Friday, May 21, 2010

இந்திப் பட விழா- இலங்கையில் கிரிக்கெட் ஆடும் ஷாருக், சல்மான்


shockan.blogspot.com

இலங்கை யில் நடைபெறவுள்ள சர்வதேச இந்திப் பட விழாவில் பங்கேற்கச் செல்லும் ஷாருக் கானும், சல்மான் கானும், இலங்கை கிரிக்கெட் அணியினரை எதிர்த்து கிரிக்கெட் போட்டியில் ஆடவுள்ளனராம். இதில் கிடைக்கும் நிதியை, இலங்கை அரசு, முன்னாள் சிறார் போராளிகளின் நலனுக்காக செலவிடப் போகிறதாம்.

இந்தித் திரைப்படங்களுக்காக மட்டும் உருவாக்கப்பட்ட விருதுதான் சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா. இதில் மருந்துக்குக் கூட இந்தியாவின் எந்த மொழிப் படத்துக்கும் விருது தர மாட்டார்கள். முற்றிலும் இந்தி மட்டுமே இதன் முக்கியப் புள்ளியாக உள்ளது. வெளிநாடுகளில் மட்டுமே இந்த விழாவை நடத்தி வருகிறார்கள்.

இந்த முறை கொழும்பில் ஜூன் 3ம்தேதி முதல் 5ம் தேதி வரை விழாவை நடத்தவுள்ளனர்.

இந்த விழாவை, ஒட்டுமொத்த தமிழர்களின் கோரிக்கையை ஏற்று அமிதாப் பச்சன், மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோர் புறக்கணித்துள்ளனர். அதற்கும் மேலாக விழாவின் பிராண்ட் அம்பாசடர் பொறுப்பிலிருந்தும் அமிதாப் விலகி விட்டார்.

இந்த விழாவை புறக்கணிப்பதாக தமிழ்த் திரையுலகம் அறிவித்துள்ளது. மேலும், ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமும் விழாவைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் இந்தித் திரையுலகினர் இதை கண்டு கொள்வது போலவே தெரியவில்லை.

இந்த நிலையில், பாலிவுட் அணிக்கும், இலங்கை கிரிக்கெட் அணிக்கும் இடையே ஒரு கிரிக்கெட் போட்டியை நடத்தப் போகிறார்களாம்.

விழாவின் 2வது நாளில் இந்த போட்டி நடக்கிறதாம். இதில் சல்மான் கானும், ஷாருக்கானும் இணைந்து ஆடவுள்ளனராம். பிபாஷாபாசுவும், சஞ்சய் தத்து ம்டாஸ் போடுவார்களாம்.

இது தவிர விழாவின் போது ஷாருக் கான் ஒரு நடன நிகழ்ச்சியையும் அளிக்கவுள்ளதாக விழா ஏற்பாட்டாளர்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment