Wednesday, May 26, 2010

நடிகர் செந்திலுக்கு முதுகு ஆபரேஷன்!


shockan.blogspot.com

பிரபல நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு முதுகில் ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது.

நகைச்சுவை நடிகர் செந்தில், கொடைக்கானலில் நடந்த ஒரு படப்பிடிப்புக்கு சென்றபோது, கால் இடறி ஒரு பாறை மீது விழுந்தார். அதில், அவருடைய முதுகில் பலத்த அடிபட்டது. இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டபின், தொடர்ந்து நடித்தார்.

சமீபத்தில் அவர் சேலத்துக்கு சென்றபோது, அவருடைய கார் ஒரு பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது. செந்திலுக்கு மீண்டும் முதுகில் அடிபட்டது. அதில் இருந்து அவருக்கு தாங்க முடியாத முதுகு வலி ஏற்பட்டது. நடக்க முடியாமல் அவதிப்பட்டார்.

அதைத் தொடர்ந்து அவர், மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் அவரை பரிசோதித்தபோது, முதுகுத்தண்டு எலும்பில் விரிசல் ஏற்பட்டிருப்பதை கண்டுபிடித்தார்கள். இதற்காக அவருக்கு, அறுவைச் சிகிச்சை செய்ய முடிவு செய்தார்கள்.

அதன்படி, செந்திலுக்கு மதுரை மருத்துவமனை ஒன்றில் ஆபரேஷன் நடந்தது. டாக்டர் அரவிந்த்குமார், டாக்டர் ஷியாம் ஆகியோர் தலைமையில், 10 டாக்டர்கள் இந்த ஆபரேஷனை செய்தார்கள்.

5 மணி நேரம் இந்த அறுவைச் சிகிச்சை நடந்தது. இப்போது செந்தில் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தார்கள்.

No comments:

Post a Comment