Saturday, May 8, 2010

சொல் பேச்சு கேக்காத சுந்தரியே...


தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி நடிகைகளுள் ஒருவர் தமன்னா. முன்னணி ஹீரோக்கள், பெரிய பட்ஜெட் படங்கள் என பிஸியாக இருக்கிறார்.


"தில்லாலங்கடி' தற்போது முடிந்துள்ள படம்.


"தில்லாலங்கடி' எப்படி வந்திருக்கிறது?


"தில்லாலங்கடி' நிச்சயம் எனக்கு சினிமாவில் மைல்கல். கதைக்கேற்ற பாத்திரம். பாடல், இசை என எல்லாமும் புதிதாக இருக்கும். அதில் வருகிற ""சொல் பேச்சு கேக்காத சுந்தரியே...'' பாடல் நிச்சயம் என் சினிமா திறமைக்கு உதாரணமாக இருக்கும். ஒரே பாட்டுக்கு ஐந்து விதமான தமன்னாவை நீங்கள் பார்க்கலாம்.


வழக்கமான கிராபிக்ஸ்தானே அப்படி அதில் என்ன இருக்கு?


எனக்குத் தெரிந்த இந்திய சினிமாவில் ஒரு பாடலுக்காக இந்த அளவுக்கு யாரும் சிரமப்பட்டு இருக்க மாட்டார்கள். படத்தில் என்னை அறியாமல் ஜெயம் ரவியை காதலிக்க ஆரம்பித்து விடுவேன். அந்த சமயத்தில் வரும் இந்த பாடலில், என் மனசாட்சி ஐந்து விதமாக பிரிந்து போய் ""ரவியை காதலிக்காதேன்னு'' பிடிவாதம் பிடிக்கும். அந்த பக்கம் 10 ரவி வித விதமாக ஆடிக்கிட்டு இருப்பார்கள். இந்த காட்சிகள் எல்லாம் ஒரே ஷாட். ஐந்து தமன்னா, 10 ரவி. வெஸ்ட்ர்ன், டிஸ்கோ என நடனத்திலும் கலக்கியிருக்கோம். பாடல் முழுவது கலர் ஃபுல்லா வந்திருக்கிறது. குறும்பும், ரொமான்ஸýம் கலந்த இந்த பாடல் சினிமாவுக்கு புதிது.


எண்ணிக்கையில் கவனம் செலுத்தும் அளவுக்கு

கதைகளில் கவனம் இல்லாததுபோல் தெரிகிறதே?


மீடியாக்கள் எப்படி இதையெல்லாம் கண்டுபிடித்து சொல்கிறதோ தெரியவில்லை. கதை நன்றாக இருந்தால்தான் ஓ.கே. சொல்கிறேன். கதைகளை கேட்க மீடியேட்டர்கள் யாரையும் நான் வைத்துக் கொள்வதில்லை. நானே கேட்கிறேன். அப்படி இருக்கும் போது கவனம் இல்லாமல் எப்படி இருக்கும். எண்ணிக்கை மட்டுமே முக்கியமில்லை. அப்படி இருந்தால் இந்நேரம் 50 படங்களை என்னால் தாண்டியிருக்க முடியும்.


கிளாமரில் அசின், திரிஷாவையெல்லாம் தாண்டி

விட்டீர்கள், பாலிவுட் சினிமாவை குறி வைத்து விட்டீர்களா?


இங்கே நான் மட்டும்தான் கிளாமர் செய்வது போல் கேட்கிறார்கள். என்னை விட கிளாமரில் எத்தனையோ பேர் கலக்கி வருகிறார்கள். அவர்கள் எல்லாம் பாலிவுட்க்கு போய் விட்டார்களா என்ன? இப்போதுதான் 20 வயதை தொடப் போகிறேன். சினிமா எனக்கு இன்னும் புதிதாகத்தான் தெரிகிறது. ""இவ்வளவு சின்ன வயதில் பெரிய நடிகையாக ஆகிவிட்டாய்'' என நண்பர்கள் கூறுகிறார்கள். அப்படி ஒன்றும் எனக்குத் தெரியவில்லை. ஆனால் பாலிவுட் வாய்ப்பு வந்தால் மிஸ் பண்ணுகிற அளவுக்கு நான் ஒன்றும் முட்டாள் இல்லை.


சினிமா விழாக்களில் அடுத்த சிம்ரன் நீங்கள்தான் என்கிறார்கள்?


சிம்ரன் எனக்கு மிகவும் பிடித்தமானவர். அவருடன் ஒப்பிட்டுப் பார்ப்பதே நல்ல விஷயம். என் வயதுக்கான கேரக்டர்களை செய்து வருகிறேன். இவ்வளவு சின்ன வயதில் என்ன என்ன கேரக்டர்கள் செய்ய முடியுமோ அதைத்தான் செய்கிறேன். அதுக்காக இந்த வயதில் நாலு குழந்தைகளுக்கு அம்மாவாக என்னால் நடிக்க முடியாது. சிம்ரன் கேரக்டரிலும், கிளாமரிலும் அசத்தியிருக்கிறார்.


அவரின் திறமை தனித்துவமானது. சிம்ரன் போல் வந்தால் நல்லதுதானே. "தில்லாலங்கடி'யில் கிளாமரில் அசத்தியிருக்கிறேன். கேரக்டராகவும் அசத்தியிருக்கிறேன். உங்களுக்கு மிகவும் பிடித்த தமன்னாவை இதில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment