஜெராக்ஸ் போட்டு எல்லா போலீஸ் ஸ்டேஷனிலும் ஒட்டிவைத்திருக்காங்க. எல்லாக் காவலர்களும் அதைப் படிக்கணும்னு சொல்லப்பட்டிருக்குங்க தலைவரே..''""நள்ளிரவில் கலைஞரை கைது செய்த போலீஸ் அதிகாரிகள், பொய் வழக்குப் போட்ட போலீஸ்காரர்கள், பத்திரிகை ஆசிரியர் மீது பொடாவை ஏவிய காவல்துறை அதிகாரிகள் இவங்களும் இந்த அறிக்கையை ஒட்டி வச்சிருக்காங்களா?''

தமிழகத்தில் உள்ள அகதி முகாம்களின் அடிப்படைத் தேவைக் காக 12 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டிருப்பதுடன், அகதி முகாம் களை அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு முதல்வரிடம் அறிக்கை அளிக்கும் பணியும் வேகமெடுத்திருக்கிறது. இதற்காக நடந்த அமைச்சர்கள்-அதிகாரிகள் கூட்டத்தில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். பேசும்போது, அகதிகள்.. அகதிகள்.. என்று மூச்சுக்குமூச்சு சொல்ல.. முதல்வர் குறுக்கிட்டு, ""என்ன அகதிகள்? இலங்கைத் தமிழர்கள்னு சொல்லுங்க'' என்றதும், அமைச்சர் திருத்திக்கொண்டார்.மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, குடும்பத்தினருடன் இந்தோ னேஷியா நாட்டிற்குப் பயணம் செல்கிறார்.இளைஞர் காங்கிரசுக்கு தேர்தல் நடத்தியதுபோல காங் கிரஸ் இயக்கத்திற்கும் புதிய உறுப்பினர்களை சேர்த்து தேர்தல் நடத்தி நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும் என முடிவெடுக்கப் பட்டுள்ளதால் வரும் 10-ந் தேதி முதல் மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், மாநில காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் இதற்கான பணியில் ஈடுபடவேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார் சோனியா.தேடப்பட்டுவரும் முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா ஊட்டி, கொடைக் கானல்களில் எஸ்டேட்டு களும், கோவை பகுதியில் பங்களாக்களும், ஈரோடு பகுதியில் தோட்டங்களும் வாங்கிப் போட்டிருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள் சி.பி.சி.ஐ.டியினர். இவற்றில் பெரும்பாலானவை அவரது இரண்டாவது மனைவி உமா மற்றும் உமாவின் உறவினர்கள் பெயர்களில் பதிவாகியுள்ளதாம்.கப்பல் போக்குவரத்து துறை திருப்திகரமாக இல்லாததாலும் நிறைய பிரஷர்கள் வருவதாலும் ஜி.கே.வாசன் வேறு துறையை விரும்புகிறார் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. வாசனோ தனக்கு நெருக்கமானவர்களிடம், ஏற்கனவே பல போஸ்டிங்குகள் போடப்பட்டிருக்கின்றன. மாற்றங்கள் செய்தால் கலைஞர் வருத்தப்படுவார். அதனால் நான் எதுவும் செய்வதில்லை என்றிருக்கிறார். இதனிடையே, மாநிலத்தலைவர் பதவியை வாசனுக்கு கொடுத்துவிட்டு, அமைச்சர் பதவியை எடுத்துக்கொள்ள மேலிடம் தீர்மானித்திருப்பதாக செய்திகள் கசிய, அப்படி எந்தத் தகவலும் மேலிடத்திலிருந்து வரலையே என்கிறது வாசன் தரப்பு.நவம்பர் 6-ந் தேதி கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கருத்தரங்கில் கலைஞரும் சரத்பவாரும் கலந்துகொள்கிறார்கள். அப்போது கலைஞருக்கு கருப்புக் கொடி காட்ட அ.தி.மு.க ஆதரவு பெற்ற விவசாய சங்கங்கள் தயாராகி வருகின்றன.நவம்பர் 1-ந் தேதி மதுரையில் தி.மு.க பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்தபோதும் அதற்கு முதல்நாள் (அக்டோபர் 31) அதே மதுரையில் ப.சி. ஏற்பாட்டிலான காங்கிரஸ் பொதுக்கூட்டத்துக்கு போலீஸ் அனுமதி கொடுத்திருந்தது. இது தி.மு.க.வுக்கு எதிரான கூட்டம் என போலீசுக்கு யாரோ பீதியைக் கிளப்ப, காக்கிகள் குழம்பிப்போயிருந்தனர். ஒருவழியாக தி.மு.க கூட்டம் ரத்தானது. காங்கிரஸ் கூட்டமோ இந்திரா காந்தியின் நினைவுதின கூட்டமாக நடந்தது. அப்புறம்தான் காக்கிகளுக்கு நிம்மதி.




No comments:

Post a Comment