Tuesday, May 4, 2010

நித்யானந்தா ஆணா? நடிகை வெளியிடும் திடுக் தகவல்கள்!


shockan.blogspot.com
ன்மீகத்தை ’ஆண்மீகமாய்த் தப்புத் தப்பாய்ப் போதித்து... பெண் சீடர்களையும் பக்தைகளையும் இஷ்டம்போல் பகடைக்காயாய் உருட்டி விளையாடிய நித்யானந்தா... இப்போது பதட்டமும் பரிதவிப்புமாய்.... ராம்நகரில் இருக்கும் ’மாவட்ட பெண்கள் சிறைக்குள்’ அல்லாடிக் கொண்டிருக்கிறார்.

கண்ணசைத்தால் பெண்கள் ஓடிவந்து கால் அமுக்கும் அளவிற்கு ஏக டாம்பீகமாக வாழ்ந்த நித்யானந்தா... எடுபிடி சேவைக்குக் கூட ஆள் இல்லாத நிலையில் தனி அறையில் அடைக்கப்பட்டதில் ரொம்பவே நிலை குலைந்து போய் விட்டார்.

ஆசிரமத்தில் இருந்து உணவு கொண்டுபோக நீதிமன்றம் தடை போட்டு விட்டதால்.. மசாலா இல்லாத இட்லி, எண்ணெய் இல்லாத சப்பாத்தி போன்ற உணவுகளே சிறையில் நித்யானந்தாவுக்கு கொடுக்கப் பட்டுவருகிறது.

பக்கத்தில் இருக்கும் ஆண்கள் சிறையில் உள்ள பக்தானந்தாவை சந்தித்துப்பேச வேண்டும் என்று இரண்டுமுறை சிறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தார் நித்யானந்தா. ஆனால் விதிகளைக் காரணம் காட்டி மறுத்துவிட்ட னர். இதில் எரிச்சலான நித்யானந்தா ""எனக்கு யாரையும் பார்க்கப் பிடிக்க வில்லை. என்னை யார் சந்திக்க வந்தா லும் அனுமதிக்க வேண்டாம்'' என்று சொல்லிவிட்டார். எப்போதும் பதட்டமும் பரிதவிப்புமாக இருக்கும் நித்யானந்தா.... இடையிடையே தியானம், பூஜை என தனது பொழுதை சிறையில் போக்கினாலும் பெரும்பாலும் வெறித்த நிலையிலே யே இருக்கிறார் என் கிறது சிறைத்தரப்பு.

நித்யானந்தா ஆணே இல்லை என்று வந்த தகவல்கள்... அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலரையும் கொதிப்பில் ஆழ்த்த... அவர்கள் கர்நாடக போலீஸிடம் தொடர்ந்து பேசி வருகின்றனர். மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்திருக்கும் அந்த இளம் நடிகை ""நித்யானந்தா என்னை ஏமாற்றிக் கெடுத்தார். முதல்முறை என்னிடம் ஒரு பசிகொண்ட புலிபோல... வீரியமாக செயல்பட்டார். அடுத்த இரண்டுமுறைகள் என்னை செயல்படச் சொல்லி மகிழ்ந்தார். அந்த மாதிரியான நேரத்தில் அவர் காமசூத்திராவைப் படிப்பார். படித்துப் படித்து கொச்சையாய் அர்த்தம் சொல்வார். படிக்கும் போதே அவர் உடம்பு பரபரவென ரெடியாகி விடும். வேண்டுமானால் அவரிடம் காம சூத்திராவைக் கொடுத்து படிக்கச்சொல்லி... அவரை டெஸ்ட் பண்ணிப்பாருங்கள்''’ என்று சொல்ல...

கனடாவில் இருந்தும் அமெரிக்காவில் இருந்தும் பேசிய இரண்டு வெளிநாட்டுப் பெண்கள் ""அவர் ஒரு தூய்மையான சந்நியாசின்னு நினைச்சோம். ஆனா அது பொய். பெண்களை விதவிதமா ரசித்து ருசிப்பதில் அவர் கில்லாடி என்பதைப் பிறகுதான் புரிந்து கொண்டோம்.. எங்களை மிருதுவாப் பேசியே நம்பவச்சார். உடம்பைக் கடக்க நிர்வாணம் அணியனும்னு போதிச்சி.. உடைகளைக் களைய வைப்பார்.. ஜலக்கிரீடை மூலம் மனதின் அழுக்குகளைக் கரைக்கலாம்னு சொல்லி அப்படியே குளிக்கவைப்பார். உறவுவழியாக பரவசமாய் மோட்சத்தைத் தொடலாம். உலகில் எதுவும் பாவம் இல்லைன்னு சொல்லி... ஆபாசப் படங்களை கம்ப்யூட்டரில் போட்டுக்காட்டி.. கொஞ்சம் கொஞ்சமா உணர்வுகளைத் தூண்டி... பெண்களைத் தன் பசிக்கு விருந்தாக்கிக்கொள்வார். இப்படித் தான் எங்களையும் ஏமாற்றிக்கெடுத்தார். இப்ப அவர் ஆண்மை இல்லாதவர்னு நியூஸ் வெளியிடுறாங்க. அது திட்டமிட்டு பரப்பப்படும் பொய். வேண்டுமானால் அவர்கிட்ட ஆபாசப் படத்தைப் போட்டுக் காட்டுங்க. எப்படி அதுக்கு ரெடி ஆகுறார்னு பாருங்க''’ என நித்யானந்தாவை சோதிப்பதற்கான டிப்ஸ்களையும் அந்த வேதனைக்கிடையில் கொடுத்திருக்கிறார்கள்.

விசாரணைக்கு ரஞ்சிதா வராமல் தாமதம் செய்தால்... அவரை எப்படி வரவழைப்பது என்பது குறித்து சீக்ரட்டாக சில வியூகங்களை வகுத்திருக்கும் கர்நாடக காக்கிகள்... அதற்கான காய் நகர்த்தலையும் தொடங்கிவிட்டார்கள்.

கடந்த 10 நாட்களாக நித்யானந்தா பற்றிய தகவல்களை லெனின் தர்மானந்தாவிடமிருந்து தொடர்ந்து வாங்கிய... கர்நாடக சி.ஐ.டி. காக்கிகள், நித்யானந்தா குறித்து கிடைக்கும் தகவல்களை எல்லாம் தர்மானந்தா மூலமே சரிபார்த்துவந்தனர். தர்மானந்தா சொன்ன புகார்கள் நூற்றுக்கு நூறு சரியானது என்பதைப் புரிந்து கொண்டதோடு... நித்யானந்தாவால் பாதிக்கப்பட்ட பலரையும் தர்மானந்தா மூலமே தொடர்புகொண்டு அவர்கள் தரும் விபரங்கள்... வழக்கிற்கு வலுசேர்க்கும் என அழுத்தமாக நம்புகிறார்கள்.

நித்யானந்தா மீது தமிழகத்தில் போடப் பட்ட வழக்குகள் கர்நாடகத்துக்கு மாற்றப் பட்டபோதும்... தர்மானந்தா கொடுத்த கொலைமுயற்சி வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டிருக்கிறது தமிழக போலீஸ். இது குறித்து தனி டீம் ஒன்றை பெங்களூருக்கு அனுப்பி இருக்கிறார் சென்னை கமிஷனர் ராஜேந்திரன்.

நித்யானந்தா மீது மேலும் வழக்குகள் உண்டா என கர்நாடக சி.ஐ.டி. அதிகாரிகளிடம் நாம் கேட்டபோது ""துருவத் துருவ நிறைய தகவல்கள் கிடைத்தபடியே இருக்கிறது. புளோரிடாவில் நித்யானந்தாவும் ராஜேஷ் கிருஷ்ணா என்பவரும் தைவானைச் சேர்ந்த ஷப்பிங்லின் என்பவரும் சேர்ந்து பார்ட்னராக ’நித்யானந்தா கேபிடல் மேனேஜ்மெண்ட் பிரைவேட் லிமிடெட்’என்ற கம்பெனியைத் தொடங்கியிருக்கிறார்கள். அதில் ஆசிரம நிதியை நிறைய முதலீடாக்கி பங்கு வர்த்தகம், சிட்ஃபண்டெல்லாம் நடத்தியிருக்கிறார்கள். இதற்கெல்லாம் முறையான கணக்கே இல்லை. இதைக் கண்டுபிடித்த நாங்கள் இது குறித்து அமலாக்கப் பிரிவுக்கு கடிதம் எழுதி... நித்யானந்தாவின் அந்நியச் செலாவணி மோசடிகளை விசாரிக்கும்படி கேட்டிருக்கிறோம். இதன் அடிப்படையில் அவர்மேல் பெரா, பெமா போன்ற வழக்குகளும் பாயலாம்'' என்கிறார்கள் புன்னகைத்தபடியே.

இதற்கிடையே நித்யானந்தாவின் ஜாமீன் கோரிய வழக்கு ராம்நகர் நீதிமன்றத்தில் 3-ந் தேதி விசாரணைக்கு வந்தது. நீதிமன்றமோ விசாரணையை 6-ந் தேதிக்கு ஒத்திவைத்து சஸ்பென்சை நீட்டித்துள்ளது. நிச்சயம் ஜாமீன் கிடைக்கும். சிறையிலிருந்து நேரடியாக ஆசி ரமத்துக்கு போய்விடலாம் என்று கருதுகிறாராம் நித்யானந்தா.

1 comment:

  1. no Jaamin for him..He deserves imprisonment and good punishment also. Like Kasab's case let them do it fast.

    ReplyDelete