கோவை உக்கடம் கோட்டைமேடு சின்னப் பள்ளிவாசல் இருக்கும் தெருவருகே மூச்சிரைக்க ஓடி வந்த 10 வயது சிறுவன் அஸாருதீன் ""பாட்டி... தாத்தா...'' என கூவிக் கொண்டு அங்குள்ள வீட்டிற்குள் நுழைந்து அப்பாவும், பாட்டியும், அத்தை, சித்தப்பாவும் ஒண்ணா சேர்ந்துக்கிட்டு அம்மா தலைய மொட்டையடிச்சு வீட்டுக்குள்ள பூட்டி வச்சிருக்காங்க. அம்மாவ எங்களுக்குக் கூட காட்ட மாட்டீங்கறாங்க. நான் இங்க வந்து சொன்னது பாட்டிக்கு தெரிஞ்சுதுன்னா என் அப்பாவும் பாட்டியும் சேர்ந்து சூடு வச்சிரு வாங்க. சீக்கிரமா வீட்டுக்கு வந்து அம்மாவ அடிக்க வேண்டாம்னு சொல்லுங்க தாத்தா...'' என அழுதுகொண்டே சொல்லியவன் தாத்தா பாட்டியின் பிடியிலிருந்து உருவிக் கொண்டு அடுத்த தெருவான சாமராவ் தெருவில் உள்ள தன் அப்பா வீட்டிற்குள் நுழைந்து யாருக்கும் தெரியாமல் தன் தங்கச்சி சப்ரீனாவோடு ஹோம் ஒர்க் செய்வது போல் நடிக்க ஆரம்பித்தான்.தாத்தா அப்துல் கபூர் தன் சொந்தங்களோடு தன் மருமகன் வீட்டிற்குள் நுழைய அங்கே தன் மகள் மொட்டையடிக்கப்பட்டு அழுதபடி சுவரோரமாய் அமர்ந்திருப்பதை பார்த்து கொந்தளித்துப் போக... அவரின் சொந்தங்கள் மட்டுமல்ல இஸ்லாமியப் பொதுமக்கள் எல்லோரும் அந்தக் குடும் பத்தையே நையப் புடைத்து உக்கடம் போலீஸ் ஸ்டேஷ னுக்கு தகவல் தந்தனர்.அப்துல் கபூரின் மகளான நதீரா பானுவின் கணவனான இப் ராகிம்ஷா, மாமி யார் சரீபா, கொழுந் தன் பைரோஸ் ஆகி யோரை போலீஸ் கைது செய்தது. இந்த சம்பவத்திற் குப் பின் பேசிய அப்துல் கபூர்... ""அல்லா எனக்கு கொடுத்த நாலுமே பொம்பளைப் புள்ளைக. ரெண்டாவது பொண்ணுதான் இந்த நதீராபானு.பதினாறு பதினேழு வயசுலயே அந்த இப்ராகிமுக்கு நிக்காஹ் பண்ணிக் கொடுத்துட்டேன். நான் அப்பவே என் பொண்ணுக்கு 20 பவுனு போட் டேன். என் பொண்ணோட மாமியார் சரீபா ஆரம்பத்துல அமைதியாத்தான் இருந்த மாதிரி காமிச்சவங்க இப் ராகிம்ஷாவோட அண்ணன் ஒருத்த னுக்கு ரெண்டு நிக்காஹ் பண்ணி வச் சாங்க. ரெண்டுபேரிடமும் 50 பவுனு, 100 பவுனுன்னு வாங்கியிருக்காங்க. அதுல ஒரு பொண்ணு இந்த சரீபாவோட தொந்தரவு தாங்க முடியாம ஓடியேப் போயிருச்சு.அதுக்குப் பிறகும் இன்னொரு பொண்ண நிக்காஹ் பண்ணி 100 பவுன் வாங்கியிருக்கு. அதுக்கப்புறம் அந்தப் பொம்பளையும், அவளோடப் பொண்ணு ஆமினாவும் எம் பொண் ணப் பாத்து ஒவ்வொருத்தியும் 50 பவுனு, 100 பவுனுன்னு போட்டு வந் திருக்குக. நீ என்னத்தடிக் கொண்டு வந்தே? இனிமே இங்கயிருக்கிற எல்லாத்தோட ட்ரெஸ்ஸயும் நீதான் துவைக்கணும்னு எல்லாம் வேலையும் வாங்க ஆரம்பிச்சிருக்காங்க. நதீராவுக்கு மூணு குழந்தை ஆனதுக்குப் பிறகு தான் ஒருநாளு எம் பொண்ணு மேல அபாண்டமா பழி சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க சரீபாவும், ஆமினாவும்'' என்று அதற்குமேல் சொல்ல முடியாமல் கதறுகிறார்.மொட்டையடிக்கப்பட்ட தலை யோடு நம்மிடம் பேசிய நதீரா... ""என் னைய எப்படியாவது என் புருஷன் கிட்டயிருந்து பிரிச்சு நல்லா சம்பா திச்சுட்டு இருக்கற எம் புருஷனுக்கு வேறொரு பொண்ண நிக்காஹ் பண்ணி நிறைய நகை நட்டு வாங்க ணும்ங்கறதுதான் அவங்க குடும்பத் தோட திட்டமே. அதுக்காக நான் ஒரு பால்காரர்கிட்டப் பேசினாலும் சரி, பூக்காரர்கிட்டப் பேசினாலும் சரி... நான் அவுங்கக் கூடத் தொடர்பு வச்சி ருக்கிறதா எம் புருஷன்கிட்ட சொல்ல ஆரம்பிச்சாங்க. இவ வேண்டாம்டா... நீ இருக்குறதுக்கு இந்த தேவ...ள கை கழுவிட்டு வேற பொண்ணப் பாத்துக்கோ...ன்னு சொல்வதை நம்ப ஆரம்பிச்சுட்டாரு என் புருஷன். இதனால என்னோட துணியெல் லாம் கழட்டி நிர்வாணமா நிக்க வச்சு பெல்ட்டாலயே அடிப்பாரு எம் புருஷன். உனக்கு தொந்தியெல்லாம் வந்துருச் சுடி. வேறொரு பொண்ணப் பாக்க முடிவுபண்ணிட்டேன்னு சொல்ல நான் வேண்டாம்னு சொல்ல என் மாமியாரும் நாத்தனாரும் கூட சேர்ந்து அடிப்பாங்க.அன்னிக்கு வெள்ளிக் கிழமை நைட்டு. வேறொரு நிக்காஹ் பண்றதுக்கு நான் ஒத்துக்கணும்னு சொல்லி என் புருஷன்லயிருந்து கொழுந்தன் வரைக்கும் டார்ச்சர் பண்ண ஆரம்பிச் சாங்க. என் நாத்தனார் ஆமினா இவகிட்ட என்ன பர்மிஷன் கேட்கறது? இவளுக்கு மொட்டையடிச்சு வீட்டோட உக்கார வச்சிட்டு நாம அண்ணனுக்கு வேற பொண்ணப் பாத்துருவோம். மொட்டை அடிண்ணா... மொட்டை அடிக்க ஒத்துக்கலைன்னா சீமெண்ணய ஊத்தி கொளுத்தி விட்ருவோம்னு மிரட்ட... கொளுத்தற துக்கும் ரெடியா ஆகிட்டாங்க. அதுனால மொட்டையடிக்கறதுக்கு ஒத்துக்கிட்டேன்.எப்பவுமே அவுங்க என்னைய அடிக்கும்போது எதுவுமே உங்க வீட்டுக்கு தெரியக்கூடாது. அப்படி தெரிஞ்சா உங்கப்பன வேலைய விட்டுத் தொரத்திவிட்ருவோம்னு சொல்லும்போது எங்க குடும்பத்தோட வறுமையும், அடுத்து நிக்காஹ்க்கு தயாராயிருக்கற என் தங்கச்சியும்தான் ஞாபகத் துக்கு வருவாங்க. ஆனா எம் பையன் ஓடிப்போய் சொல்லாம இருந்திருந்தா ஒருநாளு கண்டிப்பா என்னைய கொளுத்தி யிருப்பாங்க. என்னோட மூணு குழந்தைகளும் அனாதையாப் போயிருக்கும். இனி ஏதாவதொரு வேலை செஞ்சாவது என் புள்ளைகள காப்பாத்திக்குவேன்'' என்கிறார் தன் குழந்தைகளை கட்டியணைத்தபடியே.போலீஸ் விசாரணை யின்போது இப்ராகிம்ஷா...""நான் எங்கம்மா பேச் சைக்கேட்டு இப்படி பண் ணிட்டேன். நான் பண்ணது தப்புனு உணர்ந்துட்டேன்''னு கதறியிருக்கிறானாம். ஆனா சரீபாவோ... எதையுமே அலட்டிக் கொள்ளாமல் சிறையை நோக்கி நடந்
No comments:
Post a Comment