Tuesday, May 4, 2010

சத்யம் அழகுப்பெண்களும் சாமியாரும்


shockan.blogspot.com
சத்யம் தியேட்டரில் நடந்த ராமர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வாசலில் இரண்டு அழகான பெண்கள் எல்லோருக்கும் வணக்கம் வைத்து வரவேற்றனர்.



பின்னர் விழாவில் அபிராமி ராமநாதன் பேசும்போது, ‘’வாசலில் வரவேற்ற பெண்கள் நல்ல அழகு. அவர்கள் வணக்கம் வைத்த விதமும் அழகு என்று குறிப்பிட்டார்.



இவரின் பேச்சுக்கு கமெண்ட் அடிப்பது போல் ஆர். பார்த்திபன் பேசினார்.



‘’சாமியாரும் சீடர்களும் ஆற்றை கடக்க முற்பட்டனர். அப்போது ஒரு பெண் தான் ஆற்றை கடக்க உதவும்படி கேட்டுக்கொண்டாள். உடனே சாமியார் அந்த பெண்ணை தோளில் போட்டுகொண்டு ஆற்றைக்கடந்தார்.



கரை வந்ததும் அப்பெண்ணை இறக்கிவிட்டு சாமியார் நடந்தார். சீடர்கள் சாமியாரை பின் தொடர்ந்தனர்.



ஐந்து கிலோமீட்டர் கடந்து வந்தபிறகு சீடர்கள் சாமியாரிடம், ‘’சாமி...நீங்கள் எப்படி ஒரு பெண்ணைத்தூக்கலாம்...என்று கேட்டார்கள்.



அதற்கு அந்த சாமியார், நான் அந்த பெண்ணை எப்போதோ இறக்கிவிட்டுவிட்டேன். ஆனால் நீங்கள் இன்னமும் அவளை சுமந்துகொண்டிருக்கிறீர்கள்’’என்று சொன்னார்.



அதுமாதிரி வாசலில் வரவேற்ற அந்த பெண்களை எல்லோரும் அப்போதே மறந்துவிட்டார்கள். அபிராமிராமநாதன் இன்னும் நினைத்துகொண்டிருக்கிறார்’’என்று சொன்னதும், விழாவில் பலத்த சிரிப்பலை.



‘’நானும் அந்த பெண்களை ரொம்ப ரசிச்சேன். மொம்மையா உண்மையா என்றுகூட ஆச்சரியப்பட்டேன். அவுங்களை பார்ப்பதற்காகவே இரண்டு முறை அப்படியே வந்தேன். இரண்டு முறையும் வணக்கம் வைத்தார்கள்’’என்று பார்த்திபன் சொன்னதும் மீண்டும் எழுந்த பலத்த சிரிப்பலை அடங்க நெடுநேரமானது

No comments:

Post a Comment