Saturday, May 22, 2010

என் தலைமையில் ஆட்சி அமைக்கணும்னு நினைக்கிறவங்க நம்மகூட இருக்கட்டும்'னு விஜயகாந்த் சொன்னாராம்.





shockan.blogspot.com
""ஹலோ தலை வரே... .... தாய்லாந்து நாட்டில் பிரதமருக்கு எதிரா இரண்டு மாசமா எதிர்க் கட்சிகள் நடத்துற போராட் டம் நாளுக்கு நாள் தீவிர மடைஞ்சுக்கிட்டிருக்கு. பிரதமருக்கு ஆதரவா செயல் பட்ட ராணுவத்தளபதி சுட்டுக் கொல்லப்பட்டிருக்காரு. இப்ப ராணுவத்தோடு பாய்ச்சல் போராட்டக்காரர்கள் பக்கம் திரும்பியதால, குருவி சுடுற மாதிரி சுட்டுக்கிட்டிருக் காங்க.''

""என்னப்பா எடுத்த எடுப்பிலேயே "வேர்ல்டு திஸ் வீக்' ரேஞ்சுக்கு நியூஸ் சொல்றே?''

""தலைவரே... தாய் லாந்தில் கலவரம் நடத்துக்கிட்டிருக்கிற இந்த நேரத்தில்தான், "விருதகிரி' படத்தை டைரக்ட் செய்யும் விஜயகாந்த் அங்கே ஷூட்டிங்கிற்காகப் போயிருக்காரு. அதனால அவரோட நண்பர்களும் நலன்விரும்பிகளும் பதட் டத்தோடு தொடர்பு கொண்டு பேசியிருக்காங்க. தான் இருக்கிற இடத்தில் எந்தக் கலவரமும் இல்லைன்னு விஜயகாந்த் சொன்னதும்தான் அவங்களுக்கு நிம்மதி. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டி விட்டதுபோல நியூஸ்கள் வந்துகொண்டிருப்பதைப் பற்றியும் அவரோட நண் பர்கள் கேட்டிருக் காங்க.''

""விஜயகாந்த் என்ன சொன் னாராம்?''

""சினிமாவில் ஒரு சிரிப்பு சிரிப்பாரே... அதே மாதிரி சிரிச்சிட்டு நிலவரத்தைச் சொல்லியிருக்காரு. அதாவது, "கூட்டணி வச்சா எத்தனை சீட் கொடுப்பாங்க. பாதிக்குப் பாதி சீட் கொடுப்பாங்களா? ஜெயிச்சா, இரண்டரை வருசம் அவங்க முதல்வர் இரண்டரை வருசம் நான் முதல்வர்னு ஜார்கண்ட் பாணியில் செயல்பட ஒத்துக்குவாங்களா?அப்படியிருந்தாதான் கூட்டணி அமைக்க முடியும். இத்தனைநாளா கஷ்டப்பட்டுக்கிட்டிருக்கேன்னா, சி.எம்.ங்கிற எய்ம்மோடுதான் கஷ்டப்படுறேன். அதற்கு உடன்படாம, கூட்டணியில சேர்த்துக்கிட்டு 50 சீட் கொடுத்தா அதில் நம்மாளுங்க 30 பேர் ஜெயிச்சி எம்.எல்.ஏ ஆவாங்க. 30 பேர் எம்.எல்.ஏ ஆவதற்காக நான் என்னோட சி.எம். எய்ம்மை விட்டுக் கொடுக்கணுமா? எம்.எல்.ஏ ஆகணும்னு நினைக்கிற கட்சிக்காரங்க எந்தப் பக்கம் வேணும்னாலும் போய்க் கொள்ளட்டும். என் தலைமையில் ஆட்சி அமைக்கணும்னு நினைக்கிறவங்க நம்மகூட இருக்கட்டும்'னு விஜயகாந்த் சொன்னாராம்.''

""உள்துறைச் செயலாளர் உள்பட 6 உயர் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் திடீர்னு மாற்றப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கி யிருக்குதே?''

""இதிலே உள்துறைச் செயலாளர் மாலதி ஐ.ஏஎஸ் மாற்றப்பட்டதுதான் அதிக பரபரப்பை உண்டாக்கிடிச்சி. நேர்மையான அதிகாரின்னு பெயரெடுத்தவரை எப்படி மாற்றினாங்கன்னு விவா தங்கள் நடந்தது. தனக்கு ட்ரான்ஸ்பர் வேணும்னு மாலதியே தொடர்ந்து கேட்டுக்கிட்டுத்தான் இருந்தாராம். தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி ஏப்ரலில் ரிடையர்டாக வேண்டியிருந்ததால் அந்த இடத்திற்கு தனக்கு ட்ரான்ஸ்பர்+புரமோஷன் கிடைக்கும்னு எதிர்பார்த்துக்கிட்டிருந்தார். ஆனா, செம்மொழி மாநாட்டுக்காக ஸ்ரீபதிக்கு அக்டோபர் வரைக்கும் எக்ஸ்டென்ஷன் கொடுக்கப்பட்டதால மாலதி அப்செட். உள்துறையிலிருந்து வேற இடத்துக்கு மாற்றும்படி மறுபடியும் கேட்டுக்கிட்டே இருந்த தால, அவரை விஜிலென்ஸ் கமிஷனரா நியமிச் சிருக்காங்க. அக்டோபருக்குப் பிறகு, மாலதிதான் தலைமைச் செயலாளர்னு இப்பவே கோட்டை வட்டாரத்தில் பேச்சு அடிபடுது.''

""புது உள்துறைச் செயலாளர் எப்படி?''

""நிதித்துறையிலிருந்து ஞானதேசிகன்தான் உள்துறைக்கு வந்திருக்கிறார். இவரும் மாலதி போலவே கெடுபிடியானவர். விதிகளுக்கு புறம்பான நடவடிக்கைகளுக்கு ரொம்பவும் வளைந்து கொடுக்கமாட்டார். ஒரே துறையில் அதிகபட்சம் 3 ஆண்டுகளுக்கு உயரதிகாரிகள் இருப்பதில்லை. ஆனா மாலதி, ஞானதேசிகன் இவங்களெல்லாம் 4 வருசமா ஒரே துறையில் இருந்ததால்தான் இந்த மாற்றம். அதேபோல, கூட்டுறவுத்துறையிலிருந்த சண்முகம், நிதித் துறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். குடிநீர் வழங்கல் துறையில் இருந்த ஸ்வரன்சிங் கூட்டுறவுத்துறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். உள்துறைக்குச் செயலாளராகியிருக்கும் ஞானதேசிகன், 3 வருடங்களுக்கு மேல் ஒரே இடத்தில் இருக்கும் ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பற்றிய லிஸ்ட்டை எடுத்துக்கிட்டிருக்கிறார். இதேபோல் மூன்று வருடத்தைத் தாண்டிய பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் குற்றாலிங்கம், சுகாதாரத்துறைச் செயலாளர் சுப்புராஜ் உள்பட 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் விரைவில் மாற்றப்படுவார்கள்.''

""சட்டச்சிக்கல்கள் நீங்கி, அரசியல் வெற்றி கிடைப்பதற்காக காளஹஸ்தியில் ஜெ பூஜை செய்யப் போறாருங்கிறதை நாமதான் முதலில் சொன்னோம். 17-ந் தேதி காள ஹஸ்தியில் ஜெ.வும் சசிகலாவும் பூஜை செஞ்சிட்டு வந்திருக்காங் களே, பார்த்தியா?''

""தலைவரே... ... அவங்க வந்து போற வரைக்கும் காளஹஸ்தியே ஒரே டென்ஷனா இருந்திருக்கு. பூஜைக்கு 4 நாள் முன்னாடியே சோதிடர் சீனிவாசன், கும்மிடிப் பூண்டி எம்.எல்.ஏ விஜயகுமார், தென்சென்னை அ.தி.மு.க மா.செ. நீலகண்டன் இருவரும் காளஹஸ்தி கோயில் ஆய்வாளர் ஹரிபாபு, பி.ஆர்.ஓ.நாகபூஷணம் ஆகியோரை சந்தித்து, பேசவேண்டிய முறையில் பேசினாங்க. இதையடுத்து, இரண்டு நாளுக்கு முன்னாடியே காளஹஸ்தி முழுக்க கட்-அவுட்டை வச்சிட் டாங்க. பூஜை நாளன்று, கோயில் நிர்வாகம் சார்பில் நடத்தப்படுற இன்ஜினியரிங் காலேஜுக்கும் லீவு விட்டுட்டாங்க. விருந்தினர்கள் தங்குவதற்காக உள்ள 120 ரூமும் ஜெ பெயரில் புக் ஆயிடிச்சி. ஜெ ஹெலிபேடில் இறங்கி கோயிலுக்குப் போறதுக்காக 2 மணிநேரத்துக்கும் மேலே டிராபிக்கை க்ளோஸ் பண்ணிட்டாங்க. பொதுமக்கள் தரிசனத்துக்கும் கோயில் நிர்வாகம் அனுமதிக்கலை. பிரதமர், சி.எம். இவங்க வரும்போதுகூட பாதுகாப்புக்கு வரும் போலீசாரை துப்பாக்கி யோடு உள்ளே அனு மதிக்கமாட்டாங்க. மோப்ப நாயையும் உள்ளே விடமாட்டாங்க. ஆனா, ஜெ பூஜை பண்ண வந்தப்ப இதையெல்லாம் தாராளமா அனுமதிச் சிட்டாங்க.''

""அப்படி என்ன பூஜையாம்?''

""சிவன் சன்னதியில் ஜெ.வும் சசியும் 2 மணி நேரம் இருந்திருக்காங்க. அம்மன் சன்னதியில் முக்கால் மணி நேரம் இருந் திருக்காங்க. சாமிக்குப் போர்த்தப்பட்ட பட்டு சேலையை இரண்டு பேருக்கும் கோயில் நிர் வாகம் போர்த்தியிருக்குது. கோயில் படிகளில் ஜெ ஏறுவதற்கு வசதியா, மரத்தாலான புதுப் படிக்கட்டும் அமைக்கப்பட்டிருக்குது. இப்படியெல்லாம் ஜெ.வுக்கு சலுகைகாட்டி, பொதுமக்களை சாமி தரிசனத்திற்கு அனுமதிக் காததால் கோயிலுக்கு வரவேண்டிய 10 லட்ச ரூபாய் வருமானம் இழப்பாம். ஜெ பூஜைக்கு வந்தால் தட்சணையை வாரி வழங்குவார்னு சொல்லுவாங்க. காளஹஸ்தியில் அவர் எதுவும் கொடுக்கலையாம். ஜெ விசிட் இப்ப காள ஹஸ்தியில் சர்ச்சையை உண்டாக்கியிருக்குது. பிரதமர், முதல்வர், மத்திய மந்திரியா இப்ப இருக்கிறவங்களுக்குத்தான் வி.வி.ஐ.பி. அந்தஸ்தில் கோயிலுக்குள் மரியாதை தரணும்னும், ஜெ.வுக்கு எப்படித் தரலாம்னு சிலர் சர்ச்சையைக் கிளப்பி, கோயில் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப ரெடியாகிக்கிட்டிருக்காங்களாம்.''

""தமிழகத்தில் மீண்டும் மேலவையை உருவாக்குவதற்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் ஒப்புதல் அளித்து, அது மத்திய அரசின் கெஜட்டி லும் வெளியிடப்பட்டிருக்குதே!''

""இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கும் இதை அனுப்பிவச்சிட்டாங்க. தமிழக எம்.எல்.ஏக்கள் அடிப்படையில் மேலவையில் எத்தனை எம்.எல்.சிக்கள் இடம்பெறுவாங்க, அதில் ஆசிரியர் மற்றும் பட்டதாரி களுக்கான இடங்கள் எத்தனை? இதற்கான தொகுதிகளை மாவட்ட வாரியாக எப்படி பிரிப்பதுங் கிற விவரங்களையெல்லாம் தேர்தல் ஆணையம் தயார் பண்ணிக்கிட்டிருக்குது. இந்தப் பணிகளை ஒருங் கிணைப்பதற்காகத்தான், ஜமாலுதீனை சிறப்பு அதிகாரியா தமிழக அரசு நியமித்தது. இந்த நியமனம் தொடர்பா தன்னிடம் எந்த ஆலோசனையும் நடத்தப்படலைங்கிற கோபத்தில் இருந்த நரேஷ்குப்தா, தேர்தல் ஆணைய நடவடிக்கைகளில் தலையிடுவதா தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதிட்டாரு. தலையீடு இல்லை, ஒருங்கிணைப்புதான்னு தமிழக அரசு தரப்பிலிருந்து விளக்கம் தரப்பட்டதையடுத்து, நரேஷ்குப்தா வும் ஜமாலுதீனும் மற்ற அதிகாரிகளும் மேலவைக் கான தேர்தலை நடத்தும் பணியில் ஒருங்கிணைந்து செயல்பட்டுக்கிட்டிருக்காங்க.''

""அடுத்த தகவல்?''

""கோவை அண்ணாபல்கலைக் கழகத் துணைவேந்தரா கருணாகரன் நியமிக்கப்பட்டிருக்கிறார். இசை வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த இவர், வெளிநாடுகளில் பல ஆய்வுகளை வெற்றிகரமாக மேற்கொண்டவர். துணைவேந்தர் பதவிக்கு நூற்றுக்கு நூறு தகுதியானவர். ஏற்கனவே வேறொருவர் இந்த பதவியை எதிர்பார்த்துக்கிட்டிருந்தார். 99% அவருக்குத்தான் கிடைக்கும்னும் பேச்சு இருந்தது. அவரும் 3-சி செலவு பண்ண ரெடியாகி, 1-சியை அட்வான்ஸாகவும் கொடுத்திருந் தாராம். இந்த நிலையில், துணை வேந்தர் பதவியில் கருணாகரனை முதல்வர் நியமிச்சதில் வாங்கியவர் களுக்கு பயங்கர ஷாக்காம். உயர்கல்வித்துறை வட்டாரத்தில் இந்த மேட்டர்தான் புயலைக் கிளப்பியிருக்குது.''

""மே மாதம், அதுவும் அக்னி நட்சத்திர நேரத்தில் லைலா புயல் வந்து தமிழகத்தை ஜிலுஜிலுன்னு புரட்டிப் போட்டுடுச்சே!''





""மழையை தமிழ்நாட்டில் கொட்டிவிட்டு, புயலை ஆந்திராவுக்கு கொண்டுபோயிடிச்சி லைலா. அதிலும் சென்னை நகரம் மிதக்குற அளவுக்கு சரி மழை. மந்திரிகள் வசிக்கிற க்ரீன்வேஸ் சாலை உள்பட பல இடங்களில் பவர்கட். ராத்திரியில் தூக்கமில்லாம, பகலிலும் வெளிச்சமில்லாம சென்னைவாசிகள் கஷ்டப்பட, பவர்கட் பிரச்சினையைத் தீர்க்க வேண்டிய மின்வாரிய அதிகாரிகள் பலபேர் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டாங்க. டெலிபோன் ரிசீவரை எடுத்து வெளியே வச்சிட்டாங்க. ஆந்திராவில் புயல் கரையைக் கடக்குற வரைக்கும் சென்னையின் பல பகுதிகள் இருண்டுதான் கிடந்தது.''

""தமிழகத்தின் மற்ற பகுதிகளிலெல்லாம் தினமும் 3 மணி நேரம் இப்படித்தான் இருக்குதுப்பா...''

""தஞ்சாவூர் தமிழரசி கல்யாண மண்டபத்தில் எம்.நடராஜன் தம்பி ராமச்சந்திரனோட மகன் மருதுவுக்கு திருமணம் நடந்தது. நடராஜன்தான் எல்லோரையும் வரவேற்றார். சசிகலா வரலை. சுந்தரவதனம், வெங்கடேசன், மகாதேவன், தினகரன் மனைவி இவங்களெல்லாம் வந்திருந்தாங்க. ஸ்ரீதர் வாண்டையார் வந்தது எல்லோருக்கும் ஆச்சரியம். அவர்கிட்டே நடராஜன், தி.மு.க கூட்டணியில் எப்படி நடத்துறாங்கன்னு கேட்க, ரொம்ப மரியாதையா நடத்துறாங்கன்னு சொன்ன வாண்டையார், கும்பகோணத்தில் தேவர் சிலை திறப்பதற்கு கலைஞர்கிட்டேதான் தேதி கேட்டோம். அவரால் வர முடியாதுங்கிறதால ஸ்டாலினை கலந்துக்கச் சொல்லியிருக்கிறார். ஜூன் 6-ந் தேதி நடக்குற விழாவில் லட்சக்கணக்கில் கூட்டம் காட்டப் போறோம்னு சொல்லியிருக்கிறார். ராஜ்யசபா சீட் கேட்கவேண்டியதுதானேன்னு நடராஜன் உசுப் பேத்த, ஸ்ரீதர் வாண்டையார் எந்த பதிலும் சொல்லலை.''

""தி.மு.க..வின் ராஜ்யசபா சீட்டுக்கான பட்டியலில் இப்ப 3 பெயர்கள் பலமா அடிபடுது. செல்வகணபதி, கே .பி.ராமலிங்கம், காஞ்சனா கமல நாதன் இந்த 3 பேரும் ஏற்கனவே உள்ள பரிசீலனை பட்டியலில் இடம்பிடிச்சிருக்காங்க. 3 சீட்டுமே தி.மு.க.வுக்குன்னா, பா.ம.க.வுக்கு சீட் கிடையா தான்னு விவாதம் நடக்குது. இந்த விஷயத்தில் இன்னமும் சஸ்பென்ஸை மெயின்டெய்ன் பண்ணிக்கிட்டிருக்கிறார் கலைஞர்.''

No comments:

Post a Comment