Saturday, November 7, 2009
ஷ்ரியாவின் தினசரி எக்சர்சைஸ்!
ஷ்ரியாவால் எக்சர்சைஸ் செய்யாமல் ஒரு நாள் கூட சும்மா இருக்க முடியாதாம். எக்சர்சைஸ் செய்யாவிட்டால் தலையே வெடித்தது போலாகி விடுமாம்.ஸ்லிம் உடல் நாயகிகளில் முக்கியமானவர் ஷ்ரியா. உடல் அழகைப் பேணுவதில் ஷ்ரியாவுக்கு நிகர் ஷ்ரியாதான். உடல் அழகிலும், பிட்னஸிலும் மிக மிக முக்கிய கவனம் செலுத்துகிறார் ஷ்ரியா.அதற்காக தினசரி எக்சர்சைஸ், யோகா ஆகியவற்றை தவறாமல் செய்கிறாராம் ஷ்ரியா.இதுகுறித்து ஷ்ரியா கூறுகையில், நான் ஒரு நடிகை என்பதற்காக மட்டும் உடல் அழகையும், பிட்னஸையும் பேணுவதாக நினைத்து விட வேண்டாம். எனக்கு இயற்கையிலேயே அதுகுறித்த ஆர்வமும், விழிப்புணர்வும் நிறையவே உண்டு.நான் மட்டுமல்ல, அனைத்துப் பெண்களுமே உடல் அழகிலும், பிட்னஸிலும் கவனமுடன் இருக்க வேண்டும். அது மனதையும், உடலையும் பொலிவோடு வைத்துக் கொள்ள உதவும் என்று குட்டி லெக்சரே கொடுக்கிறார் ஷ்ரியா.தினசரி ஒரே மாதிரியான உடற்பயிற்சிகளை செய்ய மாட்டாரம். தினசரி ஒரு ஐயிட்டம். விளையாட்டு , நீச்சல் என தினசரி ஒரு உடற்பயி்ற்சியில் ஈடுபடுகிறார் ஷ்ரியா. இதுதவிர தினசரி 45 நிமிடம் யோகா கண்டிப்பாக உண்டாம்.அதேபோல சாப்பாட்டிலும் கூட நிறைய கட்டுப்பாடு வைத்துள்ளார் ஷ்ரியா. டயட்டை ஒருபோதும் அவர் மீறுவதில்லையாம்.இதுதவிர இசை கேட்பது, படிப்பது, நடனமாடுவது என மனசுக்கு இதமான விஷயங்களையும் தவறாமல் கடைப்பிடிக்கிறார் ஷ்ரியா.ஷ்ரியாவிடம் சிறிது நேரம் உட்கார்ந்து பேசினால் நாமும் கூட புதுப்பிக்கப்படுவது போல மாறி விடுவதை உணரலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment