Thursday, May 6, 2010

திரைக்கூத்து!

shockan.blogspot.com
திரைக்கூத்து!





சம்பளம் கேட்டால் பெயர் இருட்டடிப்பு!


"அபியும் நானும்' படத்தில் பிச்சைக்காரனாக வந்து அற்புதமாக நடித்த குமரவேலுவும், ராதிகாவின் சீரியல்களில் முன்பு பணிபுரிந்த ரூபனும் சேர்ந்து ‘"கற்றது களவு' படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார்கள். ஆனால் அதற்கு சம்பளம் வந்து சேரவில்லை. சம்பளத்தை கேட்டுப்போக... "உள்ளதும் போச்சு' கதையாக விளம்பரங்களில் இவர்களின் பெயர்களை இருட்டடிப்பு செய்து வருகிறது தயாரிப்பு தரப்பு.




விஷாலை மடக்கிய கடன்காரர்!


"தீராத விளையாட்டுப் பிள்ளை' படத்திற்காக நெல்லையைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரிடம் ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தாராம் விஷால். அதில் ஒரு குறிப்பிட்ட தொகையை விஷால் செட்டில் பண்ணவில்லை. இதையடுத்து கடன் கொடுத்தவர் விஷாலை தொடர்பு கொள்ள முயன்ற போதும் விஷால் லைனுக்கு வரவில்லை. இந்நிலையில் தென்காசி பகுதியில் "அவன் இவன்' படப்பிடிப்பிற்காக விஷால் வந்திருப்பதையறிந்து அங்கேயே போய் மடக்கியிருக்கிறார்கள். அப்புறம் பேசி முடித்து பிரச்சினை சரி செய்யப்பட்டதாம்.




தயாரிப்பு அதிருப்தி!


"கோலங்கள்' திருச்செல்வம் கதாநாயகனாக நடிக்க... "மெட்டி ஒலி' போஸ் வெங்கட் இயக்கத்தில் ‘"முத்துக்குமாரின் காதல்' என்கிற படம் ஆரம்பிக்கப் பட்டது. ஆனால் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே பெருந்தொகை ஒன்றை செலவு கணக்கில் காட்ட... தயாரிப்பு தரப்பு அதிருப்தியாகிவிட்டது. இதனால் படத்திட்டம் படுத்துவிட்டது. சின்னத்திரை பிரபலங்களின் இந்த பெரிய திரை பிரவேசம் கலைந்து போய்விட்டது.




விஜய்க்கு விபூதி பார்சல்!


"காவல்காரன்' படப்பிடிப்பை திருவிடை மருதூர் மகாலிங்கம் கோவிலில் சாமி கும்பிட்டு தொடங்கியதையும், கோயிலுக்குள் வந்த விஜய்... குருக்கள் கொடுத்த விபூதியை வாங்க மறுத்ததால் இந்து மக்கள் கட்சி விஜய்க்கு கண்டனம் தெரிவித்ததையும் ஏற்கனவே கூவியிருந்தேன். விஜய் ரெஸ்பான்ஸ் பண்ணாததால் கட்சியின் செய லாளர் அண்ணா துரை தலைமையில் விஜய்யின் "சுறா' படம் வெளியான திரையரங்குகளில் ரசிகர்களுக்கு விபூதி தரும் போராட்டத்தை நடத்த முடிவு செய்தனர். ஆனால் பல்லடத்தில் நடக்கவிருந்த இந்த போராட்டத்திற்கு போலீஸ் அனு மதிக்காததால் விஜய்யை கண்டித்து நோட்டீஸ் விநியோகித்ததோடு, கூட்டமாக அஞ்சல் அலுவலகம் சென்ற கட்சியினர் ஏகப்பட்ட விபூதி பொட்ட லங்களை தனித்தனியாக விஜய்யின் வீட்டுக்கு அனுப்பிவைத்திருக்கிறார்கள்.




வருகிறார் ராசாமதி!


பெரிய மன்னர் நினைப்பில் மக்களை ஆட்டிப் படைக்கும் நல்ல தாதாக்களும் உண்டு, கெட்ட தாதாக்களும் உண்டு. அதன் அடிப்படையில் முருகைய்யா இயக்கும் படம் "குறுநில மன்னன்' இந்தப் படத்தின் மூலம் ஒரு வாரிசு சினிமாவுக்கு வருகிறது. கவிஞர் அறிவுமதியின் மகன் ராசாமதி இந்தப் படத்தின் கேமராமேன்.




போட்டியில் வென்ற த்ரிஷா!




கடைசியில் த்ரிஷா ஜெயித்து விட்டார். உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் கமல் நடிக்கும் படத்தின் கதாநாயகி வாய்ப்பைப் பெற த்ரிஷா- நயன்தாரா- தமன்னா ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுவதை ஏற்கனவே கூவியிருந்தேன். இந்தப் போட்டியில்தான் த்ரிஷாவுக்கு வெற்றி கிடைச்சிருக்காம்.

அப்படியா?



கடலின் ராட்ஸச உயிரினப் படத்தை வாங்கிய பெரிய இடம்... படத்தைப் பார்த்துவிட்டு... "ஒரு பெரும் தொகையை ஹீரோ தன் சம்பளத்தில் இருந்து குறைத்துக் கொள்ள வேண்டும்' என சொல்லிவிட்டதாம்.

No comments:

Post a Comment