ஒரு நடிகையை பற்றி அவதூறாக செய்தி வெளியிட்டதாக சொல்லி ஒட்டுமொத்தப் பத்திரிகையாளர்களையும் ஆபாசமாகத் திட்டித்தீர்த்தார் விவேக்.
’குவாட்டரும், கோழி பிரியாணியும்...’என்று சினிமாவில் பேசிய டயலாக்கை பத்திரிக்கையாளை நக்கலடிக்கவும் பயன்படுத்தினார்.
பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்று கொஞ்சமும் கவலைப்படாமல் பேசிவிட்டீர்களே சக நடிகர்களே கடிந்துகொண்டார்கள். உங்களால் ஒட்டுமொத்த நடிகர்கள் மீதும் கோபம் வரும் என்று கோபப்பட்டார்கள்.
இதெல்லாம் ஜுஜூபி என்று சிரித்த விவேக் இப்போது ’அன்றைக்கு ஒரு நாள் என் தொண்டை கட்டிப்போய் பேச முடியாமல் போயிருக்கக்கூடாதா’ என்று தன் வட்டத்திடம் நொந்து போய் புலம்பிக்கொண்டிருக்கிறாராம்.
ஆனாலும் அவரின் வில்லங்கம் மட்டும் ஓயவேயில்லை.
விவேக் கலந்து கொள்ளும் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்பதில்லை என்று பத்திரிக்கையாளர்கள் முடிவு செய்திருந்தனர்.
பத்பஸ்ரீ விருது வாங்கியதை எந்த பத்திரிக்கையும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அந்த விருது வாங்குவதற்கான தகுதி விவேக்கிற்கு இல்லை என்று அந்த விருதை தடுக்க பலர் முற்பட்டபோது பயந்து போய்தான் தனது சாதி சங்கத்திடம் முறையிட்டார்.
உன் வாய்க்கொழுப்புக்கு நீயே அவஸ்தைபடு என்று சொல்லி சாதி சங்கம் கழட்டிவிட்டது. தன் சாதியை சேர்ந்தவர்கள் மூலமாக பத்திரிக்கையாளர்களுக்கு சமாதானத்தூது விட்டுப்பார்த்தார். பிரயோசனமில்லை.
கடந்த வாரம் நடந்த ஒரு மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் சிறப்பு விருந்தினராக விவேக் கலந்து கொண்டது தெரிந்ததும், விழாவையே ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களும் புறக்கணிக்க, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கதிகலங்கிப் போனார்கள். அந்த நிகழ்ச்சி பற்றிய செய்தியே எந்த பத்திரிக்கையிலும் வராமல் போகவே,இனிமேல் விவேக்கை எந்த நிகழ்ச்சிக்கும் கூப்பிடக்கூடாது என்று முடிவெடுத்தார்களாம்.
இந்நிலையில் இன்று சென்னை பிலிம்சேம்பரில் ‘நல்வரவு’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது.
’விவேக் பேசிய வார்த்தைகள் காற்றோடு போய்விடுபவை அல்ல... காலம் உள்ளவரை பத்திரிகையாளர்கள் மீது வீசப்பட்ட அவச்சொற்கள். அவர் அன்றைக்கு அனைத்துப் பத்திரிகையாளர்களையுமே வேண்டுமென்றே திட்டினார் என்பது அவருக்கே தெரியும்.
பத்திரிகையாளர்களைப் பார்த்து மிகவும் கீழ்த்தரமாக, அருவருக்கத்தக்க வார்த்தைகளைப் பிரயோகித்த இந்த நடிகருக்கு இதுவரை பகிரங்கமாக பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு காட்டவில்லை.
அதற்கொரு வாய்ப்பை அவரே உருவாக்கித் தருகிறார். இந்த நிகழ்ச்சிக்கு வரும் அவருக்கு நிச்சயம் கறுப்புக் கொடி காட்டுவோம்’என்று ஆவேசமடைந்தார்கள்.
அப்புறம் யோசித்த பத்திரிக்கையாளர்கள், இது ஒரு பாடல் வெளியீட்டு விழா. இதில் போய் நாம் அபசகுணமாக எதுவும் செய்து தயாரிப்பாளர் மனதை புண்படுத்தவேண்டாம் என்று ஒதுங்கிக்கொண்டார்கள்.
நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே வில்லங்கத்தோடுதான் வந்திருந்தார். தான் பேசினால்தானே பிரச்சனை. மற்றவர்களை பேச வைப்போம் என்று உள் வேலை பார்த்திருக்கிறார்.
ஆர்.கே.செல்வமணி பேசும் போது அந்த உள் வேலை ஆரம்பமானது.
‘’அன்று பெரியக்கலைவாணர் மஞ்சள் பத்திரிக்கையை எதிர்த்து பரபரப்புக்குள்ளானார். இன்று சின்னக்கலைவாணர்...மஞ்சள் பத்திரிக்கை என்று சொல்லமாட்டேன்...மஞ்சள் செய்தியை எதிர்த்து பரபரப்புக்குள்ளாகியிருக்கிறார்...’’என்று ஆத்திரமூட்டினார்.
’இது இசை வெளியீட்டு விழா. பாடல்கள், பாடலாசிரியர், இசையமைப்பாளர், இயக்குநர், படம் பற்றி பேசுங்கள். இந்த பிரச்சனையை பேச இதுவல்ல இடம்’’என்று பத்திரிக்கையாளர்கள் ஆவேசமானார்கள்.
’இல்ல..இல்ல..அதுவந்து..’என்று செல்வமணி சமாளிக்க முடியாமல் திணறியபோது விழிபிதுங்கி உட்கார்ந்திருந்தார் விவேக்.
’அவர் பேசியது தவறுதான்..இது இசைவெளியீட்டு விழா..’என்று சிவசக்தி பாண்டியன் சமாதானம் செய்தார். வியர்த்து விறுவிறுத்துப்போன செல்வமணி, சரி,சரி என்று படத்தைப்பற்றி பேசிவிட்டு உட்கார்ந்துவிட்டார்.
விவேக் மட்டும் எதாவது வாய்திறக்கட்டும். அப்புறம் இது இசை வெளியீட்டு விழாவாக இருக்காது என்று பத்திரிக்கையாளர்கள் அமைதியானார்கள்.ஆனால் விவேக் பேச எழுந்த போது பத்திரிக்கையாளர்கள் அரங்கத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள்.
விவேக் பேச வரும்போது பலரும் அவர் காதில் கிசுகிசுத்து அனுப்பினார்களாம். அதன்படி இந்த பிரச்சனை பற்றி பேசவே இல்லையாம். வழக்கமாக பேசுவது போல் நக்கல்,இரட்டை அர்த்தத்துடனும் பேசவில்லையாம்.
No comments:
Post a Comment