பிரபு தேவா இயக்கும் புதிய படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கிறார் கமல் ஹாஸன் மகள் ஸ்ருதி. தமிழில் அவர் நாயகியாக அறிமுகமாகும் படம் இது.ஸ்ருதி முதலில் நாயகியாக நடிக்கவிருந்தது மாதவனுடன் ஒரு தமிழ்ப் படத்தில்தான். ஆனால் பின்னர் அந்த வாய்ப்பை மறுத்து விட்டார் ஸ்ருதி. சில மாதங்கள் கழித்து இந்தியில் லக் என்ற படத்தில் ஸ்ருதி அறிமுகமானார். ஆனால் அந்தப் படம் அவருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் அமையவில்லை.
அதேநேரம், தனது அப்பா கமல் நடித்த உன்னைப் போல் ஒருவன் படத்துக்கு இசையமைப்பாளராக பணியாற்றினார். ஒரு வெற்றிப் படத்தில் அவரது பங்களிப்பும் இருந்த வகையில் முதல் முயற்சியிலேயே வெற்றிக் கோட்டைத் தொட்டு விட்டார் ஸ்ருதி. இந்நிலையில் மீண்டும் நாயகி வாய்ப்பு வந்துள்ளது அவருக்கு. ஜெயம் ரவியை வைத்து பிரபு தேவா இயக்கும் பாரிஸ் என்ற படத்தில் முதலில் நயன்தாராவை ஒப்பந்தம் செய்ய முயன்றார் பிரபு தேவா. ஆனால் அதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தது ஜெயம் ரவி தரப்பிலிருந்து. எனவே வேறு நாயகியைத் தேடிவந்தனர். இப்போது, ஸ்ருதியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
No comments:
Post a Comment