Thursday, May 27, 2010

ஏ.டி.எம். கேமராவில் சிக்கிய ஜோடிகள்!


shockan.blogspot.com

ஏ.டி.எம். முக்கு உள்ளே நடந்த "ஷூட்டிங்' இது. பணம் எடுப்ப தற்குத்தான் ஏ.டி.எம். என்ற நிலை மாறி, பலான காரியங்களுக்கும் அதைப் பயன்படுத்துகிறார்கள் என உலகம் முழுக்க "டிரைலர்' ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள் இண்டர்நெட்டில்.. "ஆந்திர ஜோடிகள்' என்ற அடை யாளத்தோடு தேசத்தின் மானத்தையும் கப்பலேற்றி யிருக்கிறார்கள்.

ப்ரவுசிங் சென்டர் களில் -பொதுக் கழிப் பறைகளில் -விடுதிகளில் ரகசிய வீடியோ கேம ராவைப் பொருத்தி அந்தரங்கச் சமாச்சாரங் களைப் படம் பிடிப்பது தெரிந்த சங்கதிதான். வங்கி ஏ.டி.எம். கூட இதே காரியத்தைச் செய்யும் என்பதுதான் அதிர்ச்சி அலைகளை பரவவிட்டி ருக்கிறது.

அந்த வலைத்தள காட்சிகள் இப்படிப் போகிறது -"ஏ' காரியங்களுக்காக அந்த ஏ.டி.எம். கதவுகளைத் தாராளமாகவே திறந்துவிடுகிறார் செக்யூரிட்டி. உள்ளே போன இளம்ஜோடி ஒன்று "பணம் எடுக்க வேறு யாரும் வந்துவிடக்கூடாதே...' என்னும் பரிதவிப்பில் அடிக்கடி கண்ணாடிக் கதவு வழியாகப் பார்த்தபடியே வந்த வேலையைச் செவ்வனே செய்கிறது. செக்யூரிட்டியும் கூட அவர்களின் ஜாலிமூடை கெடுத்துவிடக்கூடாது என்று எங்கோ போய்விடுகிறார்.

அதே ஏ.டி.எம்-முக்குள் அடுத்து வருகிறது ஒரு ஜோடி. இப்போது வெளியே சேரில் அமர்ந்தபடி ஹாயாக பேப்பர் படிக்கிறார் செக்யூரிட்டி. "அவரை மீறி யார் வந்துவிட முடியும்?' என்று குளிரூட்டப் பட்ட அந்த ஏ.டி.எம்-முக்குள் படு மும்முரமாக ஈடுபடுகிறது அந்த ஜோடி. இன்னொரு ஜோடியோ, ஏ.டி.எம். மானிட்டர் மீதுள்ள வீடியோ கேமரா லென்ஸ் மீதே துப்பட்டாவைப் போட்டு மூடிவிட்டு

துரிதகதியில் இயங்குகிறது. அடுத்தடுத்து ஜோடிகள் வருவதும், போவதுமாக பிஸியாகவே இருக்கிறது அந்த ஏ.டி.எம். "இந்தக் காட்சிகளைப் பார்த்து ரசித்தவர்களின் எண்ணிக்கை லட்சத்துக்கும் மேலே...?' என்று அந்த வலைத்தளம் புள்ளி விபரம் தருவதாகச் சொன்ன விருதுநகர் சுப்பையா...

""ஏ.டி.எம்.ல சீக்ரெட் கேமரா ஃபிக்ஸ் பண்ணி யிருக்கிறது செக்யூரிட்டிக்குத் தெரியாதா என்ன? அந்த செக்யூரிட்டியும் அல்லவா சீன்ல பதிவா யிருக்காரு. சந்துல சிந்து பாட றதுன்னு சொல்வாங்க. இந்தச் சேட்டை அந்த ரகம் தான். ஒரு செக்யூரிட்டிய கவனிச்சிட்டு, நாலு சுவத்துக்குள்ள தப்பு பண்ணுறது வெளிய தெரியவா போகுதுன்னு, 24 மணி நேரமும் கேமரா ஓடிட்டிருக்கிற ஏ.டி.எம்.மை ஒதுங்குற இடமாத் தேர்வு பண்ணுன படிச்ச புத்திசாலிகளை என்னன்னு சொல்லுறது? அதுசரி... இந்தக் காட்சிகளை இன்டர்நெட்ல ஏத்துனது யாரு? வாடிக் கையாளர்களைக் கண்காணிக்க ஏ.டி.எம். கேமரா வச்சிருக்கிற வங்கி தானே யார் யாரு வந்து போனதுன்னு செக் பண்ணும். அப்ப யாரோ ஒரு வங்கி ஊழியர்தானே ரகசியம் காக்க வேண்டிய ஒரு விஷயத்தை வெளிய பரப்பியிருக்காரு. ரொம்ப கொடுமையால்ல இருக்கு...'' என்று கேள்வி களை அடுக்கிக்கொண்டே போனார்.

கொடுமைகள் கூத்தடிக் கிற காலமல்லவா இது?



காட்சிகள் "லீக்' ஆனது எப்படி?



""அது ஆந்திர ஏ.டி.எம். என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. தமிழ்நாடாகக்கூட இருக்கலாம். எங்கோ ஒரு மாநிலத்தில் எடுத்த ஏ.டி.எம். சீனை வேறு மாநிலத் தின் பெயரைப் போட்டு நெட்டில் அப்லோட் செய்து விடுவார்கள். பொதுவாக ஏ.டி.எம். கேமராவில் பதிவாகும் காட்சிகள் அப்படியே 24 மணி நேரமும் இயங்கும் வங்கி மேலாளரின் கணினியிலும் பதிவாகியபடியே இருக்கும். தனது அறையில் நினைத்த நேரத்தில் மேலாளர் அக்காட்சிகளை ரீ-வைண்ட் செய்து பார்த்துக்கொள்ள முடியும். அதேநேரத்தில் அக்காட்சிகளின் இன்னொரு காப்பி அந்த வங்கியின் தலைமை அலுவலகத்தில் ஏ.டி.எம்.முக்கென்றே பிரத்யேகமாக உள்ள கணினி/வீடியோ பிரிவிலும் பதிவாகிவிடும். இவர்களில் யாரோ ஒருவர்தான், "தான் பார்த்ததை உலகமே பார்த்து ரசிக்கட்டும்' என்ற பரந்த மனதோடு வலைத்தளத்தில் உலவச் செய்திருக்கிறார்''


-அந்தக் காட்சிகளைப் பார்த்துவிட்டு வங்கி அலுவலர் ஒருவர் நமக்களித்த விளக்கம் இது.

No comments:

Post a Comment