Saturday, May 8, 2010

வைரமுத்துவை மிஞ்சும் கார்க்கி..


shockan.blogspot.com
வைரமுத்துவின் மகன் கார்க்கி வைரமுத்து, சமீபத்திய படங்களின் பாடலாசிரியராகி உள்ளார். பேராசிரியராக இருக்கும் கார்க்கியின் சமீபத்திய சாதனை, சிங்கப்பூர் அரசு முதன் முதலில் தயாரித்த குருஷத்திரம் திரைப்படத்தில், ஒரே ஒரு பாடல் மட்டுமே இடம்பெற்றதுள்ளது. அந்தப் பாடலை எழுதும் வாய்ப்பு கார்க்கிக்கு கிடைத்துள்ளது. படத்தின் நடுவில் வரும் நாட்டிய பாடலான தீ....தீராதே என்று தொடங்கிய பாடலை எழுதி கொடுத்துள்ளார். படம் ரிலிசாகி 3 வாரத்திற்கு மேல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தில் பணியாற்றிய அனைவரும் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்தவர்கள். இதில் பணியாற்றிய ஒரே இந்தியர் கார்க்கி மட்டும் தான்.
தமிழில் சங்கம் இயக்கி வரும் படத்தில் 2 பாடல்களையும், கே.வி.ஆனந்த் இயக்கும் 'கோ' படத்திற்காக மிக அருமையான பாடலையும் சமீபத்தில் எழுதி கொடுத்துள்ளார். இதைத் தவிர பிரபு தேவா இயக்கும் "இச்" படத்திலும், ஹாரிஷ் ஜெயராஜ் இசையில் ஒரு பாடலையும் எழுதி முடித்துள்ளார். கார்க்கி பற்றிய இன்னொரு சுவாரஸ்யமான செய்தி, தன்னுடைய ஆண் குழந்தைக்கு "ஹைகூ" என்று பெயரிட்டுள்ளார். சர்ட்டிஃபிகேட் அனைத்திலும் ஹைகூ கார்க்கி என்றே பதிவு செய்துள்ளார். வித்யாசமான ரசனை என்றே சொல்லலாம்!!

1 comment:

  1. It is not a Singapore Government movie. It is from a sinagpore tamil director Thavamani.

    ReplyDelete