Saturday, May 1, 2010

முஸ்லிமாக மதம் மாறிய இளம்பெண்கள்!


shockan.blogspot.com

இந்துப் பெண்களை மூளைச்சலவை செய்து மதமாற்றம் செய்கிறார்கள் முஸ் லிம்கள் என இந்து அமைப்பினர் கொந்தளிக்க... அவர்களின் துணை யோடு... மதம் மாறிய இரண்டு இளம் பெண்களை மீட்டுவந்திருக்கிறது அவர்களின் குடும்பம். என்ன நடந்தது?

சின்ன ஆவுடையார் கோயில் கிராமத்தை சேர்ந்த இளம்பெண்களான சுந்தரியும் சத்யாவும்... த.மு.மு.க. மாவட்ட செயலாளர் ஷியாவுதீன் வைத்திருக்கும் கடைகளில் வேலை பார்த்துவந்தனர்.

திடீரென இந்த இரண்டு பெண்களும் முஸ்லிம் மதத்தில் சேர்ந்துவிட்டனர். இவர்களை மீட்டது எப்படி? மதம் மாறிய பெண்களின் அப்பாக்களான கிருஷ்ணமூர்த்தியையும் லட்சுமணனையும் சந்தித்தோம். நம்மிடம் நெகிழ்ச்சியோடு பேச ஆரம்பித்த இவர்கள் “""நாங்க சாதிமதம் பார்க்காம எல்லோரையும் அண்ணன் தம்பிகளா பாவிச்சி வாழறவங்க. அப்படிப்பட்ட எங்களுக்கு இப்படியொரு சோதனை.

எங்க மகள்கள் ஷியாவுதீனோட கடைகள்ல வேலை பார்த்தாங்க. கொஞ்சநாளா அவங்க போக்கில் மாற்றம் தெரிய ஆரம்பிச்சிது. குறிப்பா சொல்ல ணும்னா.. முஸ்லிம்கள் தொடர்பான நிகழ்ச்சிகளையே டி.வி.யில் பார்க்க ஆரம்பிச்சாங்க. இதை கவனிச்சி நாங்க கண்டிச்சப்ப... சும்மாதான் பார்க்கறோம்னு மழுப்பினாங்க. இந்த நிலைலதான் வேலைக்குப்போன எங்க பொண்ணுங்க வீடுவந்து சேரலை. பிள்ளைகளைக் காணலையேன்னு நாங்க பதறிக்கிட்டு இருந்தப்ப.. எங்க பொண்ணுங்க எங்களுக்கு போன்பண்ணி... "நாங்க ஏர்வாடில இருக் கோம். முஸ்லிமா மாறப்போறோம். எங்களைத் தேடவேணாம்'னு சொல்லிட்டு போனைக் கட்பண்ணிட்டாங்க.

இப்படியும் ஒரு கொடுமையான்னு திகைச்சுப்போன நாங்க... அந்த த.மு.மு.க. ஷியாவுதீனைத் தேடி அவரோட கடைக்குப் போனோம். அங்க இருந்தவங்க.. அவர் வெளியூர் போயிருக்கிறதா சொன்னாங்க. உடனே ஏர்வாடிக்குப் போனோம். அங்க ஒரு விடுதியில் எங்க பிள்ளைகளுக்கு முக்காடு போட்டு வச்சிருந்தாங்க. எங்க பிள்ளைகளை அவங்க எங்கக்கிட்ட பேச விடலை. அதனால்... திரும்பிவந்து ‘"எங்க மகள்களை மதம் மாற்ற கடத்திக்கிட்டுப்போய்ட்டாங்க. மீட்டுகொடுங்க'ன்னு அதிராம்பட்டினம் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுத்தோம். அவங்க புகாரை வாங்க மறுத்துட்டாங்க. அப்புறம்தான் இந்து அமைப்புகளின் உதவி யை நாடினோம் . அவங்க வந்து பிரஷர் கொடுத்தபிறகுதான் போலீஸ் புகாரை வாங் கிக்கிட்டு மீட்கும் முயற்சியில் இறங்கியது.

போலீஸைக் கூட்டிக்கிட்டு ஏர்வாடிக் குப் போனோம். அந்தப் பிள்ளைகள் மது ரைக்குப் போய்டுச்சேன்னு அந்த விடுதிக் காரங்க சொல்ல... அதே நேரம் எங்க பொண்ணுங்க மதுரை வக்கீல் ஒருத்தர் கூட கார்ல வந்து இறங்கினாங்க. போலீஸ் மூலம் எங்க மகள்களை வலுக் கட்டாய மா கூட்டிட்டு வந்து பட்டுக் கோட்டை கோர்ட்டில் ஆஜர் படுத்திட்டு.. அப்புறம் வீட்டுக்குக் கூட்டிவந்திருக்கோம். வேலைக்குப் போன எங்க பிள்ளைகளை இப்படி மூளைச்சலவை பண்ணி அவங்க மதமாற்றம் பண்ணலாமா?'' என்றார்கள் கலக்கம் மாறாமலேயே.

மதமாற்றப் புகாருக்கு ஆளான த.மு. மு.க., மா.செ.வான ஷியாவுதீன் நம்மிடம் “""இந்த பிள்ளைகளை யாரும் மூளைச் சலவை செய்யலை. அவங்களா இஸ்லாத் தின் மேல் பற்றுவச்சுதான் மதம் மாறி யிருக்காங்க'' என்றார் உறுதியான குரலில். பா.ஜ.க. மாசெ. முரளிகணேஷும் தெய் வீகத் தமிழ் புரட்சிப் பாசறை மதன கோபாலும் “""முத்துப்பேட்டை அதிராம் பட்டினம் பகுதிகள்ல இருக்கும் ஏழை இந்துப்பெண்கள்தான். முஸ்லிம்களின் கடைகளிலும் நிறுவனங்களிலும் அதிகமா வேலைபாக்கறாங்க. முஸ்லிம்களோ அவங்க வறுமையைப் பயன்படுத்தி அவங்களை மதம்மாற்றி... அவங்களைக் கல்யாணமும் பண்ணிக்க ஆரம்பிக்கிறாங்க. அதனால் இப்ப முத்துப் பேட்டை பகுதியில் எந்த இந்துப் பெண்ணும் முஸ்லிம்களின் கடைகளுக்கு வேலைக்குப் போகக்கூடாதுன்னு நிறுத்திவச்சிட்டோம். அதேபோல் அதிராம்பட்டினத்திலும் நாங்க கட்டுப்பாடு விதிக்கப்போறோம். அவர்கள் இத்தகைய போக்குகளை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் போராட்டம்தான் வெடிக்கும்'' என்கிறார்கள் காட்டமாய்.

மதம் மாறி மீட்கப்பட்டிருக்கும் சுந்தரியையும் சத்யாவையும் நாம் சந்தித்தபோது “""நாங்க வேலைபார்த்த கடைகளுக்கு வரும் இஸ்லாமியப் புத்தகங்களை படிச்சி படிச்சி.. இஸ்லாத்தின் மீது எங்களுக்கு பிடிப்பு வந்துடுச்சி. எங்க கடை ஓனர்கிட்ட எங்களை இஸ்லாமா ஆக்குங் கன்னு கேட்டோம் . அதுக்கு, அதெல்லாம் வேணாம்... பிரச்சினை வரும்னு சொல்லிட்டார். அப்புறம் விடியல் வெள்ளி பத்திரிகையில் வந்த ஏர்வாடி முகவரியைப் பார்த்து நாங்களா கிளம்பிப்போய் மதம் மாறினோம். ஆனா எங்க அப்பாக்கள் போலீஸோடு வந்து... எங்க அம்மாக்கள் தற்கொலை பண்ணிப்பாங்கன்னு சொல்லி... எங்களை வலுக்கட்டாயமா கூட்டிட்டு வந்துட்டாங்க. கோர்ட்லயும் இதைத்தான் சொன்னோம்''’என்கிறார்கள். இவர்களில் சத்யா இன்னும் பொட்டு வைத்துக்கொள்ள முடியாது என்று தன் வீட்டாரிடம் அடம்பிடித்து வருகிறார்.

மதமாற்ற விவகாரம் அதிராம்பட்டின ஏரியாவில் தகிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது..

No comments:

Post a Comment