Monday, November 9, 2009

இந்திய சோதிடர் மகிந்த & CO விற்கும் இலவச பலாபலன் கூறிவருகிறார்

கொழும்பிலுள்ள ஹில்டன் விடுதியில் தற்போது தங்கியிருக்கும் இந்திய சோதிடரான தேவந்திரராஜா கொழும்பிலுள்ள வர்த்தகர்களை அழைத்து அவர்களுக்கு இலவசமாக சோதிட பலாபலன்களைத் தெரிவித்துவருவதாக அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி செயலகத்தின் சில அதிகாரிகள் கொழும்பிலுள்ள பிரபல வர்த்தகர்கள் சிலருடன் தொடர்புகொண்டு தேவேந்திர ராஜாவைச் சந்திப்பதற்கான நேரத்தைப் பெற்றுக்கொடுத்துள்ளனர்.இந்த வர்த்தகர்களுக்கு சோதிட பலனைக் கூறியுள்ள தேவேந்திர ராஜா, எதிர்காலத்தில் சிறந்த காலம் உதயமாகும் எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேலும் பல வருடங்களுக்கு நாட்டின் தலைவராக செயற்படுவார் எனவும், நாடு விரைவில் அபிவிருத்தி அடையும் எனவும் வலியுறுத்தி கூறியுள்ளார்.ஜனாதிபதி சார்பில் நிருபமா ராஜபக்ஷவின் கணவரான பிரபல தரகு வர்த்தகர் திருநடேசன் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் காமினி குணரத்ன ஆகியோரே இந்த வர்த்தகர்களுக்கான சோதிட சந்திப்பிற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுவருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன

No comments:

Post a Comment