Monday, May 10, 2010

ஏர் ஆசியாவில் கூடுதல் எடை சாமான்களுக்கு சலுகை


shockan.blogspot.com

லிவுக்கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியா முன்கூட்டியே கணினி மூலமாக பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 50 விழுக்காடுவரை கட்டணக்கழிவு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. 20 கிலோவில் இருந்து 30 கிலோ வரை எடுத்துச் செல்ல விரும்புகின்றவர்களுக்கு இந்த சிறப்பு சலுகை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

20 கிலோ எடை கொண்டி சாமான்கள் ஒரே பெட்டிக்குள் இருக்க வேண்டும். ஆனால், சிறிய பெட்டியாக இருந்தால் முதல் 15 கிலோவுக்கு 30 ரிங்கிட்டும் அடுத்த ஒவ்வொரு கிலோவுக்கும் 20 ரிங்கிட்டும் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"மிகையாக கொண்டு செல்லும் சாமான்களின் எடைக்காக வாடிக்கையாளர்கள் பெரிய அளவில் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் 6 லட்சத்து 60 ஆயிரம் பயணிகள் 9 கோடியே 10 லட்சம் வெள்ளியை மிகை எடைக்கான கூடுதல் கட்டணமாக கொடுத்திருக்கிறார்கள்" என்று பொருட்கள் பிரிவுத் தலைவர் ரபிஸா அம்ரன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment