Sunday, May 16, 2010

அடுத்த ஜாக்கெட்(ஜாக்பாட்) பிரபலம் யார்?


shockan.blogspot.com
ஜெயா டிவியில் கடந்த 10 அண்டுகளாக ஜாக்பாட் நிகழ்ச்சியை நடத்தி வந்தார் நடிகை குஷ்பூ. இவருக்கு என்றே தனி நேயர்கள் பட்டாளமே உள்ளது.



இந்நிகழ்ச்சியில் குஷ்பு அணிந்துவரும் ஜாக்கெட் ரொம்ப பிரபலம். இதனால்தான் இந்த நிகழ்ச்சியே பிரபலமானது.



பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசுகளையும், பணத்தையும் வெல்லும் வகையில் நடத்தப்பட்டது இந்த ஜாக்பாட் நிகழ்ச்சி. ஞாயிறு தோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வந்ததுகும் இந்த நிகழ்ச்சியை நடிகை குஷ்பு தொகுத்து வழங்கி வந்தார்.



இந்நிலையில் அவர் தற்போது திமுகவில் இணைந்துள்ளதால் அந்நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.








’கலைஞர் டிவியில் மானாட மயிலாட நிகழ்ச்சில் கலந்துகொண்டார். அப்போது நாங்கள் எதுவும் சொல்லவில்லை. ஏன் என்றால் அவர் நடிப்பு தொழிலில் மட்டுமே இருந்தார்.


ஆனால் இப்போது அரசியலுக்கு சென்றுவிட்டார். தொழில் வேறு, அரசியல் வேறு என்ற கண்ணோட்டத்தில் குஷ்பு திமுகவில் இணைந்த போது தெரிவித்துள்ளார். ஆனால் நாங்கள் அப்படி பார்க்க முடியாது. ஜெயா டிவியும் அப்படி பார்க்காது.



திமுகவில் சேருவதற்கு சில நாட்களுக்கு முன்பு கூட ஜாக்பாக்ட் நிகழ்ச்சி சம்பந்தமாக மீட்டிங் நடந்தது. அப்போது கூட அவர் அரசியல் ஆசை பற்றி தெரிவிக்கவில்லை. கட்சியில் சேரும் போது தெரிவிக்கவில்லை. தொழில் வேறு அரசியல் வேறு என்று நினைப்பதால் அப்படி செய்திருக்கலாம்.

ஆனால் நாங்கள், இனி ஜாக்பாக்ட் நிகழ்ச்சியில் குஷ்பு பங்கேற்கக்கூடாது என்பதில் தெளிவான முடிவு எடுத்துள்ளோம். அவரை இந்நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாய் நீக்கியுள்ளோம்.



அவர் பங்கேற்ற 15 எபிசோடு ஒளிபரப்பாகும் நிலையில் தயாராக இருக்கிறது. அதையும் ஒளிபரப்பப்போவதில்லை.வேறு ஒரு பிரபலத்தை வைத்து இனி அந்த நிகழ்ச்சியை நடத்துவோம். அது வரை ஜாக்பாட் நிகழ்ச்சியை நிறுத்தி வைத்திருப்போம்’’என்று ஜாக்பாட் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.





இது குறித்து குஷ்பு, யார் சொன்னது என்று முதலில் ஆவேசப்பட்டார்.



பிறகு விசயத்தை கேட்டு தெரிந்துகொண்டவர், ‘’அரசியலையும் தொழிலையும் ஒன்றாக பார்க்கிறார்கள். நான் அப்படி ஒன்றாக பார்பதில்லை. அதனால்தான் இவர்களிடம் சொல்லிவிட்டு முடிவெடுக்க வேண்டும் என்று நினைக்கவில்லை;திமுகவில் இணைந்தேன்.



என்னை ஜாக்பாட் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளனர். நீக்கம் செய்யும் போது என்னிடம் தான் முதலில் தெரிவிக்க வேண்டும். ஆனால் இதுவரை எந்த தகவலும் இல்லை.

முதலில் என்னிடம் தகவல் தெரிவிக்கட்டும். அப்புறம் ஆலோசித்து முடிவெடுக்கிறேன்’’என்று தெரிவித்தார்.



அடுத்த ஜாக்கெட்(ஜாக்பாட்) பிரபலம் யார்? யாராக இருக்கும் என்று தாய்க்குலங்கள் பேசத்தொடங்கிவிட்டார்கள்.

No comments:

Post a Comment