"டிப்ளமோ நர்ஸிங் படிப்பில் ஆண்களுக்கு இடமில்லை. அரசு மருத்துவமனைகளிலும் ஆண் நர்ஸுகளுக்கு வேலை வாய்ப்பு இல்லை'- என தமிழக அரசு பிறப்பித்த அதிரடி அரசாணை செல்லும் என்று... அழுத்தமாய்த் தீர்ப்பளித்து... ஆண் நர்சுகள் தரப்பை அண்மையில் அதிர வைத்திருக்கிறது சென்னை உயர்நீதி மன்றம். நர்ஸிங்கில் ஆண்களுக்கு மட்டும் இந்த தடை ஏன்? தமிழக அரசு நர்ஸுகள் சங்கச் செயலாளரான லீலாவதியோ...’’""நர்ஸிங் கோர்ஸில் ஆண்கள் பெண்கள் என்ற பாகுபாடு இல்லை என்பது நர்ஸிங் கவுன்சிலின் விதிமுறை. என்றபோதும்... மகப்பேறு பயிற்சியை முடித் தவர்களுக்குத்தான் நர்ஸிங் பட்டம் கொடுக்கவேண்டும் என்கிறது சட்டம். ஆண் நர்ஸுகளுக்கு மகப்பேறு பயிற்சியை எப்படி அளிக்கமுடியும்? பிரசவமான பெண்களின் பக்கத்திலேயே இருந்து அவர்களைப் பராமரிக்கும் நர்ஸ் வேலையை ஆண்களால் செய்ய முடியுமா? இந்த சேவையைச் செய்ய ஆண் நர்ஸுகள் முன்வந்தாலும் அதைப் பெண் நோயாளிகள் ஏற்றுக் கொள்வார்களா? இதையெல்லாம் உத்தேசித்து தான் இப்படி ஒரு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது அரசு'' என்றார் அவர் தரப்பு வாதமாய். ""அப்படியெனில்... நர்ஸிங் பட்டப் படிப்பை முடித்த ஆண்களுக்கு மட்டும் இந்தத் தடை இல்லையே அது ஏன்?'' என்றோம் அவரி டமே. லீலாவதியோ ""நர்ஸிங் பட்டப்படிப்பில் குறைந்த நேரமே பிராக்டிக்கல் பயிற்சி. டிப்ளமா கோர்ஸிலோ... பெரும்பாலான நேரம் வார்டுகளிலேயே பிராக்டிகல்'' பயிற்சி’’என்றார் கூலாக.ஆண் நர்ஸுகளோ ""இது பாரபட்சமான உத்தரவு. பிரைவேட் மருத்துவமனைகளில் ஆண் நர்ஸுகள் வேலை பாக்கறங்களே.. அங்க மட்டும் ஆண் நர்ஸுகளை பெண் நோயாளிகள் விரும்புவாங்களா? எங்களை ஒதுக்கும் அவர்கள்... ஈ.சி.ஜி. லேப்கள்ல மட்டும் எப்படி ஆண் பணியாளர் களை ஒத்துக்கறாங்க. பெண்ணாக இருந்தாலும் அங்க முழுசா மேலாடை களைக் கழற்ற வேண்டி வருமே. இன்னைக்கு புகழ் பெற்ற மகப்பேறு மருத் துவர்கள் எல்லாம் ஆண் கள்தான். அப்படி இருக்க எங்களை மட்டும் இப்படி ஓரம் கட்டலாமா?''’என் கிறார்கள் ஆதங்கமாய்.இது குறித்து தமிழ் நாடு நர்ஸிங் துறை இணை இயக்குநர் சரோஜினியிடம் கேட்டபோது “""2045-ஆம் ஆண்டுவரை போதுமான ஆண் நர்ஸுகள் இருக்காங்க. அதுக்கு மேல விபரங்கள் வேணும்னா... அதான் இருக் கவே இருக்கே தகவல் அறி யும் உரிமை சட்டம். அதுல கேட்டுக்கங்க''’என்றார் எரிச்சலாய்.சுகாதாரத்துறை செய லாளரான சுப்புராஜோ ""“ஆண் நர்ஸுகளின் தேவை குறைந்து விட்டதால்... நர்ஸிங் பட்டப்படிப்பிலும் ஆண்களுக்கு தடைவிதிக் கலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறோம்''’என்கிறார் அதிரடியாய். இது.. ஆண் களை ஆட்டம் காணவைக் கும் காலம் போலிருக்கிறது.
No comments:
Post a Comment