பாழாகிறது சமூக ஒழுங்கு இது போன்ற குஜால் குமாரிகள் ஒவ்வொருவரும் இளம் வயதிலேயே அனைத்து சல்லாப சுகங்களையும் அனுபவித்து முடித்தபின், நல்ல பிள்ளை போல் நடித்து இன்னொரு விட்டில் பூச்சி ஆணைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள். "பேஷான ஜாதகம் போங்கோ. தசவிதப் பொருத்தமும் என்னமா அமைஞ்சிருக்கு" என்று புருடா விடும் ஜோசியனை நம்பியும், "அப்படியே மகாலட்சுமி மாதிரி இருக்காள்" என்று அசடு வழியும் கிழங்களின் சொற்படியும், ஒன்றையும் விசாரிக்காமல் இந்த ஜல்சா குமாரிகளை மணந்து கொள்ளப்போகிறார்கள் சில முட்டாள் ஆண்கள்.
இந்தப் பெண்களோ பழைய சல்லாபங்களை மறக்க முடியாததால் இல்லற வாழ்வில் மனம் பதிக்க மறுத்து கணவன் வீட்டிலிருந்து ஓட்டம் பிடித்துவிட்டு, அவனிடமிருந்து பணம் கறப்பதற்காக, "என் கணவனுக்கு ஆண்மை போதவில்லை. நான் செக்ஸில் திருப்தியே அடையவில்லை. அதனால் கணவன் எனக்கு 2 கோடி ரூபாய் கொடுக்கவேண்டும்" என்றும், "என்னை வரதட்சணை கேட்டு கணவன் வீட்டில் இருக்கும் 6 மாதக் குழந்தை தொடங்கி அவர்கள் வீட்டில் என்னைக் கடித்த கொசு வரையில் அனைவரும் பெரும் கொடுமை செய்தனர்" என்றும் புகார் கொடுப்பார்கள். மேலும் அதில் உப்பு, காரம் சேர்ப்பதற்காக, "கணவனுடைய 80 வயதான (தன் கையையே தூக்கச் சீவனில்லாத) தந்தை என்னைக் கையைப் பிடித்து இழுத்தார்", "75 வயதான என் மாமியார் 25 வயதான என்னை உதைத்தார்" என்று அந்தப் புகாரை அலங்காரம் செய்வார்கள். முத்தாய்ப்பாக, "இத்தகைய கொடுமைகளை எனக்கு இழைத்ததால் Sec 498A சட்டப்படி அவர்களைக் கைது செய்து உள்ளே போட வேண்டும். மேலும் அவர்கள் வீட்டை எனக்குக் கொடுத்துவிட்டு அவர்கள் நடுத்தெருவில் நிற்க வேண்டும். தவிர எனக்கு மாதா மாதம் 1 லட்ச ரூபாய் மெயிண்டெனன்ஸ் கொடுக்க வேண்டும்" இப்படிச் சொல்லிக் கேசு போட்டு நாற அடிப்பார்கள்.
உடனே அந்த லிஸ்டில் கண்ட அனைவரும் ஒரு வெள்ளிக்கிழமை சகல சௌபாக்கியங்களும் நிறைந்த நன்னாளின் நள்ளிரவில் கைது செய்யப்படும் சிறப்பும் நடந்தேரும். மேலும் இவர்கள் கேட்ட பணத்தையெல்லாம் கொடுக்கச் சொல்லி ஆணைகளும் வழங்கப்படும்!இது போன்ற காதல் லீலைகள்தான் எதிர்வரும் கள்ளக்காதல், 498A, விவாகரத்து போன்ற சடங்குகளுக்கு அடித்தளம்!சரி. இப்போது இன்றைய(நவம்பர் 11,2009)தினமலர் இணைய இதழில் வெளிவந்துள்ள சமூகப் பிரக்ஞையை வெளிப்படுத்தும் இந்தக் கட்டுரையை வாசியுங்கள் தொடர்ந்து அதன் இணையப் பக்கத்தில் கட்டுரைக்குக் கீழே நம் மக்கள் பதிந்துள்ள கருத்துரைகளையும் சற்றே காணுங்கள்!
கோவை மாநகராட்சி வ.உ.சி., பூங்கா மற்றும் மிருகக்காட்சி சாலையில் ஆண், பெண் ஜோடிகள் பொது இட மென்றும் பாராமல் ஒழுங்கீனமான செயலில் ஈடுபடுகின்றனர். சமூக ஒழுங்கை சீர்குலையச் செய்யும் இவர் களை, மாநகராட்சி நிர்வாகமும், போலீசும் வேடிக்கை பார்ப்பது மக்களை முகம் சுழிக்க வைக்கிறது.
கோவை நகரவாசிகள், பள்ளி மாணவ, மாணவியரின் பிரதான பொழுது போக்கும் இடம் வ.உ.சி., பூங்கா மற்றும் மிருகக் காட்சி சாலை. பூங்கா மாலை 4.00 மணிக்கு திறக்கப்படுகிறது. மிருகக் காட்சி சாலை, செவ்வாய் தவிர பிற நாட்களில் காலை 10.00 முதல் மாலை 7.00 மணி வரை செயல்படுகிறது. மிருகக் காட்சிசாலையை பார்வையிட நகர் பகுதி பள்ளிகளில் இருந்து மட்டுமின்றி, புறநகர் பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியரும் அதிகம் வருகின்றனர்.
ஒழுங்கீன செயல்கள்: வ.உ. சி., பூங்கா மாலை 4.00 மணிக்கு திறக்கப்பட்டதும் ஆண், பெண் ஜோடிகள் நுழைந்து ஆங்காங்கு ஆக்கிரமித்துக் கொள் கின்றனர். புல்வெளியில், புதர் மறைவில், மரத்தின் பின்னால் என பல இடங்களிலும் தனியாக அமர்ந்து சேஷ்டையில் ஈடுபடுகின்றனர். ஒருவர் மீது ஒருவர் சாய்ந்தும், மடியில் படுத்தபடியும் காதல் விளையாட்டு புரிகின்றனர். இவர்களில் பலரும் வெளியூரைச் சேர்ந்தவர்கள் என்பதால், பூங்காவுக்கு வருவோரை பற்றிய எவ்வித கவலையும் கொள்வதில்லை. சமீபத்தில், இது போன்ற ஜோடிகளின் அத்துமீறல் அதிகரித்ததை தொடர்ந்து, ரேஸ் கோர்ஸ் போலீசுக்கு அதிகளவில் புகார்கள் சென்றன. மாலை நேரத்தில் திடீர் ரெய்டு நடத்திய போலீசார், பூங்காவில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்டிருந்த ஜோடிகளை பிடித்து கடும் எச்சரிக்கைக்கு பின் அனுப்பினர். ஓரிரு நாட்கள் போலீஸ் கண்காணிப்பும் தொடர்ந்த காரணத்தால், ஜோடிகளின் சில்மிஷ வேலைகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன. பின்னாளில் போலீசாரின் கண்காணிப்பு படிப்படியாக குறைந்து, தற்போது அத்துமீறல்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. இதை வேடிக்கை பார்த்து ரசிக்கவும், மொபைல் போன் கேமராவில் படம் பிடிக்கவும் சில வாலிபர்கள் சுற்றித்திரிகின்றனர்; சில ஜோடிகளை படம் பிடித்து மொபைல் போனில் பதிவு செய்யப்பட்ட போட்டோவை காண் பித்து மிரட்டி பணம் பறித்த சம்பவங்களும் நடந் துள்ளன. எனினும் ஆண், பெண் ஜோடிகள் வருவது குறைந்தபாடில்லை.
மாணவர்கள் "கட்': வ.உ.சி., பூங்காவில் காதல் ஜோடிகளின் சில்மிஷ செயல்கள் ஒரு புறம் அதிகரித்திருக்க, மறுபுறம் பள்ளி மாணவர்கள் வகுப்பை "கட்' அடித்துவிட்டு, பூங்கா மற்றும் வ.உ.சி.,மைதானத்தில் சுற்றித்திரிவதும் அதிகம் நடக்கிறது. புத்தக மூட்டைகளை மைதானத்தின் ஓரத்தில் வைத்துவிட்டு, அங்குள்ள விளையாட்டு உபகரணங்களில் விளையாடுகின்றனர். மாலை நேரத்தில் பள்ளி வகுப்பு முடிந்து செல்வதை போல, வீட்டுக்கு கிளம்பிச் செல்கின்றனர். இந்த மாணவர்களில் சிலர் புகை பிடிக்கும் செயலிலும் ஈடுபடுகின்றனர்.
கஞ்சா ஆசாமிகள்: கஞ்சா விற்கும் நபர்கள், பாலியல் தொழிலுக்கு ஆள் பிடிக்கும் புரோக்கர் நடமாட்டமும் வ.உ.சி., பூங்கா மற்றும் மைதானம் பகுதியில் அதிகரித் துள்ளது. கையில் "பேக்'குடன் சுற்றித் திரியும் நபர்கள் கஞ்சா பொட்டலங்களை திறந்தவெளியில் சர்வ சாதாரணமாக விற்கின்றனர். இதை வாங்கவும் "வாடிக்கையாளர்கள்' வருகின்றனர். இவர்கள், பள்ளி மாணவர்களிடம் பேச்சுக் கொடுப்பதால், மாணவர்களையும் கஞ்சா புகைக்கும் பழக்கம் தொற்றிக் கொள்ளும் அபாயமிருக்கிறது. இது போன்ற சட்டவிரோத செயல்களை தடுக்கவும், பொதுமக்கள் வந்து செல்லும் வ.உ.சி., பார்க்கில் ஆண், பெண் ஜோடிகளின் அத்துமீறலை முடிவுக்கு கொண்டு வரவும் மாநகர போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பது அவசியம்.
ஆசிரியை ஆவேசம்: வ.உ.சி., பூங்காவுக்கு பள்ளிக் குழந்தைகளை அழைத்து வந்திருந்த ஆசிரியை கூறியதாவது: வ.உ.சி., பூங்கா மட்டுமின்றி, மிருகக் காட்சி சாலை வளாகத்திலும் சிலர் ஜோடி, ஜோடியாக அமர்ந்துள்ளனர். பலரும் தங்களை கவனிப்பார்களே, என்ற கூச்சம் கூட அவர் களிடம் இல்லாதது கவலை அளிக்கிறது. மிருகங்களை பார்வையிட பள்ளிக் குழந்தைகளை அழைத்து வந்தால், இது போன்ற ஜோடிகள் தான் அதிகம் இருக்கின்றனர். இவர்களை பிள்ளைகள் வேடிக்கை பார்த்தபடி செல்லும் போது, நாங்கள் கண்டித்து அவர்களின் பார்வையை திசைதிருப்ப வேண்டியுள்ளது. இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண, கோவை மாநகராட்சி நிர்வாகம், கூடுதல் காவலாளிகளை நியமித்து கண்காணிக்கலாம். சில்மிஷ செயலில் ஈடுபடுவோரை, பார்க்கில் இருந்து வெளியேற்ற வேண்டும் அல்லது, பிடித்து போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு, ஆசிரியை தெரிவித்தார்.

No comments:
Post a Comment