Friday, May 21, 2010

பெண்களை "விரட்டிய' பாக்., வீரர்கள்: அப்ரிதி


shockan.blogspot.com
கராச்சி : ""ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின் போது, அணியின் பெரும்பாலான வீரர்கள் பெண்களை குறிவைத்து அவர்களையே சுற்றித் திரிந்தனர். இதனால் தான் அத்தொடரில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்தது,'' என, அப்ரிதி தெரிவித்துள்ளார்.



கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி டெஸ்ட், ஒரு நாள் மற்றும் "டுவென்டி-20' தொடர்களில் படுதோல்வி அடைந்து வெளியேறியது. இத்தொடரின் தோல்வி குறித்து விசாரிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு "விசாரணை கமிட்டி' ஒன்றை நியமித்தது. இக்கமிட்டி முன், வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தெரிவித்த ரகசிய விளக்கங்கள் சமீபத்தில் வெளியாகின. இதில் தற்போதைய கேப்டன் அப்ரிதி தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளன. வீரர்கள் குறித்து அப்ரிதி கூறியது: ஆஸ்திரேலிய தொடரில் சூதாட்டம் எதுவும் நடந்திருக் கலாம். அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அதற்கான ஆதாரங்களும் கிடைக்க வில்லை.



இத்தொடரில், பாகிஸ்தான் வீரர்கள் பெண்களை சுற்றித் திரிவதிலும், ரசிகர்களுக்கு "ஆட்டோ கிராப்' வழங்குவதிலும் அதிக கவனம் செலுத்தினர். பவுண்டரி எல்லையில் பெரும்பாலான வீரர்கள், சோர்வுடன் இருந்தனர். ஒவ்வொரு வீரரும் அணியின் வெற்றிக்காக பாடுபடவில்லை. தான் மட்டுமே சிறப்பாக விளையாட முயற்சித்தனர். பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு, அடிக்கடி கேப்டனை மாற்றுவதில் கவனம் செலுத்தியது. இதனால் அணியில் இடம் பெற்ற அனைத்து வீரர்களுக்கும் கேப்டனாக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இவ்வாறு அப்ரிதி தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment