Tuesday, May 11, 2010

தமிழுக்கு வரும் காஸ்ட்லி ஒளிப்பதிவாளர்


shockan.blogspot.com
ந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன். சமீபத்தில் வெளியான மை நேம் இஸ் கான் படத்துக்கும் இவர்தான் ஒளிப்பதிவு செய்திருந்தார். தமிழரென்றாலும் இவர் ஒரு தமிழ்ப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்து பல வருடங்களாகிறது. அந்தக் குறை விரைவில் தீரப் போகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் சூர்யாவை வைத்து இயக்கும் படத்துக்கு ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். முருகதாஸின் இந்தி க‌ஜினிக்கு ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்திருந்தார். அப்போது முருகதாஸின் அணுகுமுறை ரவி.கே.சந்திரனுக்கும், இவரது வேலை முருகதாஸுக்கும் பரஸ்பரம் பிடித்துப் போக தனது புதிய படத்துக்கு ரவி.கே.சந்திரனையே ஒப்பந்தம் செய்துள்ளார்.

ஹா‌ரிஸ் ஜெயரா‌ஜ் இசையில் தயாராகும் இந்தப் படத்தின் முதல் ஷெட்யூ‌ல் சீனாவில் நடக்கிறது. சூர்யா ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்.

No comments:

Post a Comment