Thursday, May 6, 2010

செல்ஃபோனில் சிக்கிய கர்நாடக மந்திரி! கோட்டையில் சிக்கிய தமிழக மந்திரி!


shockan.blogspot.com
நித்யானந்தாவின் செக்ஸ் வீடியோ அலை ஓய்வதற்குள் கர்நாடக மாநிலத்தில் மற்றொரு செக்ஸ் வீடியோ, கொலை மிரட்டல்கள் அடங்கிய ஆடியோவுடன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் கர்நாடகா என்கிற தினசரியும், ஸ்வர்ணா என்கிற டி.வி.யும் வெளியிட்ட 40 செகண்ட் வீடியோவில் கர்நாடகாவின் உணவு அமைச்சர், ஹரதாலு ஹாலப்பா தனது ஜட்டியை இழுத்து மாட்டிக்கொண்டிருக்க அவருக்குப் பக்கத்தில் ஒரு பெண் தலைவிரி கோலத்தில் அழுது கொண்டிருக்கிறார்.

அந்தப் பெண்ணின் பெயர் சந்திரவதி. இவரது கணவர் வெங்கடேச மூர்த்தி. கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து கர்நாடக மாநில சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யான அஜய்குமார் சிங்கிடம் பரபரப்பான புகாரை தந்துள்ளார்கள்.


""கடந்த நவம்பர் 27-ந் தேதி மாலை ஷிமோகாவிலுள்ள இன்ஸ்பெக்ஷன் பங்களாவிலிருந்து, பால்யகால நண்பன், பைனான்சியர் என்ற அடிப்படையில் என் வீட்டிற்கு வந்தார் ஹாலப்பா. இரவு என் வீட்டில் தங்கினார். திடீரென்று என்னை டெலிபோனில் அழைத்து தனக்கு உடல்நிலை சரியில்லை, சர்க்கரை வியாதிக்கான மாத்திரையை கொண்டுவரவில்லை அதை இன்ஸ்பெக்ஷன் பங்களாவில் இருந்து எடுத்து வா என என்னை அனுப்பிவைத்தார். நான் திரும்பி வந்து பார்க்கும் போது அவர் என் மனைவியிடம் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டிருந்தார். எனது மனைவி அழுதுகொண்டிருந்தார். ஹாலப்பா அரை நிர்வாண கோலத்தில் நிற்பதையும், என் மனைவியின் கதறலையும் கண்டு அதிர்ச்சியடைந்தேன். நானே செல்ஃபோனில் அந்தக் கோலத்தைப் பதிவு செய்தேன்.

"ஏண்டா இப்படி நடந்துகொண்டாய்?' என ஹாலப்பாவை கடுங்கோபத்துடன் தாக்கினேன். அவர் மன்னிப்பு கேட்டார். அதை தொடர்ந்து எனது மனைவி தற்கொலைக்கு முயன்றாள். நான் அவளை காப்பாற்றியபோது படுகாய மடைந்தாள். அதையும் நான் செல்ஃபோனில் பதிவு செய்தேன்.

நட்புக்காக எதையும் நான் வெளியில் சொல்லாமல் இருந்தேன். கடந்த பிப்ரவரி மாதம் ஹாலப்பா நான் செல்ஃபோனில் செய்த பதிவுகளை கேட்டு நேரடியாகவே மிரட்டினார். அந்த மிரட்டலையும் பதிவு செய்தேன்.

மார்ச் மாதம் பெங்க ளூரில் என்னை கடத்திக் கொண்டு சென்ற அமைச்சரின் உதவியாளர் கிரி, செல்ஃபோன் பதிவுகளை கொடுக்கும்படி கேட்டு மிரட்டினார். கடந்த 30-ந் தேதி எனது வீட்டுக்கு வந்த ஹாலப்பாவின் ரவுடிகள், எனது குழந்தைகளை கொலை செய்யப்போவதாக கொடூர மாக மிரட்டினார்கள். அத னால் இனி பொறுக்க முடி யாது என பத்திரிகையாளர் கள் உதவியுடன் புகார் செய்கிறோம்'' என்று புகாரில் தெரிவித்திருக்கிறார்கள்.

நம்மிடம் பேசிய சந்திர வதியிடமும் வெங்கடேச மூர்த்தியிடமும் ""ஏன் 6 மாதம் கழித்து புகார் செய்கிறீர்கள்?'' என கேட்டோம்.

""ஆரம்பத்தில் எதற்கு வம்பு விட்டுவிடலாம் என நினைத்தோம். தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வரவே, உயிருக்குப் பயந்து புகார் செய்தோம்'' என்றவர்களிடம் ""6 மாதத்திற்கு முன்பு நடந்த கற் பழிப்புக்கு ஆதாரம் இருக்கிறதா?'' என கேட்டோம்.

""அன்று நான் அணிந் திருந்த உள்ளாடைகளை பத்திரமாக வைத்திருக்கிறேன்'' என மோனிகா லெவின்ஸ்கி பாணியில் பதில் சொன்னார் சந்திரவதி.

இந்த வீடியோ வெளி யானதும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆர்ப்பாட்டம், மறியல் என களத்தில் குதித்து விட்டது. ஹாலப்பாவும் எடியூரப்பாவும் குரு-சிஷ்யர் கள். எடியூரப்பா ஹாலப் பாவை காப்பாற்றிவிடுவார் என்பதால் ""எடியூரப்பாவே ராஜினாமா செய்'' என தீவிர மானதால் ஹாலப்பாவின் மந்திரி பதவியை பறித்து விட்டார் எடி யூரப்பா.

பாலியல் குற்றச்சாட்டுக்காக பதவி பறிப்பு பற்றி ஹாலப்பா விசுவாசி களிடம் கேட்ட பொழுது... அவர் களின் பதில் வேறு விதமாக இருந்தது. ""வெங்க டேசமூர்த்தி ஹாலப்பாவுக்கு மட்டும் நண்பனல்ல. பங்கா ரப்பா பா.ஜ.க.விற்கு வந்த பொழுது அவரது உறவினரான ஹாலப்பா, பேலூர் தொகுதி எம்.எல்.ஏ.வான கோபால கிருஷ்ணப்பா ஆகியோரும் பா.ஜ.க.வுக்கு வந்தனர். பங்காரப்பா காங்கிரசுக்கு திரும்பப் போன போது இவர்கள் பா.ஜ.க.விலேயே இருந்தார்கள். அந்த பங்காரப்பாவை எதிர்த்து நின்று சட்டமன்ற தேர்தலில் அவரைத் தோற் கடித்ததால் எடியூரப்பாவின் அன்புக்குரியவராகி அமைச்ச ரானார் ஹாலப்பா.

அன்று முதல் ஹாலப்பாவை எப்படியாவது மந்திரி பதவியிலிருந்து இறக்கி, தான் மந்திரியாக கோபால கிருஷ்ணப்பா தொடர்ந்து முயன்றுவருகிறார். அவரும் வெங்கடேசமூர்த்தியின் நண்பர்தான். புகார் கொடுத்திருக்கும் சந்திரவதி அவரது உண்மையான மனைவியே அல்ல'' என சொல்கிறார்கள்.

கர்நாடக போலீஸ் தரப்பிடம் கேட்டபோது... ""ஹாலப்பா, வெங்கடேச மூர்த்தியின் வீட்டுக்குச் சென்றதும், அங்கே அரை நிர்வாணமாக நின்றதும் வீடியோவில் பதிவாகி யுள்ளது'' என சொல்லும் காவல்துறை அதிகாரிகள், ""6 மாதமாக புகார் தராமல் ஏன் இழுத்தடித்தார்கள் என்பதற்கு பின்னணி யில் சில பிளாக்மெயில் தந்திரங்களும் இருக்கலாம். அவை எல்லாம் எங்கள் விசாரணையில் தெளிவாகத் தெரிய வரும்'' என்கிறார்கள்.

மந்திரியை சிக்க வைத்த வீடியோ, கர்நாடகாவை மட்டுமின்றி அண்டை மாநில அரசியல்வாதிகளையும் அலற வைத்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில்.

நடுத்தர வயதுள்ள அமைச்சர் ஒருவர், கோட்டையில் பெண் காவலராக இருக்கும் இளம்பெண்ணை மயக்கி தனது அறையிலேயே பட்டப் பகலில் பயன்படுத்திக்கொண்டார் என்று குற்றச்சாட்டு போகவேண்டிய இடத்துக்குப் போய் கடைசியில் அமைச்சர் கண்டிக்கப்பட்டார் என்று கோட்டை வட்டாரங்கள் உறுதியாகச் சொல்கின்றன.

இதேபோல் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் பெண் காவலர் ஒருவரை தனது குடியிருப்புக்கே வரவழைத்து விளையாடியதையடுத்து அந்தப் பெண் காவலர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். அந்தக் காவலரை எப்படியாவது சென்னைக்கே கொண்டுவந்து விட இன்னமும் அந்தத் தலைவர் தீவிரமாக முயற்சித்து வருகிறார்.

கர்நாடகா மந்திரி சிக்கிக்கொண்டார். இவர்கள் என்று சிக்கப்போகிறார்களோ?

1 comment:

  1. ippodhellam Dharmathirku nalla kaalam. Adharmam seivoruku ketta kaalam. Athai manadhil kondaal podhum. Dharamthirke jayam!

    ReplyDelete