Friday, May 14, 2010

திரைக்கூத்து!


shockan.blogspot.com
திரைக்கூத்து!

தேதிதான் பிராப்ளம்!


ஜெயம் ரவியை வைத்து அமீர் இயக்கும் படம் "ஆதிபகவன்'. கதை எழுதும் போதே கதாநாயகியாக அமீர் மனதில் நயன்தாரா வந்து போக... நயனை அணுகி கால்ஷீட் கேட்டார் அமீர். நயனுக்கும் ரொம்பவே ஆசை அமீர் இயக்கத்தில் நடிக்க. ஆனாலும் அமீர் மொத்தமாக 90 நாட்கள் கால்ஷீட் கேட்பதால் நயன் நழுவி வருகிறார். அந்த வாய்ப்பை கைப்பத்தி விட ப்ரியாமணி ஒருபுறம் முயற்சித்துக் கொண்டிருக்கிறாராம்.

இமேஜ்தான் பிராப்ளம்!


ஜீவா நடிக்கும் "வந்தான் வென்றான்' படத்திற்கு நாயகியாக த்ரிஷாவை கேட்டனர். ஆனால் சின்ன ஹீரோகூட நடிக்க விரும்பாத த்ரிஷா மறுத்துவிட... தமன்னா ஓகேவாகியிருக்கிறார்.

இல்லவே இல்லை பிராப்ளம்!

"கோலங்கள்' சீரியல் இயக்குநர் திருச்செல்வம் ஹீரோவாக நடிக்க "மெட்டிஒலி' புகழ் ‘"போஸ்' வெங்கட் இயக்கும் "முத்துக்குமாரின் காதல்' படம் கைவிடப் பட்டதாக கூவியிருந்தேன். ஆனால் வெங்கட் என் காதை செல்லமாக திருகி சில விவரங்களைச் சொன் னார். ""எங்க கம்பெனியில சில பிரச்சனைகள் நடந்தது உண்மைதான். ஆனால் படம் கைவிடப்படவில்லை. அதிலும் நானும், திருச்செல்வமும், எங்கள் நண்பரும் பணம் போட்டுத்தான் தயாரிக்கிறோம். படத்தொடக்கமே ஜூலைக்கு மேல்தான். காரணம் ... திரைக்கதை இன்னும் முடியவில்லை.

இது 1914-ஆம் ஆண்டில் நடந்த உண்மைச்சம்பவம். இதற்காக பல ரெக் கார்டுகளை ஆராய்ஞ்சுக்கிட்டிருக்கோம். கீழ்ஜாதியினர் கல்வி கற்றால் தங்களுக்கு மதிப்பிருக்காது என மேல் ஜாதியினர் நடத்திய கொடுமைகள் பற்றிய கதை. இந்த வரலாற்று பின்னணி படம் கண்டிப்பா தமிழ் சினிமாவில் மறக்கமுடியாத படமா வந்தே தீரும் கோழி'' என்றார். ஈழத் தமிழருக்காக முத்துக்குமார் தீக்குளித்து இறந்தார். அவருக்கு மரி யாதை செய்யும் விதமாகவே ‘"முத்துக்குமாரின் காதல்' என டைட்டில் வைக்கப்பட்டதையும் சொன்னார் வெங்கட்.

சம்பளம்தான் பிராப்ளம்!


சிம்ரன் இப்போதும் ஸ்லிம்மாக இருக்கிறார்தான். அதற்காக பழைய நினைப்பிலேயே சம்பளம் கேட்பதுதான் சங்கடப்பட வைக்குதாம் சினிமாக்காரர்களை. தமிழ் இலக்கியங்களை கரைத்துக் குடித்த கேரள இயக்குநர் நித்தின் ராமகிருஷ்ணன் பரதநாட்டிய கலை குறித்து ‘"உமா மகேஸ்வரம்' எனும் தமிழ்ப் படத்தை எடுக்கிறார். உலக அழகி பார்வதி ஓமனக்குட்டன் நாயகியாக அறிமுகமாகிறார். அவ ருக்கு நடன குருவாக சிம்ரனை நடிக்க வைக்க அணுகினார்.

கதையை கேட்டு சிலிர்த்துப் போன சிம் உடனே ஓகே சொன்னாலும் கூட... சம்பளத் தில் பிராப்ளம் பண்ணுகிறார். சம்பள விஷயத்தில் இறங்கி வராவிட்டால் நதியா விடம் போக முடிவு செய்துள்ள னர்.

சரக்குதான் பிராப்ளம்!

சினிமா டிஸ்கஷன்களில் சரக்கு முதலில். அப்புறம்தான் பேப்பர், பேனா. அதிலும் உதவி இயக்குநர்கள் பெரும்பாலும் வெயிலுக்கு பீர்தான் விரும்புகிறார்கள்.

ஆனால் பொதுமக்களும் வெயிலுக்கு பீரை போட்டு விடுவதால் பீருக்கு செம டிமாண்ட். இதனால் சினிமா வட்டாரத்தில் பீருக்கு திண்டாட்டமாக இருப்பதால் டிஸ்கஷன் டல்லடிப்பதாக பிரபலத்தின் அஸிஸ்டெண்ட் ஒருவர் என்னிடம் புலம்பினார்.

அப்படியா?

பிரமாண்ட டைரக்டர் தயாரிப்பில் பெரும் இயக்குநர்கள் இருவர் நடித்த படத்தை வாங்கிக் கொள்வதாக கடைசிவரை சொல்லி வந்த சூரியச் சேனல் கடைசி நேரத்தில் கைவிட்டு விட... ஷங்கடப்பட்டு விட்டாராம் தயாரித்தவர். ஒரு விழா மேடையில் இது குறித்து சேனல் புள்ளியிடம் தயாரிப்பு ஷங்கடப்பட்டு விளக்கம் கேட்க... ‘"அதையெல்லாம் இங்க பேசாதீங்க' எனச் சொல்லியிருக்கிறார் சேனல் புள்ளி.

No comments:

Post a Comment