Friday, May 21, 2010

நக்சலைட்டுகளை வெற்றிகரமாக ஒழிக்க இந்தியாவிற்கு உதவ தயார் : இலங்கை அறிவிப்பால் அதிர்ந்து போன இந்திய ராணுவம்


shockan.blogspot.com

சென்னை: மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்கான ஆலோசனைகளையும், அதற்கான பயிற்சிகளையும் இந்தியாவிற்கு வழங்கத் தயாராக இருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இது இந்திய ராணுவ வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டீஸ்கர்,மேற்குவங்கம்,ஒரிசா,பிகார்,ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் அடுத்தடுத்து பெரிய அளவில் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதில் ராணுவ அதிகாரிகள் உள்பட அப்பாவி மக்களும் பலியாகினர். இந்நிலையில் மாவோயிஸ்டுகளை ஒடுக்குவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வரும் நிலையில், இப்பிரச்னையில் இந்தியாவுக்கு உதவத்தயாராக இருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

உலவின் மிகப்பெரிய இயக்கமாக கருதப்பட்ட விடுதலைப்புலிகளை தாங்கள் வீழ்த்தியிருப்பதாகவும், இதன்மூலம் இலங்கை போர்ப்படையினருக்கு நல்ல அனுபவங்கள் கிடைத்துள்ளதாகவும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கருத்துரையாளர் சிவசங்கர் மேனனிடம், இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசம் தெரிவித்தாக கூறப்படுகிறது.
இந்திய அரசுக்குப் பெரும் சவாலாக இருக்கும் மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்கு தங்களால் உதவ முடியும் என்று இலங்கை தூதர் கூறியதாகவும் தெரிகிறது.

இலங்கை அதிகாரியின் இந்த பேச்சு இந்திய ராணுவ வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ராணுவத்தின் உதவியுடன் புலிகளைத் தோற்கடித்ததை மறைத்துவிட்டு, இவ்வாறு இலங்கை கூறியிருப்பது இந்திய ராணுவ அதிகாரிகளிடம் கோபத்தை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment