Monday, May 24, 2010

விஜய் ஜோடி ஹன்ஸிகா!


shockan.blogspot.com
விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தில் அவருக்கு ஜோடியாக ஜெனிலியா நடிப்பார் என்றெல்லாம் கூறப்பட்டது.

ஆனால் உண்மையில் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடி ஹன்ஸிகா மோத்வானி.

தனுஷுக்கு ஜோடியாக இப்போது மாப்பிள்ளை படத்தில் நடித்து வரும் ஹன்ஸிகா, அடுத்த சில தினங்களில் வேலாயுதம் யூனிட்டில் ஐக்கியமாக உள்ளாராம்.

பிரபு தேவா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் இச் படத்துக்கும் இவர்தான் ஹீரோயின் என்பது நினைவிருக்கலாம். நடித்து ஒருபடம் கூட வெளியாகாத நிலையில் டாப் நடிகர்களுடன் ஜோடி சேரும் வாய்ப்பு ஹன்ஸிகாவுக்குக் கிடைத்திருப்பது கோலிவுட் நாயகிகளின் புருவத்தை உயர்த்தியுள்ளது.

இதற்கிடையே, வேலாயுதம் படத்தின் துவக்க விழா மற்றும் பூஜையை மிகப் பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளார் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன். நேரு உள்விளையாட்டு அரங்கில், திரையுலகப் புள்ளிகள் முன்னிலையில் இந்தப் படத்தின் துவக்க விழாவை நடத்துகிறார்.

தசாவதாரம் படத்துக்கு ஜாக்கிசானை அழைத்து ஆஸ்கர் ரவிச்சந்திரன் இசை வெளியீட்டு விழா நடத்தியதும் இங்குதான்.

No comments:

Post a Comment