Wednesday, May 26, 2010

ஒரே நேரத்தில் மூன்று படங்கள்... எதிர்ப்பைச் சமாளிக்க விஜய்யின் திட்டம்!

shockan.blogspot.com

தனக்கு எதிராகக் கிளம்பியுள்ள திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் எதிர்ப்பைச் சமாளிக்க, புதிய திட்டம் வகுத்துள்ளார் நடிகர் விஜய்.

தொடர்ந்து 5 படங்கள் தோல்வியால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை விஜய் ஈடுகட்டியே தீரவேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தியுள்ளனர் திரையரங்க உரிமையாளர்கள். இதைச் சமாளிக்க விஜய் புதிய திட்டத்தை வகுத்துள்ளாராம்.

அதன்படி ஒரே நேரத்தில் மூன்று படங்களைத் துவக்குகிறார்.

முதல் படம் காவல்காரன் ஏற்கெனவே 70 சதவிகிதம் முடிந்துள்ள நிலையில், அடுத்த வாரம் வேலாயுதம் படத்தை ஆரம்பிக்க உள்ளார். அதற்கடுத்த சில தினங்களில், 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்கையும் ஆரம்பிக்க உள்ளார்.

இந்த மூன்று படங்களின் ரிலீஸின் போதும், முந்தைய நஷ்டங்களை சரிகட்டும் வகையில் எம்ஜி ரேட்டைக் குறைத்துக் கொள்ளத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

விஜய்யின் இந்த முடிவுக்கு திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் ஒப்புக் கொள்வார்களா என்பது, அவர்களின் நாளைய கூட்டத்தின் முடிவில் தெரிந்துவிடும்.

No comments:

Post a Comment