Sunday, May 16, 2010

காமெடி பீஸா, ராவடி பீஸா?


shockan.blogspot.com
சிங்கத்தையும் புலியையும் சேர்த்து பிசைஞ்சு செஞ்சாலும் கர்ஜனை வராது காமெடி சிங்கம்புலிக்கு. கைவசம் 17 படங்களை வைத்துக் கொண்டு திடீர் கோதாவில் இறங்கியிருக்கும் இந்த சிரிப்பு நடிகர், ஒரு வருங்கால இயக்குனரின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்ட கதை இது.

விருந்தாளி என்ற படத்தை தயாரிக்கும் நிறுவனத்திடம் கதை சொன்னாராம் சசிக்குமாரிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ஒருவர். இந்த கதையை கேட்டுவிட்டு இம்ப்ரஸ் ஆன தயாரிப்பாளர் ராஜேஷ் கோபிநாத் கதையை இன்னும் டெவலப் பண்ணுங்க. நாம சேர்ந்து படம் பண்ணலாம் என்று உத்தரவாதம் கொடுத்துவிட்டு கல்ஃப் கண்ட்ரிக்கு பறந்துவிட்டார். (முதலாளிக்கு பிசனஸ் அங்கதானாம்!) அவர் வருவதற்குள் கதையை பக்காவா ரெடி பண்ணிவிட்டு காத்திருந்த அசோசியேட், பயங்கர மூடுடன் ரூமுக்குள் போனால், உள்ளே நம்ம சிங்கம்புலி. ஒரு காலத்தில் இவரும்,. அ.இ ம் ஒன்றாக வொர்க் பண்ணியவர்கள்.

விருந்தாளி படத்திற்கு வசனம் எழுதிக் கொடுத்திருப்பவர் சிங்கம்புலிதான். அந்த உரிமையில் அங்கே வந்திருந்தது சிங்கம். சார், உங்க கதையை இவருகிட்டவும் சொல்லிடுங்களேன் என்ற ராஜேஷ் கோபிநாத் சிங்கம்புலி பக்கம் கைகாட்ட, கதை சொன்னார் அ.,இயக்குனரும்.

கதையை கேட்டு முடித்த சிங்கம், இதெல்லாம் ஒரு கதையா என்று கர்ஜித்துவிட்டு, தயாரிப்பாளரிடம் உங்க எண்ணத்தை மாத்திக்கோங்க என்று கூறிவிட்டாராம். அவரே ஓ.கேன்னு சொன்ன கதையை, அரைகுறையா கேட்டு அருவாள இறக்கிட்டாரேன்னு சிங்கம் புலி மேல செம கோவமா திரியுறாரு இந்த வருங்கால இயக்குனர். காமெடி பீஸுன்னு நினைச்சா சாரு, ராவடி பீஸ்சா இருக்காரே?

No comments:

Post a Comment