ஸ்ரீலங்கா இராணுவத்தால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கவலை அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஸ்ரீலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு விசுவாசமான பல உயர் அதிகாரிகளும் சிப்பாய்களும் இராணுவத்தில் இருப்பதாகவும் அவர்களால் தனக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என்றும் மகிந்த ராஜபக்ச தனக்கு நெருக்கமான சில அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்பாய ராஜபக்சவினால் நேரடியாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை கொண்ட ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினை மேலும் பலப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி இராணுவ தலைமையகத்தை கடந்து செல்லும் போது அங்கு ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரை கடமையில் ஈடுபடுத்துமாறும் பாதுகாப்பு செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இராணுவத்தின் அச்சுறுத்தல் காரணமாக கடந்த வாரம் வன்னிக்கு மேற்கொண்ட விஜயத்தின் போதும் ஜனாதிபதி இராணுவத்தினருக்கு மிக அருகில் செல்லாது தவிர்ததாகவும் பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
சரத் பொன்சேகா நாட்டில் இல்லாத சமயத்தில் வன்னிக்கு விஜயம் மேற்கொள்ள ஜனாதிபதி தீர்மானித்தமைக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தலே காரணம் என்றும் தெரியவந்துள்ளது.

No comments:
Post a Comment