Monday, May 10, 2010

பிரதமர் அலுவலகத்தின் ஒப்புதலுடனே அழகிரி மாலத்தீவு பயணம்


shockan.blogspot.com
பிரதமர் அலுவலகத்தில் ஒப்புதல் பெற்றுதான் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மாலத்தீவுக்கு பயணம் மேற்கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, அவைக்கு வராமல் அழகிரி வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டது குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விமர்சனம் செய்தனர். அமைச்சரவைக் கூட்டத்திலும் அழகிரி கலந்துகொள்வதில்லை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் குற்றம்சாட்டியிருந்தார்.

இதனிடையே, மாலத்தீவு செல்வதற்கு அழகிரி பிரதமர் அலுலகத்தில் முறைப்படி அனுமதி பெற்றாரா என்பது குறித்து தெரிவிக்கும்படி தில்லியைச் சேர்ந்த சுபாஷ் அகர்வால் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இதற்கு பிரதமர் அலுவலகம் சார்பில் அளிக்கப்பட விளக்கத்தில் மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 17-ம் தேதி முதல் ஏப்ரல் 28 வரை 10 நாள் மாலத்தீவு பயணத்திற்கு அழகிரி, ஏப்ரல் 12-ம் தேதி பிரதமர் அலுவலத்தில் அனுமதி பெற்றார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. http://ww1.4tamilmedia.com/index.php/2009-04-19-22-56-08/2009-04-19-23-05-09/6442-alakiri-went-to-malaidivu

    ReplyDelete