Wednesday, May 19, 2010

+2 ரிசல்ட் சொல்லும் உண்மை!


shockan.blogspot.com
""பயமுறுத்திக்கொண்டிருந்த +2 ரிசல்ட், இப்போது எங்களைப் பட்டாம்பூச்சிகளாக்கி யிருக்கிறது'' என சந்தோஷமாக சொல்கிறார்கள் கல்லூரியில் காலடி எடுத்துவைக்கப் போகும் மாணவர்கள். பொதுத்தேர்வு எழுதியவர்களில் 85.3% பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். கடந்த ஆண்டைவிட தேர்ச்சிவிகிதம் 2.3% உயர்ந்திருக்கிறது என்கிறது பள்ளிக் கல்வித்துறை.

1200-க்கு 1186 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடத்தைப் பிடித்திருக்கும் தூத்துக்குடி மாணவர் பாண்டியன், தொழிற் கல்விக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் பட்டிய லிலும் முதலிடம் பெறும் அளவுக்கு முக்கிய சப்ஜெட்டுகள் அனைத்திலும் 200-க்கு 200 மதிப் பெண்கள் பெற்றிருக்கிறார். இரண்டாம் இடத்தை 3 பேரும், மூன்றாம் இடத்தை 5 பேரும் பெற்றிருக்கிறார்கள். மாநில அளவில் முதல் 3 இடங்களைப் பெற்றுள்ள 9 பேரில் 7 பேர் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.

முக்கிய பாடங்களான கணக்கு, இயற்பியல், வேதியியல், உயிரியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்களே தொழிற் கல்லூரிகளில் சீட்டுக்கு உத்தர வாதமளிக்கும். இந்தப் பாடங்களில் பெற்றுள்ள சராசரி மதிப்பெண்ணை அக்ரிகேட் என்பார்கள். இதிலும் பிற்படுத்தப் பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள்தான் முன்னணியில் உள்ளனர். பாடவாரியாக மாநில அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளவர்களின் பட்டியலில் 20 பேர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவர். 4 பேர் பழங்குடி இனத்தவர். 57 பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்து மாணவர்கள்.

உதாரணமாக, இன்சூரன்ஸ் பாடப்பிரிவில் முதலிடம் பெற்றுள்ள பானுப்ரியாவும் மூன்றாம் இடம் பெற்றுள்ள சுதாவும் நாமக்கல் மாவட்டம் குறிச்சியில் உள்ள பழங்குடி மாணவர்களுக்கான உறைவிடப்பள்ளியில் படித்தவர்கள். பேங்கிங் அசிஸ்டெண்ட் பாடப்பிரிவின் முதல் 3 இடங் களையும் கொளத்தூர் அரசுப்பள்ளியைச் சேர்ந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்து மாணவிகளே பிடித்துள்ளனர். ஆண்டுக்கு ஆண்டு தேர்ச்சி விகிதத்தை உயர்த்திக் கொண்டி ருக்கும் சென்னை (மாநகராட்சி) பள்ளிகளின் மாணவர்கள் இந்த ஆண்டு 85% தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

இந்த முறை +2 பொதுத்தேர்வில் கேள்வித்தாள் ரொம்பவும் டஃப் என்று சொல்லப்பட்டது. 5 வருட கேள்வித்தாள் களின் அடிப்படையில் மாணவர்களை மனப்பாடம் செய்யவைத்து தேர்வுக்குத் தயார்படுத்தும் "மக்கப்' பள்ளிகளின் லட்சணம் இந்தத் தேர்வில் தெரிந்துவிட்டது. வகுப்பறையில் நடத்தும் பாடத்தைக் கேட்டு, சுயமாக சிந்தித்து தேர்வெழுதும் மாணவர்கள்தான் சாதித் திருக்கிறார்கள். இடஒதுக்கீட்டினால் கிடைத்துள்ள சமுதாயத் தாக்கம் இது என்கிறார்கள் சமூகநீதி ஆர்வலர்கள்.

கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் நம்மிடம், ""ரிசர்வேஷன் சிஸ்டம் மூலம் ஏற்பட்டுள்ள நல்ல மாற்றம் இது. அதே நேரத்தில், அதிக மதிப்பெண் பெற்று பாஸாகியிருப்பவர்களில் பெரும்பாலான வர்கள் பொருளாதாரரீதியில் கஷ்டப் படாத குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அரசுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்தினால் பிற்படுத்தப் பட்ட-தாழ்த்தப்பட்ட ஏழை மாண வர்களின் தேர்ச்சி விகிதம் இன்னும் உயரும். கல்வியில் பெரியளவிலான சமுதாய மாற்றத்தை உண்டாக்கும்'' என் கிறார் அக்கறையுடன்.

No comments:

Post a Comment