Monday, May 10, 2010

இந்தியாவில் வாடகை தாய் பெருக்கம் ; வட மாநில பெண்களை நாடும் வெளி நாட்டு தம்பதியினர்


shockan.blogspot.com

இந்தியாவில் வாடகை தாய் தொழிலில் இறங்கும் பெண்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். வறுமை மற்றும் குடும்ப சூழல் காரணமாகவும், மன நிறைவோடு ஈடுபடுவதால் , புதியதொரு மகிழ்ச்சி கிடைப்பதாகவும் இந்த வாடகை தாய் பெண்கள் தெரிவிக்கின்றனர். உலக அளவில் இந்தியாவில் தான் மலிவான விலையில் இந்த விஷயம் முடிக்கப்பட்டு விடுகிறதாம்.

வெளிநாடுகளில் சில தம்பதியினர் உடல் நலக்கோளாறு மற்றும் குழந்தை பெற இயலாதவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற முடிவு செய்கின்றனர். இந்தியாவின் வட மாநிலங்களில் இதற்கான ஆஸ்பத்திரிகளில் ரூ .20 லட்சம் வரை பெறப்படுகிறது. வாடகை தாய் அமர்த்துதல், மருத்துவ செலவு , டெலிவரி மற்றும் சட்டத்திற்குட்பட்ட விஷயத்திற்கான செலவு ஆகியவற்றை அந்த மருத்துவமனையே பார்த்துக்கொள்ளும். வாடகை தாய்க்கு ரூ . 80 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை வழங்கப்படுகிறது. வெளிநாட்டினர் கரு முட்டை வழங்கினால் போதும், பத்து மாதத்தில் குவா., குவா., ரெடி.

சிரமமாக தெரியவில்லை : இந்த விஷயம் தொடர்பாக டில்லியை சேர்ந்த நீலம் சவுகான் என்ற வாடகை தாய் கூறுகையில் ; தனது குடும்ப வறுமை காரணமாக வாடகைக்கு குழந்தை பெற்று கொடுக்கிறோம் . இது ஒன்றும் எனக்கு பெரும் சிரமமாக தெரியவில்லை என்கிறார் கூலாக. இப்போது 5 வது முறையாக தாயாகியிருக்கிறாராம் இவர். இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் 150 குழந்தையாவது வாடகைக்கு பிறந்து விடுகிறது என ஒரு புள்ளி விவர அறிக்கை தெரிவிக்கிறது.

என்ன பதில் சொல்லப்போகிறது பெண்கள் நல அமைப்பு : நாங்கள் என்ன பிள்ளைகள் பெற்று கொடுக்கும் இயந்திரமா என பெண்களே ஆவேசமாக கேட்பது உண்டு. இது உண்மையாகி இருக்கிறது. பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என்று குரல் ஒலிக்கும் நேரத்தில் வாடகை தாய் என இயந்திரமாக மாறி வருவதற்கு பெண்கள் நல அமைப்பினர் என்ன பதில் சொல்லப்போகிறது என்பது தற்போதைய கேள்வி.

No comments:

Post a Comment